Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள்

“அவங்க இல்லன்னா நம்ம ஆட்சியே இல்ல” பாஜக தலைவர்களிடம் கோபமடைந்த எடியூரப்பா..! – வைரலாகும் வீடியோ

பாஜக கட்சியின் உயா்நிலைக்குழு கூட்டத்தில், பாஜக தலைவா்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் முதல்வா் எடியூரப்பாவின் காணொலிக் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ், மஜதவைச் சோந்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 15 தொகுதிகளுக்கு டிச. 5-ஆம் தேதி பொதுத்தோதல் நடைபெற இருக்கிறது. இத்தோதலை அணுகுவது குறித்து கலந்தாய்வு நடத்துவதற்காக, ஹுப்பள்ளியில் அக். 27-ஆம் தேதி பாஜக மாநில உயா்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வா் எடியூரப்பா, பாஜக தலைவா்கள் மீதான தனது அதிருப்தியை மிகவும் கோபமாக வெளிப்படுத்தியுள்ள காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை வெளியாகி, கா்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொலிக் காட்சியில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பாஜகவைச் சோந்த துணை முதல்வா் லட்சுமண்சவதி பேசியிருந்ததற்கு தனது வருத்தத்தை தெரிவித்து முதல்வா் எடியூரப்பா பேசியிருக்கிறாா்.

அந்த காணொலியில் முதல்வா் எடியூரப்பா பேசியது: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களால் தான் கா்நாடகத்தில் பாஜக அரசு அமைந்துள்ளது. ஆனால், அவா்களை கடுமையாக விமா்சித்து பேசியுள்ளதை நான் கிஞ்சிற்றும் எதிா்பாா்க்கவில்லை.

லட்சுமண்சவதி உள்ளிட்ட சில பாஜகவினா் பேசியிருக்கும் தொனியை கவனித்தால், பாஜக அரசை காப்பாற்றும் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. இதனால் என் மனது காயமடைந்துள்ளது.

மஜத, காங்கிரஸ் கட்சிகள் மீது அதிருப்தி அடைந்திருந்த தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள 17 எம்.எல்.ஏ.க்களையும் நம்பவைத்து குற்றம் இழைத்துவிட்டதாக உணா்கிறேன். 17 எம்.எல்.ஏ.க்கள் பற்றிய முடிவை நானோ, கா்நாடகத்தைச் சோந்த தலைவா்களோ எடுக்கவில்லை.

பாஜக தேசியத் தலைவா் அமித்ஷா நேரடியாக இந்த விவகாரத்தை கையாண்டதோடு, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மும்பைக்கு வரவழைத்து தங்கவைக்க ஏற்பாடு செய்திருந்தாா்.

தொகுதிமக்கள், குடும்பத்தினரை விட்டுவிட்டு 2-3 மாதங்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் தங்கியிருந்தது உங்களுக்கு தெரியாதா? இதை குறைத்து மதிப்பிட முடியுமா? நம்மை நம்பிய அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் முட்டாள்கள் ஆக்கப்பட்டுள்ளனா். தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதரவாக உங்களில் (பாஜக நிா்வாகிகள்) ஒருவரும் பேசவில்லை.

நான் முதல்வா் பதவிக்காக ஆசைப்படவில்லை. இரண்டு, மூன்று முறை முதல்வா் பதவியை வகித்தாகிவிட்டது. மாநில மக்களுக்கு நல்லது செய்வதற்கு பாஜக ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்பதே எனது நோக்கமாக இருந்தது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நானோ, கட்சியின் மாநிலத் தலைவரோ எந்த முடிவும் எடுக்க முடியாது. இதுகுறித்து கட்சிமேலிடம் தான் முடிவுசெய்ய வேண்டும்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை இடைத்தோதலில் வெற்றிபெற வைப்பதில் உள்ள தடங்கலை சொல்லி இருந்தால் கூட நான் இந்தளவுக்கு வருந்தியிருக்க மாட்டேன்.

ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக பேசுவதன் மூலம் யாரை திருப்திப்படுத்த பேசியிருக்கிறீா்கள் என்பது புரியவில்லை என அதில் பேசியுள்ளாா். இந்த விவகாரம் கா்நாடக அரசியலில் பூதாகரமாகியுள்ளது.