More

  திமுக தூக்கிக் கொடுத்த என்.ஐ.ஏ கத்தியை திமுகவுக்கு எதிராகவே திருப்பும் பாஜக..!

  பாஜக ஆதரவு வலதுசாரி தொலைக்காட்சியான ரிபப்ளிக்கில் அர்ணாப் கோஸ்வாமி நடத்திய காஷ்மீர் தொடர்பான விவாதத்தில் திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சரவணன் பங்கேற்றார். அதில் பேசிய அவர்,

  “Kashmir was never an integral part of India” “காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக ஒரு காலத்தில் இருந்ததில்லை” என்றார். ஆனால் அர்னாப் கோஸ்வாமியோ, “Kashmir is not a part of India” “காஷ்மீர் இந்தியாவின் பகுதியில்லை” என்று சரவணன் கூறியதாக திரித்துப்பேசினார். இதுதான் திமுகவின் நிலைப்பாடு என்றால் இந்தியாவில் நீங்கள் கட்சி நடத்த முடியுமா?’ என்று ஸ்டாலினை குறிப்பிட்டு அர்ணாப் கூச்சலிட்டார். மற்ற பங்கேற்பாளர்களும் அர்ணாபுடன் சேர்ந்து சரவணன் மீது கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மைக்கை கழற்றிப் போட்டுவிட்டு நிகழ்வில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

  இதனை தொடர்ந்து திமுக, சரவணன் மீது பாஜக கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறது. இது தொடர்பாக விளக்கமளித்த சரவணன், “இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது காஷ்மீர் இந்தியாவுடன் இல்லை. அதன் பின்னரே ராஜா ஹரிசிங், இந்தியாவுடன் சில நிபந்தனைகளோடு இணைந்துக்கொள்ள ஒரு ஒப்பந்தம் போடுகிறார். அதனை காஷ்மீர அரசியல் நிர்ணய சபை ஒத்துக்கொண்ட பின்னர் 1956ஆம் ஆண்டு, காஷ்மீர அரசியல் சட்டத்தின் 3ஆவது சரத்தின் படி “3. State of Jammu and Kashmir is and shall be an integral part of the Union of India.”. காஷ்மீரத்து பிரச்சனையை வரலாறு அறியாமல் பேசமுடியாது. இந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். அதன் பின்னர் அந்த விவாதத்தில் மேற்சொன்ன கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளிக்காமல், தொடர்ந்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால், “உங்களின் பலியாடு நான் அல்ல” என்று வெளியேறினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.”

  இதற்கிடையில் பாஜக தமிழக ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேச விரோதி சரவணன் எந்த அடிப்படையில் காஷ்மீரை பற்றி இப்படிப்பட்ட கருத்தைக் கூறினார் என்று அவரிடம் தேசிய புலனாய்வு முகமை விசாரணை (என்.ஐ.ஏ) நடத்த வேண்டும். இதை வெறும் கருத்து ரீதியானதாக பார்க்க முடியவில்லை. திமுக செய்தித் தொடர்பாளர் சரவணனுக்கு காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன் தொடர்பிருக்கிறதா என்று ஆராய வேண்டிய கடமை தேசிய புலனாய்வு முகமைக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

  அண்மையில் நாடாளுமன்றத்தில் என்.ஐ.ஏ.வுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவை தேசிய பாதுகாப்புக்காக ஆதரிப்பதாக திமுக கூறி வாக்களித்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. கூடிய விரைவில் இந்த சட்டத்தை திமுகவுக்கு எதிராகவே பயன்படுத்துவார்கள் என்று சொல்லப்பட்ட நிலையில் தி.மு.க. செய்தித்தொடர்பாளர் சரவணன் மீதே என்.ஐ.ஏ விசாரணை கோரியுள்ளனர் பாஜகவினர் என்பது நினைவுகூறத்தக்கது.

  Recent Articles

  முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

  சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

  ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

  இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

  வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

  ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

  கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

  தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

  ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

  Related Stories

  Stay on op - Ge the daily news in your inbox