Newsu Tamil
தமிழ்நாடு செய்திகள் மக்கள்

3 குழந்தைகளை விட்டுப் பிரிந்த 33 வயது தாய்… கொரோனாவால் நிர்கதியான குடும்பம்

கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ள ஒரு பேஸ்புக் பத்திரிகையாளரின் பதிவு.

மருத்துவமனையில் என்னுடைய 3 வது நாள் காலையில் எதோ திடீர் என்று ஓர் பரபரப்பு. வெளியில் வந்து விசாரிக்கும் பொது சக நோயாளி ஒருவரின் மனைவி இறந்துவிட்டதாக கூறினார்கள். யார் என்று கேட்டு தெரிந்து அவரிடம் போய் பேசினேன்… ஏழ்மையான தோற்றம் என்னை மேலும் கவலையடைய வைத்தது.

எனது 33வயதான மனைவி திடீரென்று காலையில் மரணித்தார் என்றும், 3 குழந்தைகள் உள்ளதாகவும் அதில் கடைசி குழந்தைக்கு 8 மாதங்கள் என்றும் கூறினர். என்ன செய்வதென்றே தெரியவில்லை என்றும் கூறினார். 3 குழந்தைகளில் முதல் குழந்தைக்கு 5 வயது ஆகியும் பள்ளியில் சேர்க்கவில்லை என்றால். வறுமையே காரணம். யாரேனும் இவரின் பையனுக்கு கல்வி உதவி செய்ய முடியுமா.

இதோ இவரின் எண்:

பெயர் : கணபதி
தொலைபேசி எண் : 8939332724

பதிவை கடக்காமல் தயவுகூர்ந்து பகிருங்கள். என் நட்பு பட்டியலில் இல்லாத யாரோ ஒருவர் உங்கள் நட்பு பட்டியலில் இருப்பவர் உதவலாம்.

இந்த பிள்ளைக்கு கிடைக்கும் உதவி வைத்தே தொடர்ந்து இது போல பல குழந்தைகளை கண்டறிந்து தொடர்ந்து பதிவு செய்ய உதவ உதவியாய் இருக்கும்.

நீங்களே நேரடியாக பள்ளியில் செலுத்தலாம்… புத்தகம் உடை வாங்கி தரலாம்.