Newsu Tamil
corona உலக செய்திகள் பணம் பின்னணி

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துக்கு ட்ரம்ப் மல்லுக்கட்டுவது ஏன்?

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. உலகத்தின் வளர்ந்த வல்லரசு நாடு, உலகை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் படைத்த நாடு என பெருமை பேசிக்கொண்டிருந்த அமெரிக்கா கொரோனா தடுப்பில் மற்ற நாடுகளை காட்டிலும் பின் தங்கி இருக்கிறது. ஆளுமை திறன் அற்ற, ஆயுதம், அதிகாரத்தை மட்டுமே நம்பிய, நிர்வாகத்திறன் அற்ற வலதுசாரி சிந்தனை கொண்ட வியாபாரியான டொனால்டு ட்ரம்பின் கையில் சிக்கிக் கொண்டு அமெரிக்கா அல்லல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பில் மிகச்சிறிய நாடான கியூபா உலகையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கும் வேலையில் அமெரிக்காவின் நிலையோ பரிதாபம்.

இந்த இக்கட்டான சூழலிலும் தனது நாட்டு மக்களை காக்க முயற்சிக்காமல் சீனா மீது பழிசுமத்துவதும், சீனர்களை இனரீதியாக சாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் ஹைடிரோக்சி குளோரோகுயின் என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரியை கொரோனா தடுப்புக்கு பயன்படுத்தலாம் என அவர் கூறினார் ட்ரம்ப். இதனை நம்பி அதனை உட்கொண்ட சிலர் அங்கு உயிரிழந்தனர். பலருக்கு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

டொனால்டு ட்ரம்ப் இந்த மருந்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கும்போது, உறுதிபடுத்தப்படாத மருந்தை அதிகளவில் பிரபலம் செய்து விற்றால் இதய நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வல்லுநர்கள் எச்சரித்து இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு என்னால் என்ன செய்ய முடியும், நான் மருத்துவர் இல்லையே, எனக்கும் சுயபுத்தி உள்ளது என சர்வ சாதாரணமாக கூறிவிட்டுச் சென்றார் ட்ரம்ப்.

கொரோனாவுக்கு முறையான தீர்வு என அறிவிக்கப்படாத ஹைட்ரோக்சி க்ளோரோகுயின் மருந்துக்கு ட்ரம்ப் ஏன் மல்லுக்கட்ட வேண்டும்? என்ற கேள்வி நமக்கு எழலாம். குறிப்பிட்ட இந்த மருந்தை கொரோனாவுக்கு எதிரானதாக பிரபலப்படுத்துவதன் மூலம் அந்த மருந்தை தயாரித்து வரும் நிறுவனங்களின் பங்குகளின் விலை உயரும். ட்ரம்ப் வர்த்த உறவு வைத்துள்ள ப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த சனோபி என்ற மருந்து நிறுவனமும் ஹைட்ரோக்சி க்ளோரோகுயின் மாத்திரைகளை தயாரித்து வருகிறது. இதன் மூலம் ட்ரம்புக்கு கிடைக்கும் பொருளாதார லாபத்தை நம்மால் உணர முடிகிறது.