Newsu Tamil
Comedy அரசியல் தமிழ்நாடு செய்திகள்

கெட்டப் மாற்றிய ஸ்டாலின்! புது விக்குக்கு வாழ்த்து தெரிவித்து டிரெண்டாக்கும் நெட்டிசன்கள்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடினார். இந்த தகவலுடன் புகைப்படங்களும் தி.மு.க-வின் பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டு இருந்தது.

அதில் மு.க.ஸ்டாலின் தோற்றத்தில் மாற்றம் தெரிந்தது. அதாவது, அவரது தலையில் விக் வைக்கப்பட்டிருந்தது. இதை வைத்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி செய்து வருகிறார்கள். தற்போது ட்விட்டரில் #புதுவிக்குக்குவாழ்த்துக்கள் என்ற ஹேஷ்டேக்கில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அது சென்னை டிரெண்டிங்கில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.