IndiaLawPolitics

ப.சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின்… ஆனால் சிறையில் தான் இருப்பார்

ஐ. என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம். இதையடுத்து அவரை டெல்லி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய்குமார் குகர் முன்பு சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரித்தனர்.

இதை அடுத்து சிதம்பரத்திற்கு நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதே வழக்கில் அமலாக்கத்துறை தற்பொழுது சிதம்பரத்தை கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சிபிஐ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த வாரம் இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது விசாரணை முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.

அப்போது சிதம்பரத்திற்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குவதாக நீதிபதி தெரிவித்தார். மேலும் அவர் வெளிநாடு செல்ல கூடாது என்றும் தன்னுடைய உத்தரவில் நீதிபதி தெரிவித்தார். பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் கொடுக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். ஒரு லட்சம் பிணையத் தொகையாக கட்டவும் நீதிபதி தன்னுடைய உத்தரவில் தெரிவித்தார். சிபிஐ வழக்கில் தற்போது சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தாலும் அவரால் தற்பொழுது வெளியே வர இயலாது. அமலாக்கத்துறை இதே வழக்கில் அவரைக் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற வாதத்தின்போது சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் அவருடைய உடல்நிலை, வயது மற்றும் சமுதாயத்தில் உள்ள பொறுப்பு ஆகியவற்றை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் சிதம்பரத்தை கஷ்டப்படுத்தவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கினாலும் அவர் வெளிநாடு தப்பி செல்ல மாட்டார் என சிதம்பரம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் தற்பொழுது சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ கைது செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்தாலும் அவரால் தற்பொழுது வெளியே வர இயலாது.

ஏனென்றால் இதே வழக்கில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை தற்போது கைது செய்து 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.