Newsu Tamil
அரசியல் இந்திய செய்திகள் மறைக்கப்பட்டவை

முட்டை சாப்பிடும் குழந்தைகள் மனித மாமிசம் உண்ணும் ஜந்துக்களாகி விடுவார்கள்- பா.ஜ.க. தலைவரின் கண்டுபிடிப்பு

முட்டை சாப்பிடும் குழந்தைகள் எதிர்காலத்தில் மனிதர்களையே கொன்று சாப்பிடும் நரமாமிசப் பட்சினிகளாக மாறிவிடுவார்கள் என்று மத்தியப்பிரதேச எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க. தலைவருமான கோபால் பார்கவா அறிய கண்டுபிடிப்பு ஒன்றை தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான அரசு குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க அங்கன்வாடியில் முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னனித் தலைவர்களில் ஒருவரான கோபால் பர்கவா மாமிசம் உண்பது இந்திய கலாச்சாரம் அல்ல என்று கூறியுள்ளார். ஊட்டச்சத்து மிக்க இந்த அரசு குழந்தைகளை மாமிசம் மற்றும் முட்டையை சாப்பிடச் சொல்லி வற்புறுத்துவதால் அவர்கள் எதிர்காலத்தில் மனித மாமிசத்தை உண்பவர்களாக மாறிவிடுவார்கள் என்று பேசியுள்ளார்.

காசியில் ஆடையின்றி அலையும் சாதுக்களைப் போல நாகரிக உலகில் வாழும் குழந்தைகளையும் கோபால் பார்கவ் நினைத்துவிட்டார் போல.

மதத்தின் பெயரால் கஞ்சா அடித்து கொண்டும், இறந்த பிணங்களின் மாமிசங்களை சாப்பிட்டுக் கொண்டும், பிணங்களின் சாம்பலை பூசிக் கொண்டும் ஆடையின்றி அம்மணமாகத் அலைந்து திரியும் சாதுக்களின் கால்களில் மண்டியிடும் பா.ஜ.கவினர் இந்திய கலாச்சாரத்தைப் பற்றியோ, உணவு முறையைப் பற்றியோ பேசத் தகுதி உடையவர்கள் தானா என்பதை சுயபரிசோதனை செய்து பார்க்கவேண்டும்.

(சமீபத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அண்டை நாடுளான நேபால், வங்கதேசம்,பாகிஸ்தானை விட இந்தியாவில் அதிகம் என்று ஒரு புள்ளிவிவரப்பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் 30.3 சதவீத இந்தியர்கள் கொடுமையான பசியால் வாடுவதாக கூறப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.)

SOURCE: Financial express

தமிழாக்கம்: நியூசு.இன்