Newsu Tamil
இந்திய செய்திகள் உலக செய்திகள்

40 சீனா இராணுவ வீரர்கள் பலி என்ற செய்தி உண்மையா? என்ன சொல்கிறது சீனா?

இந்திய சீனா எல்லைப்பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இருநாட்டு இராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய இராணுவ வீரர்கள் வீர்மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இதனை அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் சோ மறுத்துள்ளார்.

மேலும், இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக சீன அரசு மற்றும் ஊடங்கள் இந்த விவகாரத்தில் இந்திய ராணுவம் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்த நிலையில் தற்போது சீன தரப்பில் உயிரிழப்பு குறித்தும் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை வீரர்கள் உயிரிழந்தனர் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் சீன அரசு வெளியிடவில்லை.