BackgroundIndia

கபீல் கானை பழிவாங்கிய யோகியை எதிர்க்காத மருத்துவர்கள், இன்று மம்தாவை எதிர்க்கிறார்கள்

உபியில் ஒரு அரசு மருத்துவர் தன் சொந்த காசில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி பல அப்பாவி குழந்தைகளை காப்பாற்றி மக்களிடமும் ஊடக உலகிலும் புகழ் பெற்று விட, அவர் முஸ்லீம் என்பதற்காக… யோகி ஆதித்யநாத்தின் பாஜக அரசால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு, பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, பல மாதம் சிறையில் அடைக்கப்பட்டு, அவரது சகோதரர் சுடப்பட்டு, அவரது சொத்துக்களை செலவழித்து நீதிமன்றத்தில் அவர் கடுமையாக போராடி ஜாமீன் பெற்று வெளியே வந்து… தான் குற்றமற்றவர் என்று உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னரும், கடந்த 2 வருடங்களாக பணி நீக்கத்தில் சம்பளம் இன்றி அவதிப்பட்டுக்கொண்டு போராடி வரும் இந்த டாக்டர் கஃபீல்கான்க்காக குரல் கொடுக்காமல் எங்கே போய் ஒளிந்து கிடந்தன மருத்துவர் சங்கங்கள்..?

அன்று காணாமல் போன மருத்துவர் சங்கங்கள் இதோ வெளியே வந்துவிட்டன. மேற்கு வங்க மம்தா பானர்ஜி ஆட்சியை கலைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று.

அப்படி ஆட்சியை கலைப்பதுதான் தீர்வு என்றால்…

இதுபோன்ற தாக்குதல்கள் அதிகம் நடந்த குஜராத் அரசை அல்லவா முதலில் கலைக்க வேண்டும்..? (சில சான்றுகள் அடுத்து…)

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/patients-relatives-beat-up-junior-docs-at-civil/articleshow/64310811.cms

https://indianexpress.com/article/cities/ahmedabad/ahmedabad-resident-doctor-at-cancer-hospital-attacked-three-held-4603253/

https://www.asianage.com/india/all-india/270317/after-maha-doctor-attacked-in-gujarat-colleagues-briefly-stop-work-in-protest.html

https://www.ndtv.com/india-news/gujarat-high-court-stays-sentencing-of-bjp-lawmaker-in-assault-case-1396907

இதுபோன்ற… பாஜக ஆதரவு மனப்பான்மையுடன் ‘செலக்டிவ் போராட்ட அரசியல் பொங்கல்ஸ்’ எல்லாமே… டாக்டர்கள் போராட்டத்தின் மீதுதான் பொது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி கண்டுகொள்ளாமல் போகச்சொல்கிறது.

படங்கள்:

1. இரண்டு வருடங்களாக போராடி வருகிறார் டாக்டர் கஃபீல் கான்.

2. மருத்துவர்கள் போராட்டத்திற்கு டாக்டர் கஃபீல் கான் ஆதரவு.

3. தனக்காகவும் குரல் கொடுக்குமாறு மருத்துவர் சங்கத்தை கெஞ்சுகிறார் டாக்டர் கஃபீல் கான்.

பதிவு: ஆஷிக் அஹமத்