More

  நஷ்டத்தில் சென்னை மெட்ரோ ரயில்? மக்களை சமாளிக்க இலவச டிக்கெட்

  சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்று காலை 6 மணி முதல், பயணிகளுக்கு டோக்கன் வழங்கும் இயந்திரங்கள் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு பழுதடைந்தது. இதனால் ரயில்களில் டோக்கன் மூலம் பயணிக்க வந்த பயணிகளுக்கு காலை 6 மணி முதல் 9 மணி வரை பேப்பர் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வந்தது. 9 மணிக்கு மேலாக ரயில்களில் பயணிக்க வருவோர் எண்ணிக்கை அதிகரித்தது. மெட்ரோ ரயில் நிலையங்களைப் பொறுத்தவரை, டோக்கனைக் காட்டினால் மட்டுமே பயணிகள் ரயிலில் ஏறவும், ரயிலை விட்டு இறங்கி வெளியே வரவும் முடியும்.

  டோக்கன் பழுதால், பேப்பரில் பயணச்சீட்டு வழங்கப்பட்டதால், பேப்பர் பயணச்சீட்டை மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்களே சரிபார்த்து பயணிகளை ரயிலில் ஏற அனுமதித்து வந்தனர். போதுமான ஊழியர்கள் இல்லாததால், பயணச்சீட்டை சரிபார்ப்பதற்கு கால தாமதமாவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

  இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலையங்களின் டோக்கன் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்படும் வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ல்டோக்கன் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

  இதற்கு முன்பு, விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்ட போது 5 நாட்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ நிர்வாகம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

  அண்மையில் சில மாதங்களாக மெட்ரோ ரயில் ஊழியர்கள் போராட்டம் நடத்தியதற்கு பின்பு இது போன்ற பிரச்சனை அதிகரித்துள்ளதை காண முடிகிறது. மெட்ரோ நிர்வாகம் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்கு அனுமதி மறுத்தது தொடங்கிய அதற்கான முயற்சியில் ஈடுபட்டவர்களை பணி நீக்கம் செய்தது வரை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு சட்டம் வழங்கிய உரிமைகளை கூட மறுத்து வருகிறது. முழுமையான கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படும் மெட்ரோ, தகுதியற்றவர்களை குறைந்த ஊதியத்துக்கு பணியமர்த்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  இதனால் அனுபவம் குறைவானவர்கள் இயந்திரங்களை கையாள தெரியாமல் பழுதாவதும், சிறிய விபத்துகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. முறையான பயிற்சி அற்ற ஒப்பந்த ஊழியர்கள் பராமரிப்பு பணியினை சரிவர மேற்கொள்ளாததால் இது போன்ற புதுவிதமான பிரச்சினைகள் வருவதாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

  உயர்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் மட்டுமே பயன்படுத்து வகையில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழைகள் மெட்ரோ ரயிலில் அதிகம் செல்வதில்லை. அவர்களின் தேர்வு மின்சார ரயில் மற்றும் பேருந்தாகவே உள்ளது. உயர்தர மக்கள் பலரும் காரை அதிகம் பயன்படுத்துவதால் மெட்ரோவுக்கு எதிர்பார்த்த கூட்டம் வருவதில்லை. கடும் நிதி நெருக்கடியுடன் இயங்கி வரும் மெட்ரோ நிர்வாகம், இதுபோல் தங்கள் குறைகளை மறைக்க இலவச டிக்கெட் கொடுத்து மக்களை பாசாங்கு செய்ய முயல்கிறது.

  சாமானிய மக்களின் பொருளாதாரத்தை உயர்த்தாமல் வளர்ச்சி என்ற பெயரில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் பயன்படுத்தும் வசதிகளை அரசு தொடங்குவதால் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. பொருளாதார சமனிலையை ஏற்படுத்த முயற்சிக்காமல் சமூகத்தில் ஒரு இலக்க சதவீத அளவில் மட்டுமே இருக்கும் பணக்காரர்களுக்காக எந்த சேவையை அரசு தொடங்கினாகும் அது தோல்வியையே தழுவும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

  Recent Articles

  முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

  சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

  ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

  இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

  வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

  ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

  கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

  தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

  ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

  Related Stories

  Stay on op - Ge the daily news in your inbox