More

    ப.சிதம்பரத்தின் கைது… சி.பி.ஐ. நடவடிக்கை அதிரடியா? அத்துமீறலா?

    ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ள சம்பவம் அரசியல் கட்சித் தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ப.சி-யை கைது செய்வதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சில பல ஸ்டண்ட்களை செய்துள்ளனர். இது சி.பி.ஐ-ன் அதிரடி என்று பாரதிய ஜனதாவினரும், அத்துமீறல் என்று எதிர்கட்சியினரும் மாற்றி மாற்றி கருத்து கூறி வரும் நிலையில் இந்த வழக்கு குறித்து ஒரு ப்ளாஷ்பேக் …

    2007-ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசின் நிதி அமைச்சராக பதவியில் இருந்தவர் ப.சி. தனது பதவியை பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்கு முறைகேடாக பணபறிமாற்றம் செய்ய உதவியதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

    இந்த உதவிக்காக வாங்கிய லஞ்சப் பணத்தை தனது மகனும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் இருவேறு நிறுவனங்களுக்கு வழங்கியதாக ப.சி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    சரி, அதென்ன ஐ.என்.எக்ஸ் மீடியா என்கிறீர்களா? அதைத் தெரிந்துகொள்ள மற்றொரு சி.பி.ஐ வழக்கை நாம் துணைக்கு அழைக்க வேண்டும்.
    நாட்டையே உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கை நாம் யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. இந்த வழக்கில், பெரும் தொழிலதிபர்களான இந்திராணி முகர்ஜியும் அவரது கணவரும் பெற்ற மகளையே கொலை செய்தற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். இவர்களுடைய நிறுவனம் தான் ஐ.என்.எக்ஸ் மீடியா. ஐ.என்.எக்ஸ் மீடியா உரிமையாளரான இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி, சட்டவிரோத பணபறிமாற்றத்திற்கு ப.சி தங்களுக்கு உதவியதாக சி.பி.ஐ நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளார். இந்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ப.சி மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் இதுவரை 20 முறை சி.பி.ஐ முன்பு ஆஜராகி உள்ளார். ஆனால், சி.பி.ஐ-யோ இன்னும் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவில்லை. ப.சி குடும்பத்தின் சில சொத்துக்களை முடக்கி உள்ள சி.பி.ஐ, ப.சி-யை விசாரணைக்கு ஆஜராக சொல்லியது, ஆனால் ப.சி டெல்லி உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியோ குற்றப்பத்திரிக்கையே தாக்கல் செய்யப்படாத “இந்த ஊழல் வழக்கில் ப.சி தான் மூளையாக செயல்பட்டவர் அதனால் அவருக்கு ஜாமீன் கிடையாது என்று மறுத்துவிட்டது”. இதனையடுத்து 24 மணி நேரத்தில் 6 முறை ப.சி வீட்டிற்கு படை எடுத்த சி.பி.ஐ, சுவர் ஏறி குதித்து அவரை கைது செய்துள்ளது.

    குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் காட்டப்படாத அதிரடி, மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய எம்.பி அன்புமனி மீது காட்டப்படாத அதிரடி, 7 வருடங்களுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்காக ப.சி மீது காட்டப்பட்டிருக்கிறது. சி.பி.ஐ-ன் இந்த செயல் அதிரடியா? அல்லது அத்துமீறலா என்பதை வழக்கு முடிவுதான் தெளிவுபடுத்தும்.

    Recent Articles

    முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

    சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

    ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

    இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

    வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

    ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

    கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

    தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

    ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

    Related Stories

    Stay on op - Ge the daily news in your inbox