Newsu Tamil
crime இந்திய செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

உ.பி-யில் பயங்கரம்… பண்ணையில் எருமை புகுந்ததால் சிறுவன் படுகொலை

உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் உள்ள சுந்துலி பகுதியில் சாது சிங் மற்றும் தர்மேந்திர சிங் சகோதரர்களுக்கு சொந்தமாக பண்ணை உள்ளது. அப்பகுதியில் குல்தீப் யாதவ் என்ற 15 வயது சிறுவன் தனது எருமை ஒன்றை மேய்த்து வந்துள்ளான்.

அங்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை பார்த்தவுடன் எருமையை விட்டுவிட்டு விளையாட சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த எருமை பண்ணைக்குள் நுழைந்துள்ளது. அதைக்கண்ட பண்ணை உரிமையாளர்கள் எருமையை பிடித்து வைத்துக் கொண்டனர்.

பின்னர் சிறுவனை அழைத்து எருமையை திருப்பித் தர மறுத்துள்ளனர். ஆனால், எருமையை கேட்டு சிறுவன் குல்தீப் விடாபிடியாக நின்றுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த சாது சிங், தர்மேந்திர சிங் மற்றும் அவரது மகன் ஆகிய 3 பேரும் சேர்ந்து கட்டையால் குல்தீப்பை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், குல்தீப் துடிதுடித்து உயிரிழந்தான்.

3 நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. இதுவரை எந்த ஊடகத்திலும் பதிவாகவில்லை.