Newsu Tamil
health தமிழ்நாடு செய்திகள் பின்னணி

நாங்க எதுக்கு போராடுறோம் தெரியுமா? – பேஸ்புக் மூலம் உணர வைக்கும் மருத்துவர்!

மருத்துவர் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகொறது. இதனால் நோயாளிகள் பாதிக்கப்படுவது உண்மைதான். ஆனால் அதே நேரம் இது மருத்துவர்கக் செய்த தவறா? அரசு செய்த தவறா என்றால் தவறு அரசு பக்கமே உள்ளது. காரணம் அரசு எழுத்துப்பூர்வமாக அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது மருத்துவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால், பேஸ்புக் போராளிகளோ என்னவென்றே தெரியாமல் மருத்துவர்கள் போராட்டத்தை விமர்ச்சிக்கிறார்கள்.

இப்படி அரைகுறை அறிவுடன் பேஸ்புக்கில் பேசுபவர்களுக்கு அதே பேஸ்புக்கில் பதிலடி கொடுத்து வருகிறார் தஞ்சையை சேர்ந்த அரசு மருத்துவர் பிரகாஷ்.

முதல் பதிவு:

#நான்: ஒரு நோயாளிய பார்த்து, பரிசோதனை செய்து, மருந்து எழுதி கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்…?

#நண்பன்: ஒரு 5 டூ 10 நிமிடம்…

#நான்: அப்போ ரெண்டு மணி நேரத்தில் எத்தனை பேருக்கு சிகிச்சை பாக்கலாம்?….

#நண்பன்: ஒரு 15 லேர்ந்து 20….

#நான்: அரசு மர்ருவமனையில ஒரு டாக்டர் 2 மணி நேரத்தில் 150 பேர பாப்பாங்க….

#நண்பன்: மை காட்.. அப்போ சரியா பாக்க முடியாதே..

#நான்: ஆமாம்…என்ன பண்றது டாக்டர் அவ்ளோ தான் இருக்காங்க…இதுக்கும் சேர்த்து தான் போராட்டம்…

“”‘#எண்ணிக்கை க்கு ஏற்ற வாறு டாக்டர் நியமனம் வேணும்னு””‘…

இது எதுவும் புரியாமல் டாக்டர் சம்பாரிக்கிறான் னு ஒப்பாரி வைக்காத நாயே…

ஏழை மக்களுக்கும் சேர்த்து தான் போராட்டம்…

பதிவு 2:

முதுநிலை பட்டதாரி, அறுவை சிகிச்சை நிபுணர் நான் வாங்கும் சம்பளம் ₹58,000….

இன்னும் 15 வருடத்திற்கும்ம் இதே தான்…

இப்போ தனியார் ல வேலைக்கு சேர்ந்தா 1.5 லட்சம்….

இப்போ வெளிநாட்ல வேலைக்கு சேர்ந்தா 6 லட்சம்…..

நான் உங்கள் வீட்ல இருக்க பிள்ளையா இருந்தா,

என்ன ஆலோசனை கொடுப்பீங்க..?