Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

ஐ.நா பொதுச் சேவை தினம் – இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஒரே ஒரு அமைச்சர் .!

ஐக்கிய நாடுகள் பொதுச்சேவை தினம் – (United Nations Public Service Day) ஜூன் 23

உலகம் முழுவதும் அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். இந்த சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது.

இவ்வாண்டு ஐ.நா பொது சேவை நாளில் உலகெங்கிலும் கோவிட் -19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளில் பணியாற்றிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அர்ப்பணிப்பு  மிக்க சேவைகளை நினைத்து போற்றுவோம் என்று ஐக்கியநாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.

ஐ.நா.வின் பொது சேவை தினத்திற்கு சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்டுள்ளவர் ஷைலஜா அவர்கள் மட்டுமே.

இன்னும் இந்நிகழ்ச்சிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. ஐ.நா பொதுச் சேவை தினமான ஜூன் 23 அன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.