Newsu Tamil
sports

மிகவும் வித்தியாசமான 3டி என்ற புதிய வகை கிரிக்கெட் போட்டி அறிமுகம்

3டி என்ற புதிய வகை கிரிக்கெடை தென் ஆப்பிரிக்கா அறிமுகம் செய்துள்ளது. ஜூன் 27 அன்று சூப்பர்ஸ்போர்ட் பார்க்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் கிங்பிஷர்ஸ், காக்ஸ் ஈகிள்ஸ் என மூன்று அணிகள் விளையாட உள்ளன. ஏபி டி வில்லியர்ஸ், குயிண்டன் டி காக், ரபாடா ஆகிய மூவரும் இந்த அணிகளின் கேப்டன்களாக இருப்பார்கள்.

ஒரே நேரத்தில் 3 ஆணிகள் விளையாடும் இப்போட்டியில் மொத்தம் 36 ஓவர்கள் வீசப்படும். 8 வீரர்களை கொண்ட ஒரு அணி 12 ஓவர்களை விளையாடும். அது இரு 6 ஓவர்களாகப் பிரிக்கப்பட்டு முதல் ஆறு ஓவர்களில் ஒரு அணிக்கு எதிராக விளையாடி, மீதமுள்ள 6 ஓவர்களில் மற்றொரு எதிரணியுடன் விளையாட வேண்டும். இதனால் மூன்று அணிகளும் முதல் பாதியில் 18 ஓவர்கள் விளையாடியிருக்கும்.

முதல் பாதியில் அதிக ரன்கள் எடுத்த அணி 2-வது பாதியில் முதலில் விளையாடும். 7 பேட்ஸ்மேன்கள் பாதியிலேயே ஆட்டமிழந்துவிட்டால் 8-வதாக உள்ள வீரர் இரட்டைப் படையில் தான் ரன்கள் எடுக்க முடியும். முதல் பாதியிலேயே 7 பேட்ஸ்மேன்களும் ஆட்டமிழந்துவிட்டால் மீதமுள்ள பேட்ஸ்மேன் 2-வது பாதியில் தனது இன்னிங்ஸைத் தொடரலாம்.

12 ஓவர்களுக்கும் சேர்த்து ஒரு புதுப் பந்து பந்துவீச்சாளர்களுக்குத் தரப்படும். அதை இரு அணிகளுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

ஒரு பந்துவீச்சாளருக்கு அதிகபட்சமாக 3 ஓவர்கள் தரப்படும். 7-வது பேட்ஸ்மேனை வீழ்த்திவிட்டால் ஓவரைத் தொடர முடியாது. அந்த ஓவரில் மீதமுள்ள பந்துகளில் ரன் எடுக்கவில்லை எனக் கணக்கிடப்படும்.

அதிக ரன்கள் எடுத்தால் தங்கம், 2வது இடத்துக்கு வெள்ளி, 3வது இடத்துக்கு வெண்கலம் ஆகிய பரிசுகள் வழங்கப்படும். முதலிடம் சமன் ஆனால் சூப்பர் ஓவர் கொண்டு தங்கம் வழங்கப்படும். மூன்று அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்திருந்தால் மூன்று அணிகளுக்கும் தங்கப் பதக்கம் கிடைக்கும். 2வது இடத்துக்கு இந்த நிலை ஏற்பட்டால் வெள்ளிப் பதக்கம் பகிர்ந்தளிக்கப்படும்