More

  மோடிக்கு டைம் சரியில்லயோ? பிரிவினைவாதிகளின் தலைவர் மோடி என விமர்சித்த டைம் இதழ்

  அமெரிக்க செய்தி இதழான டைம், மோடி பிரதமரான ஒரு வருடத்தில் 2015, 2017ம் ஆண்டுகள் டைம்ஸ் டாப் 100 மனிதர்கள் பட்டியலில் சேர்த்தது. இதனை புகழ்ந்து பக்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு தள்ளின. பாஜக தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் டைம்ஸில் வெளியான மோடியின் அட்டைப்படத்தை வெளியிட்டு புகழ்பாடி வந்தனர்.

  இந்த நிலையில், 5 ஆண்டுகால மோடி ஆட்சி முடிவடைந்து தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் அதே டைம் இதழ் பாஜகவினரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் கட்டுரை ஒன்றையும், அட்டைப்படத்தையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரிவினைவாதிகளின் தலைவர் மோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெளியாகும் டைம் இதழின் மே 20 ம் தேதி வரையிலான பதிப்பில் ஜனநாயக நாடான இந்தியா, பிரதமர் மோடி அரசாங்கத்தில், மதங்களால் பிரிக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆதீஷ் தஸீர் என்பவர் எழுதியுள்ள இந்த கட்டுரையில், இந்தியாவின் மதச் சார்பின்மை, பத்திரிகைச் சுதந்திரம் ஆகியவை மோடியின் ஆட்சிக் காலத்தில் சிதைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அந்தக்கட்டுரை குஜராத் கலவரத்தையும், பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளையும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சாமியார் யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதல்வராக அறிவித்தது, அண்மையில் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி தீவிரவாதி என விமர்சிக்கப்பட்ட சாத்வி பிரக்யாவை வேட்பாளராக அறிவித்தது என பல நிகழ்வுகள் இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  2 கோடிக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ள டைம் இதழ், 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில் பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தியது. இந்நிலையில் இந்திய தேர்தல் சமயத்தில் பிரதமர் மோடியை சாடி வெளியாகியுள்ள கட்டுரையால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

  டைமில் வெளியான ஆங்கில கட்டுரை:

  Can the World’s Largest Democracy Endure Another Five Years of a Modi Government?

  http://time.com/5586415/india-election-narendra-modi-2019

  Recent Articles

  முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

  சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

  ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

  இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

  வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

  ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

  கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

  தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

  ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

  Related Stories

  Stay on op - Ge the daily news in your inbox