Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மறைக்கப்பட்டவை

பல உயிர்களை காத்த 22 வயது ஆம்புலன்ஸ் ஊழியர் கணேஷை கொன்ற கொரோனா

கோவை: திண்டுக்கலை சேர்ந்த கணேஷ் வயது (22). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து 108 ஆம்புலன்சில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

இவர் கடந்த 15ஆம் தேதி சொந்த ஊரான திண்டுக்கலுக்கு சென்று திரும்பியுள்ளார். திருப்பூர் வந்தவுடன் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் கடந்த 18ஆம் தேதி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் கணேஷ் உயிரிழந்தார்.

தனது உயிரை பொருட்படுத்தாமல் பிறர் உயிரை காப்பாற்ற உழைத்த கணேஷ் 22 வயதில் கொரோனாவால் உயிரிழந்தது பலரை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.