BackgroundPoliticsTamilnadu

அம்பேத்கர் சிலை உடைப்பு… பின்னணி என்ன?

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் நேற்று காவல் நிலையம் அருகிலேயே சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் சிலையை உடைத்து கோரமுகத்தை காட்டியுள்ளனர் சாதிவெறியர்கள். இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சாதிக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சியாக இருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், திடீரென வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. இது குறித்த பின்னணி தகவலை நக்கீரன் வெளியிட்டுள்ளது. அதாவது,

முக்குலத்து புலிகள் அமைப்பில் இளைஞரணி மாவட்ட செயலாளராக உள்ள வேதாரண்யத்தை சேர்ந்தவர் பாண்டியனுக்கும், வேதாரண்யத்தை அடுத்துள்ள ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுகத்தினருக்கு முன் பகை இருந்துள்ளதாகவும், சில நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுகத்தைச்சேரந்த ராமகிருஷ்ணன் என்பவரின் காலை பாண்டியனின் தரப்பு வெட்டியதாகவும் நக்கீரன் கூறியுள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு வேதாரண்யம் காவல்நிலையத்தின் வாசலில் பாண்டியன் தனது காரை நிறுத்திவிட்டு காவல்நிலையத்திற்குள் சென்றிருக்கிறார். ராமச்சத்திரன் தரப்பினர் பாண்டியனின் காரை காவல்நிலையத்திற்கு முன்பே தீவைத்து கொளுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டியனின் சமூகத்தினரும், அவரது ஆதரவாளர்களும் ஒன்று திரண்டு வேதாரண்யம் பேருந்து நிலையத்தின் வாசல இருந்த டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்து தலையை துண்டாக்கியதாக நக்கீரன் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.