More

    தூத்துக்குடியில் அறிவிக்கப்படாத அவசரநிலை

    கடந்த ஆண்டு மே 23ம் நாளில் அமைதியான முறையில் பேரணி சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் 13 பேர் இறந்தனர். பலர் கொடிய தடியடி தாக்குதலுக்கும் உள்ளானர்கள்.

    இந்த தாக்குதலுக்கு பின் அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர். பொது ல்க்கூட்டம் நடத்தும் ஜனநாயக உரிமை கூட தொடர்ச்சியாக மறுக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடந்து ஒரு வருடம் கடந்த நிலையில், இறந்தவர்கள் நினைவு கூறும் நிகழ்ச்சிக்கான அனுமதி கூட தமிழகம் எங்கும் மறுக்கப்பட்டுள்ளன.

    தூத்துக்குடியில் இன்று நடைபெற இருந்த நினைவு கூட்டத்திற்கு செல்ல இருந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் கைதி செய்யப்பட்டுள்ளார்.

    உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு துப்பாக்கிச் சூடு நிகழ்வு குறித்த விசாரணை சி.பி.ஐ – யிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக காவல்துறையின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில், ஸ்டெர்லைட்க்கு ஆதரவாகவே தற்போதைய அரசு செயல்பட்டு வந்துள்ளது.

    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் செயல்பாட்டை நிறுத்த, வலுவான சட்ட காரணங்கள் இருந்த போதிலும் அதனை பயன்படுத்த தவறியது தமிழக அரசு. ஸ்டெர்லைட் நிறுவனத்தை செயல்நிறுத்தம் செய்த தமிழக அரசின் உத்தரவிற்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. தனிச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.

    அரசின் கடும் ஒடுக்குமுறையில் உள்ள தூத்துக்குடி வாழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க மக்கள் இயக்கம் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

    Recent Articles

    முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

    சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

    ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

    இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

    வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

    ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

    கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

    தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

    ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

    Related Stories

    Stay on op - Ge the daily news in your inbox