Backgroundfact checkPoliticsworld

உண்மையான UNTERTAKER… ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவன் அபூபக்கர் அல் பக்தாதி

இலங்கையில் சென்ற வாரம் ஈஸ்டர் பண்டிகையின் போது மனித மிருகங்களால் நிகழ்த்தப்பட்ட ரத்தவெறி பயங்கரவாத தாக்குதலுக்கு தாங்கள் தான் காரணம் என ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. நியூசிலாந்து தாக்குதலுக்கு பலிவாங்கும் வகையில் இது நிகழ்த்தப்பட்டதாக ஊடகங்கள் தங்கள் யூகங்களை அவிழ்த்துவிட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பிற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பு இல்லை என்றும், இஸ்லாத்தை கலங்கப்படுத்துவதற்காகவும், இஸ்லாமியர்கள் மீது மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பதற்காகவும் அதன் பெயரை பயன்படுத்தி பயங்கரவாத தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தி வருவதை பல்வேறு சர்வேதச நிகழ்வுகளின் மூலம் நாம் அறிந்திட முடியும். இதன் பின்னணியின் மிகப்பெரிய வர்த்தக நோக்கமும், அமெரிக்காவின் பேராசையும் உள்ளது என்பது தான் உண்மை.

இந்த சூழலில், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் எனக்கூறப்படும் அபூபக்கர் அல் பக்தாதி என்பவனின் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், “நமது போர் தற்போது தொய்வு நிலையில் உள்ளது. ஆனால் எதிரிகளை ஒடுக்க, போர் தொடரும். தீர்ப்பு நாள் வரும் வரை இது தொடரும்” என்று கூறியுள்ளார் பாக்தாதி. தனது ஆதரவாளர்களுடன் அமர்ந்து பாக்தாதி இப்படி பேசும் வீடியோவை ஐஎஸ்ஐஎஸ் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகங்கள், இணையதளத்தை கட்டுக்குள் வைத்திருக்கும், தீவிரவாத்தை ஒழிப்பேன் என சபதம் எடுத்திருக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு இந்த வீடியோ எங்கிருந்து பரப்பப்படுகிறது என்பது தெரியவில்லையாம். இதை மக்கள் அனைவரும் நம்ப வேண்டுமாம்.

இதே போல் தான் “அமாக்” என்ற ஊடகத்தை ஐ.எஸ் அமைப்பு நடத்தி வருவதாகவும் அதன் மூலமே இலங்கை தாக்குதலுக்கு அந்த அமைப்பு பொறுப்பேற்றதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தொடங்கி உலக ஊடகங்கள் வரை அனைத்தும் செய்தி வெளியிட்டன. அதில் நமது தமிழ் ஊடகங்கள் வெளியிடும் ப்ரேக்கிங் நியூஸ் படங்கள் போல் போட்டோஷாப் செய்யப்பட்டிருந்தது.எதன் வாயிலாக ஐ.எஸ் அமைப்பு பரப்புகிறது என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதுகுறித்து விரிவான தனி பதிவை நியூசு வெளியிடும்.

வாட்ஸ் அப்பில் ஒரு போலிச்செய்தி பரவினால் முதலில் அதனை யார் வெளியிட்டது என்பதை 2 நாட்களில் கண்டுபிடித்து தமிழக போலீசார் கைது செய்கின்றனர். ஆனால், இந்த அமாக்கின் படத்தை, ஐ.எஸ் அமைப்பினரின் வீடியோவை, பாக்தாதியின் வீடியோவை முதலில் யார் வெளியிட்டது? எதன் வாயிலாக அது முதலில் வெளியிடப்பட்டது? என்பதை கண்டுபிடிக்கவில்லை. இலங்கை தாக்குதலை மையப்படுத்தி அது இது என கட்டுக்கதைகளை அவிழ்த்துவிடும் ஊடகங்களும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.

இது ஒரு புறம் இருக்க இந்த பாக்தாதியின் கதையும் மிகவும் சுவாரஸ்யமானது. ஆம், WWE இல் வரும் UNTERTAKER இறந்து போய் மீண்டும் வருவார், அவருக்கு 7 உயிர்கள் உள்ளன என்று சிறுவயதில் நாம் பேசி இருப்போம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நெருக்கமான அந்த WWE நிறுவனம் உலக மக்கள் பலரை UNTERTAKER கட்டுக்கதையை வைத்து முட்டாளாக்கியது. தற்போது அதே அமெரிக்க அதிபர் ட்ராம்பும், அவரது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும் அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களும் பாக்தாதியை UNTERTAKER போல் பல முறை இறந்துவிட்டார் என செய்திகள் வெளியிடுவார்கள். ஆனால், அவர் மீண்டும் ஏதாவது ஒரு வீடியோவில் பேசுவார். தற்போதும் அதே போன்று 4வது முறையாக உயிர்த்தெழுந்துள்ளார்.

கீழ்காணும் படம் நமது தமிழகத்தின் நகைச்சுவை நாளிதழான தினமலரில் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

பாக்தாதி இறந்துவிட்டதாக பரவிய வீடியோ: https://youtu.be/1F1CEBbVMfI

இலங்கை தாக்குதலுக்கு காரணம், அதன் பூகோல அமைப்பும், அதன் பெட்ரோல், மற்றும் தாது வளமும். எங்கெல்லாம் பெட்ரோல் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவும் ISISம் இருக்கும். அரபு நாடுகளில் இது போல் போர் நடத்தி அந்நாட்டு மக்களை கொன்று குவித்துவிட்டு பெட்ரோல் வளத்தை அபகரித்தது அமெரிக்கா. தற்போது இலங்கையில் பெருமளவு பெட்ரோலிய படுகைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே ஈஸ்டர் தினத்தில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது.