Newsu Tamil
health உலக செய்திகள் மறைக்கப்பட்டவை

இந்தியாவை மிரட்டி ட்ரம்ப் வாங்கிய மருந்தை சாப்பிட்டு அமெரிக்காவில் பலர் மரணம்

வேகமாக சுழன்று கொண்டிருந்த பூமியை தனது கோர பசிக்கு இரையாக்கிக் கொண்டிருக்கிறது கொரோனா. உலகின் வல்லாதிக்க நாடுகளாக மார்தட்டிக் கொண்டவர்கள், இப்போது செய்வதறியாது திகைத்து வருவது அரச கட்டமைப்புகளை கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது..
நாளுக்கு நாள் கொரோனாவால் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை தடுக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளும் மருத்துவ அமைப்புகளும் போராடி வருகிறது.

கொரோனாவை குணப்படுத்த பிரத்யேக மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனாவை எதிர்கொள்ள ஹைட்ரோ குளோரோக்சிகுயின் என்ற மருந்து தான் அமெரிக்காவுக்கு கிடைத்த கேம் சேஞ்சர் என குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருவது மருத்துவ உலகை தலை சுற்ற வைத்திருக்கிறது. “கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ரோக்சி குளோரோகுயின் சிறந்த மருந்தாக இருக்கும்.. அது வேலை செய்யலாம் வேலை செய்யாமலும் போகாலாம்.. ஆனால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாது” என போலி மருத்துவருக்கு நிகராக அமெரிக்க அதிபர் சர்வ சாதாரணமாக பேசிச் செல்வது சர்வதேச ஊடகங்களில் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

இதில் குளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்குத் தரப்படும் மருந்து. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து மூட்டுவலி சிகிச்சைக்கும் Rheumatoid arthritis) எனப்படும் முடக்குவாத பிரச்னைக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது சீர் செய்வதால் மூட்டுவலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த மருந்து கொரோனா வைரஸ் கிருமியின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்று ஒருசில ஆய்வகப் பரிசோதனைகளில் தெரிய வந்தது. இருப்பினும் இந்த மருந்து பயனுள்ளதாக இருக்கும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், தடுப்பு மருந்து என்ற பெயரில் ஹைட்ராக்சிக்ளோரோகுயினை எடுத்துக்கொள்ளும்போது அது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஒரு நீரிழிவு நோயாளி இதை எடுத்துக்கொள்ளும்போது, இந்த மருந்து அவரின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மேலும் அதிகரிக்கச் செய்யும். இதயத்தின் செயல்பாடுகள் மற்றும் இதயத்துடிப்பின் சீரான அளவு இதனால் பாதிக்கப்படலாம் என்றும் இது உயிரிழப்புகளுக்கு வித்திடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தால்..insomnia, nightmares, hallucinations, suicidal ideation. உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படலாம்
வாசிங்டனில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் Veterans Health Administration மருத்துவ கூடத்தில் மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு இங்கு கவனிக்கத்தக்கது..
வாஷிங்டன் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்த 368 நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை ஆய்வு செய்தபோது உயிரிழந்தவர்களில் 28 சதவீத நோயாளிகளுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் தரப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்றில் ஒரு சதவீதம் பேர் ஹைட்ரோகுளோகுயினின் பின்விளைவுகளுக்கு இரையாகியுள்ளனர்.

ஹைட்ரோ குளோரோக்சிகுயினுடன் azithromycin பயன்படுத்திய நோயாளிகளில் 22 சதவீதம் பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
ஹைட்ரோகுளோகுயின் உட்கொள்ளாத 158 நோயாளிகளில் வெறும் 11.4 சதவீதம் பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். அதவாது 18 பேர். இந்த ஆய்வு முடிவுகள் பல திடுக்கிடும் தகவல்களை தருகின்றன. அமெரிக்காவில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் ஹைட்ரோகுளோகுயினை பயன்படுத்தியிக்கின்றனர்.
உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்காத மருந்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் கேம் சேஞ்சர் என வர்ணித்திருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

அதிபர் டிரம்ப் பரிந்துரைத்த ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை பயன்படுத்தினால் இதயப் பிரச்ன்னை உள்ளிட்ட மோசமான பின் விளைவுகள் ஏற்படும் என அமெரிக்கவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த மருந்துகளை பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து மருந்து அட்டைகளிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஹைட்ரோகுளோரோகுயினை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படுவதாகவும் FDA ஆணையர் ஸ்டீஃபன் எம்.ஹான் எச்சரித்துள்ளார்.

அவசர காலத்தில் மட்டும் ஹைடோகுளோரோகுயினை பயன்படுத்த பரிந்துரைத்துள்ளதாக கூறிய அவர், கொரோனா நோய் தொற்று சிகிச்சைக்கு ஹைட்ரோ குளோரோகுயின் மருந்தை பயன்படுத்தும் மருத்துவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இப்படியிருக்க கொரோனாவுக்கான மருந்தாக ஹைட்ரோ குளோகுயினை மட்டுமே டிரம்ப் விளம்பரப்படுத்துவது ஏன் என கேள்வி எழுகிறது.
ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை plaquenil என்ற பிராண்டில் பிரான்சை தலைமையிடமாக கொண்டு இயங்கும் sanofil என்ற நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்க அதிபர் டிரம்பின் குடும்பம் சனோபில் நிறுவனத்தின் ஒரு பங்குதாரராக செயல்பட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது

டிரம்ப் தனது லாப நோக்கத்திற்காக ஹைட்ரோகுளோரோகுயினை விளம்பரம் செய்வதாக விமர்சனங்களும் எழுகின்றன. நலிந்த நாடுகளின் வளங்களை சுரண்ட ராணுவத்தில் பல பில்லியன் டாலர்களை செலவழித்த அமெரிக்கா, சொந்த நாட்டில் அமெரிக்கர்கள் கொத்து கொத்தாக மடியும் போது அதனை தடுக்க முடியாமல் திக்குமுக்காடுவது சுயநலமிக்க முதலாளித்துவத்தின் படுதோல்வியை உலகறியச் செய்கிறது.