Newsu Tamil
Headlines அரசியல் சரியா? தவறா? தமிழ்நாடு செய்திகள்

தனக்கு கொரோனா தொற்று உள்ளதாக பரவிய செய்தி வதந்தி – அமைச்சர் விளக்கம் .!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பரவலாக செய்தி பகிரப்பட்டு வந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் “தனக்கு கொரோனா தொற்று உள்ளதாக பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி, நான் சில நாட்களாக காய்ச்சல் இருமலால் அவதிப்பட்டு வந்தேன், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து விட்டு தற்போது வீடு திரும்பி விட்டேன், மருத்துவர்கள் தன்னை தனிமைப்படுத்தி இருக்குமாறு அறிவுரை மட்டும் கூறினார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.

இருப்பினும் நான் வீட்டில் தனிமைப்படுத்த வில்லை எனவும், என்னுடைய பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றேன் எனவும், அமைச்சர் கூறியுள்ளார். இதன்மூலம் அமைச்சருக்கு கொரோனா பரவியதாக கூறப்பட்ட செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.