More

    எச்.ராஜாவை எதிர்த்து போஸ்டர் ஒட்டிய திமுக,அதிமுகவினர்..! – கடலூரில் பரபரப்பு..!

    கடலூர் மாவட்டத்தில் எச்.ராஜாவிற்கு எதிராக திமுக, அதிமுக வினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கண்டன போஸ்டர் அடித்து ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் அரியநாச்சி என்னும் கிராமத்திற்கு எச்.ராஜா வருகை தருகிறார் என தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த கிராம மக்களோடு இணைந்து திமுக அதிமுக வினர் கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    அந்த போஸ்டரில் அ.பு.ச 428/13ல் சார் ஆட்சியரின் உத்தரவு திட்டக்குடி நீதிமன்ற வழக்கு OS NO :216/17 இவைகளை மீறி சாமி பெயரில் வருகை தரும் இந்து அதர்ம கொள்கைவாதி எச்.ராஜா அவர்களே ஒழிக ஒழிக” என அச்சிடப்பட்டுள்ளது..l

    விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அமைதியாக இருக்கும் கிராமத்தில் வந்து வன்முறை பேச்சுக்களின் மூலம் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் எச்.ராஜா வருகை தருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    தமிழகத்தில் சர்ச்சை பேச்சுக்கும், வன்முறை பேச்சுக்கும் பெயர்போன பிரபல முகமான பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு எதிராக இத்தகைய போஸ்டரை திமுக- அதிமுகவினரே ஒன்றிணைந்து ஒட்டிய சம்பவம் பாஜக தரப்பினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Recent Articles

    முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

    சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

    ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

    இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

    வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

    ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

    கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

    தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

    ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

    Related Stories

    Stay on op - Ge the daily news in your inbox