Newsu Tamil
Defence இந்திய செய்திகள் பின்னணி

இந்தியாவில் ராணுவ ஆட்சிக்கு வகை செய்யும் மோடியின் ஆபத்தான அறிவிப்பு

வில்கின்சன் எனும் அமெரிக்க பேராசிரியர் ” இந்தியாவில் ஏன் மற்ற தென் கிழக்கு ஆசிய நாடுகள் போல ராணுவ ஆட்சி வரவில்லை என்று தனது ஆர்மி & நேசன் என்ற நூலில் எழுதியிருக்கிறார்.

ஒரே சமயத்தில் விடுதலை பெற்ற, இந்தியா , பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளில் இந்தியாவில்மட்டும் ஏன் ராணுவ ஆட்சி ஏற்படவில்லை? அதற்கான காரணிகள் என்னென்ன?என்று தனது ஆய்வை பட்டியலிடுகிறார் அவை…

1. இந்திய ராணுவத்திற்கு சிவில் பிரச்சனைகளில் கருத்து கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்பதை திட்டவட்டமாக நேரு கூறுகிறார். பீல்ட் மார்ஷல் கரியப்பா பொருளாதாரம் பற்றி கருத்து கூறியது தன் வரம்புக்கு மீறிய செயல் என நேரு எச்சரிக்கிறார்.

2. ராணுவத்தை மதச்சார்பற்று வைத்திருக்க வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருந்தது. பாகிஸ்தானில் மதமும் ராணுவமும் ஒன்றோடு ஒன்றாய் இருந்தது.

3. ராணுவம் பல மாநிலங்களில் இருந்து பல மொழிகள் பேசும் மக்களை recruit செய்தது. சென்னை பட்டாளியன், கூர்கா ரெஜிமெண்ட் என்று இருந்தது. பாகிஸ்தானில் 70சதவீதம் ராணுவம் பஞ்சாப் சிந்த் பகுதியில் இருந்தே வந்தனர்.

4. ராணுவத்தின் ஊதியம் பிற அல்லாவன்சஸ் குறைக்கப்பட்டது. பணக்கார பாரம்பரிய குடும்பத்து ஆட்களுக்கு அது ஒரு சிறந்த ஜாப் prospectus என்ற எண்ணம் மாற்றப்பட்டது.

5. ராணுவ தளபதிகளின் காலம் 3ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதை சைபர் security controlஇல் ஜாப் ரோடேஷன் என்போம். ஒருவர் ஒரு வேலையில் நீண்ட காலம் இருப்பது அவருக்கு அபரிமிதமான சக்தியையும் , தவறு இழைப்பதற்கான சாத்தியங்களையும் உருவாக்கும் என்பதனால் இந்த ஏற்பாடு.

6. ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகளை இந்தியாவிற்குள் உயர்ந்த பதவிகள் கொடுக்காமல் தூர தேசங்களுக்கு தூதராகவோ , ஐநா சபை போன்ற executive வேலைகளுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களின் இந்திய ராணுவத்துடனான தொடர்பை கட்டுப்படுத்துவது.

7. எந்த அரசு விழாக்களிலும் ராணுவ அதிகாரிகளை பேச அழைக்க கூடாது என்ற அதிகாரப்பூர்வ அறிக்கை அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டது.

அனைத்தையும் விட மிக முக்கியமானது இந்த பாயிண்ட் தான்.”ராணுவத்திற்கு முப்படை தளபதிகளை உருவாக்கியது. ஒரே ராணுவ தளபதி இல்லாமல் , கப்பற்படைக்கு விமானப்படைக்கு தரைப்படைக்கு என தனி தனியே தளபதிகளை உருவாக்கியது “.We call this separation of tasks in Information security. ஒருவரே மொத்த டாஸ்க்கையும் செய்யாமல் , ஒரு டாஸ்க் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு , ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் செய்வார். இதன் மூலம் ஒரு ஆளின் மீது இருக்கும் dependency குறையும். இன்னொருவரின் ஒத்துழைப்பு இல்லாமல் திருட்டு வேலை களில் ஈடுபட முடியாது. மிக அதிக நேரங்களில் அந்த இன்னொருவர் ஒத்துழைப்பு வழங்கமாட்டார். அதனால் தவறு நடப்பது தடுக்கப்படும்.

ஆனால் மோடியின் ஆட்சியில்,

1. விகே சிங் இந்திய அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்

2. ‎ராஜ்ஜியவர்தன் ரத்தோர் போன்றவர்கள் சென்ற மக்களுக்கு நாட்டுப்பற்று வகுப்பு எடுக்கிறார்கள்

3. ‎இன்று அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல் முப்படைக்கும் ஒரே தளபதி என்ற அறிவிப்பை பிரதமர் வழங்கியுள்ளார்.