PoliticsTamilnadu

சாணக்கியமாக கேட்ட பாண்டே… நெத்தியடி பதிலளித்த திருமா!

நிகழ்ச்சி ஒன்றில் தந்தி டிவி முன்னாள் நெறியாளரும், இந்நாள் வலதுசாரி ஆதரவாளருமான ரங்கராஜ் பாண்டே விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாளவனிடம், நீங்கள் ரமலானுக்கு நோன்பிருக்கிறீர்கள். அதே போல வைகுண்ட ஏகாதேசிக்கும், சிவராத்திரிக்கும் விரதம் இருந்தால் நன்றாக இருக்குமே என்றார்.

இதற்கு பதிலள்த்த திருமாவளவன், நண்பர் ரங்கராஜ் பாண்டே வைகுண்ட ஏகாதேசிக்கும் விரதம் இருங்கள் என்று சொன்னார். தோழரே! நீங்கள் ஒருமுறை கூட வாருங்கள் விரதம் இருப்போம் என்று என்னை கூப்பிட்டதில்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்னை கட்டி அணைத்து வாருங்கள் எங்களோடு சேர்ந்து நோன்பு திறங்கள் என்று அழைக்கின்றார்களே! இதுவரை எந்த இந்து தலைவரும் என்னை வைகுண்ட ஏகாதேசிக்கோ சிவராத்திரிக்கோ வாருங்கள் என்று அழைத்ததில்லையே! என நெத்தியடி பதில் கொடுத்தார்.