Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள் மறைக்கப்பட்டவை

எந்த மதமானாலும் பரவாயில்ல… கொரோனா உடல்களை அடக்கும் இஸ்லாமிய இயக்கங்கள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கொரானாவினால் இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்யும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் அரசுகள் தவித்து வரும் அதே வேளையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களையும் அடக்கம் செய்ய முடியாமல் கையறுநிலையில் உள்ளனர். டெல்லி போன்ற நகரங்களில் இறந்த உடல்கள் பாலங்களுக்கு அடியிலும், கால்வாய்களிலும் தூக்கி வீசப்படும் அவல நிலை உள்ளது.இந்த நிலையில், தமிழ்நாட்டில் தற்போது உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள், நண்பர்களே அச்சம் காரணமாக அடக்கம் செய்ய முன்வருவதில்லை. சில நேரங்களில் கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைத்திருப்பதால் அவர்களால் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது.இந்த நிலையில். கொரோனா தொற்றினால் இறந்தவர்கள் எந்த சாதி, மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் உடலை கண்ணியமான முறையில் அடக்கம் செய்து வருகின்றனர் பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தன்னார்வலர்கள்.உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இதுவரை 100-க்கும் மேற்பட்டவர்களை இவர்கள் அடக்கம் செய்துள்ளனர்.கொரோனா அறிகுறி இருந்தாலே அவரை ஒதுக்கி வைக்கும் இக்காலத்தில், கொரோனாவுக்கு சிகிச்சையளித்து நோய் தாக்கி இறந்த மருத்துவரை அடக்க எதிர்ப்பு தெரிவித்த மக்களுக்கு மத்தியில் இந்த அமைப்பினரின் பணிகள் நிச்சயம் மகத்தானது.இவர்கள் தான் சென்னை வெள்ளத்தின் போதும், வர்தா புயலின் போதும், கஜா புயலின் போதும் உயிரை பணயம் வைத்து உணவு வழங்கி, அத்தியாவசிய பொருட்களை வாரி இறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க பாடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.