Newsu Tamil
Media Critics உலக செய்திகள் மறைக்கப்பட்டவை

வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை தண்டனை குறித்து மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பாகுபாடு மற்றும் வெறுப்பு எதிர்ப்பு சட்டம் கூறுவது யாதெனில், எந்த ஒரு நபரும், எந்த வகையிலும், எது மூலமாகவும் பாகுபாடு மற்றும் வெறுப்புணர்வு தூண்டும் செயலை செய்தால் ஐந்து வருட காலத்திற்கு குறைவில்லாமல் சிறை தண்டனை விதிக்கப்படுவதோடு, 500,000 திர்ஹம்ஸிலிருந்து 1 மில்லியன் திரஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டு தண்டனைகளில் ஏதேனும் ஒன்று விதிக்கப்படும்.

கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் இனவெறி கருத்துக்களை பதிவிட்டதால் அமீரக பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேபோல் இஸ்லாம், புனித நபி, இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாமியர்களை துஷ்பிரயோகம் செய்வதற்காக ஏராளமான இந்திய வெளிநாட்டவர்கள் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெறுப்பு மற்றும் மதப் பாகுபாட்டை தூண்டிய பல இந்திய வெளிநாட்டவர்கள் இன்னும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நீண்ட காலமாக வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய அரபு பிரமுகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அமீரகம், ஓமன், கத்தார் நாடுகளிலுள்ள தூதரகங்கள் இதுபோல் சமூக ஊடக நடத்தை குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடுமையான பாகுபாடு சட்டங்கள் குறித்து இந்தியர்களுக்கு நினைவுபடுத்தி உள்ளனர். ஆனால் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், உள்ளூர் சட்டங்கள் மற்றும் உணர்வுகள் பற்றி நன்கு அறிந்த நீண்டகால குடியிருப்பாளர்களே சமூக ஊடகங்களில் இத்தகைய தவறான பதிவுகளை ஏன் வெளியிடுகிறார்கள்?

குறிப்பாக சில இந்திய செய்தி சேனல்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வை இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு பரப்புகின்றன. சில பிரபலமான சேனல்கள் இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து போலி கதைகளை உருவாக்கி செய்திகளை திசை திருப்புவது நாம் அனைவரும் அறிந்ததே. உதாரணமாக வைரஸை பரப்புவதற்காக சில முஸ்லிம்கள் பழங்களில் எச்சில் துப்புகிறார்கள் என்ற போலி செய்திகளை ஊடகக் கண்காணிப்பு குழுக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும் இந்த செய்தியை சில செய்தி சேனல்களில் மக்கள் நம்ப தொடங்கும் வரை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பு செய்கிறார்கள்.

இப்போது இந்தியாவில் பல பகுதிகளில் முஸ்லிம் விற்பனையாளர்கள் புறக்கணிக்கப்பட்டு பக்கத்து ஊர்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த வெறுக்கத்தக்க செயல்கள் வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை அது மட்டுமின்றி அமீரகத்திலும் இந்த சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. நேரடி தொலைக்காட்சி தொடர்களால் பரப்பப்படும் வெறுக்கத்தக்க இச்செயல்கள் சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக பிரபலமான தொலைக்காட்சி சேனல்களான ரிபப்ளிக் டிவி (Republic TV), ஸி நியுஸ் (Zee News), இந்தியா டிவி (India TV), ஆஜ் தக் (Aaj Tak), ஏபிபி (ABP) மற்றும் டைம்ஸ் நௌவ் (Times Now) போன்ற சேனல்கள் இவ்வாறான போலி செய்திகளை பரப்புவதை கைவிடவேண்டும். அதுமட்டுமின்றி வளைகுடாவில் உள்ள அதிகாரிகள் இந்த சேனலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மத பின்னணிகளுடன் நிம்மதியாக வேலை செய்து வாழக்கூடிய வளைகுடா நாடுகளின் சமூக சூழ்நிலையை சீர்குலைக்கும் இத்தகைய சேனல்களை அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

Source: Gulf News

தமிழாக்கம்: UAE Tamil Web