Newsu Tamil
இந்திய செய்திகள் தொழில்நுட்பம் மறைக்கப்பட்டவை

ட்விட்டருக்கு எதிராக ட்விட்டரிலேயே டிரெண்டான ஹேஷ்டேக் – இந்திய அளவில் #CasteistTwitter முதலிடம்

ஒவ்வொரு காலமாற்றத்திலும் எதிர்பு தெரிவிப்பதற்கான கருவிகள், முறைகள் மாறிக்கொண்டே வருகின்றன. தற்போது உள்ளூர் விவகாரம் தொடங்கி உலக விவகாரம் வரை எதிர்ப்பு தெரிவிப்பதற்கு முதலில் பயன்படுவது ட்விட்டர் தான்.

அதில் ஒரு ஹேஷ்டேக்கை தட்டிவிட்டபின் தான் அடுத்த வேலைகளை செய்ய தொடங்குகிறார்கள் இக்கால இளைய தலைமுறையினர்.இந்த நிலையில், இந்தியாவில் ட்விட்டர் ஒருசாராருக்கு பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தன. குறிப்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிரான கருத்துக்கள், ஆர்.எஸ்.எஸ்., பிராமணர்கள், இந்துத்துவாவுக்கு எதிரான கருத்துக்களை ட்விட்டர் நீக்குவதாகவும், அதுபோல் வைரலாகும் ஹேஷ்டேக்குகள் தரக்குறைப்பு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அதே போல், துறைசார் பிரபலங்களுக்கு வழங்கப்படும் புளூ டிக்கை பாரபட்சமாக ட்விட்டர் வழங்குவதாகவும், குறிப்பாக தலித்துகள், முஸ்லிம்கள், அம்பேத்கரிய கொள்கைசார்ந்த எழுத்தாளர்கள், செயற்பாட்டாளர்களுக்கு புளூ டிக் வழங்க ட்விட்டர் மறுப்பதாக ட்விட்டரிலேயே சம்பந்தப்பட்டவர்கள் பதிவிட்டனர்.

அத்துடன் ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக மனிஷ் மகேஷ்வரி கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டதில் இருந்து இப்பிரச்சனை அதிகரித்து இருப்பதாகவும் பிராமணர்கள், வலதுசாரிகளுக்கு ட்விட்டரில் முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறி அவரை பணியிலிருந்து நீக்குங்கள் என பொருள்தரும் #SackManishMaheshwari என்ற ஹேஷ்டேக்கை இன்று டிரெண்ட் செய்தனர்.

இந்திய அளவிக் டிரெண்டிங்கில் 2-ம் இடம் பிடித்த இந்த ஹேஷ்டேக் திடீரென நீக்கப்பட்டது.இதனால் கொதிப்படைந்த நெட்டிசன்கள் #SackManishMaheshwari என்ற ஹேஷ்டேகுடன் #CasteistTwitter என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்து டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் கிடுகிடுவென முதலிடத்தை பிடித்துள்ளது.