EconomysocietyTamilnadu

தேர்தல் ஆணையம் கெடுபிடியால் அரிசி, பருப்பு விலை கடும் உயர்வு

கடந்த மாதத்தை விட தற்போது கிலோவுக்கு அதிகபட்சமாக 5 ரூபாய் வரை அரிசி விலை உயர்ந்துள்ளது. 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டை ரூ.1200 லிருந்து ரூ.1600- ஆக அதிகரித்துள்ளது. பச்சரிசி 1050- இல் இருந்து 1250-ஆக உயர்ந்துள்ளது. இட்லி அரிசி ரூ 780-லிருந்து 900 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆஃப் பாயில் பொன்னி அரிசி 870 ரூபாயில் இருந்து ரூ.1030-ஆக அதிகரித்துள்ளது.

பருப்பு விலை கிடுகிடு உயர்வு:
கடந்த மாதம் ரூபாய் 80 க்கு விற்ற துவரை பருப்பு தற்போது ரூ. 106 -ஆக உயர்ந்துள்ளது. பாசிப் பருப்பு விலை 90-ரூபாயில் இருந்து
ரூ. 106 ஆகவும், கடலைப்பருப்பு 75 ரூபாயில் இருந்து 86 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மசாலா பொருட்கள் தயாரிக்க தேவையான பட்டை விலை 900 ரூபாயில் இருந்து ஆயிரத்து 350 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல வெள்ளைப் பூண்டின் விலை கிலோ 30 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. ஏலக்காய் விலை கிலோ 1500-லிருந்து இரண்டாயிரத்து 500 ரூபாயாக விற்கப்படுகிறது.

பருப்பு வகைகள் மற்றும் மளிகை பொருட்கள் பெரும்பாலும் உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ஒரிசா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகின்றன. ஆனால் ஏற்கனவே விளைச்சல் குறைவு காரணமாக இவற்றின் வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில் வட மாநிலங்களில் மக்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பருப்பு மற்றும் மளிகை பொருட்களை கொள்முதல் செய்வதற்காக ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.