Newsu Tamil
இந்திய செய்திகள் தமிழ்நாடு செய்திகள் பணம்

21-வது நாளாக உயர்வு… சதத்தை நெருங்கும் பெட்ரோல், டீசல் விலை

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கானோர் வேலை இழந்து உள்ளனர். இந்த சூழலில் நோய் பற்றியும் வயிற்றுப்பிழைப்பு, வறுமை குறித்து மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சத்தமே இல்லாமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய பாஜக அரசின் துணையுடன் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

கடந்த 21 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்து உள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.83.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.77/61-க்கு விற்பனை செய்யப்படுகிறது.