Newsu Tamil
அரசியல் தமிழ்நாடு செய்திகள்

சுஜித் மரணம்: பெற்றோரே காரணம் எனச் சொல்லும் அமைச்சர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என்றும், அதில் இடைத் தேர்தலைப் போன்று அதிமுக கூட்டணி 100% வெற்றி பெறும் என்றார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபோன்று எந்த ஒரு தனி விருப்பமும் தங்களது கட்சியில் கிடையாது என்றும் தலைமை எடுக்கும் முடிவு கே அனைவரும் கட்டுப்படுவோம் என்றும் கூறினார்.

குழந்தை சுஜித் மரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சுஜித் பின் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது இல்லை என்றார். தனி நபருக்கு சொந்தமான இடத்தில் விபத்து நடந்ததாகவும், இதற்கு சுஜித் பெற்றோர்களின் அஜாக்கிரதையே காரணம் என்றார்.

விபரம் தெரியாமல் சுஜித் பெற்றோரை சமூக வலைதளங்களில் சிலர் விமர்சித்து வந்தாலும், பல கட்சி அரசியல் தலைவர்களும் நாகரீகமான முறையில் ஆறுதல் மட்டுமே கூறி வருகின்றனர். ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜூ இவ்வாறு பேசுயது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.