ComedyTamilnadu

இதெல்லாம் ஒரு சாதனையா? சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த சோதனை

சென்னை மட்டுமின்றி தமிழகத்திற்கே அடையாளமாகவும் அறிவிக்கப்படாத சின்னமாகவும் இருப்பது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். சென்னையின் உயிர்நாடியான மத்திய பகுதியில் அமைந்துள்ள இதன் அழகிய கட்டிட அமைப்பும், பல்லாண்டு காலமாக இங்கு இயக்கப்படும் எண்ணற்ற ரயில்களின் சேவையும் இதன் புகழை உலகிற்கு சொல்லும்.

இதன் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும், பயணிகளுக்கு உரிய இடவசதி, ஆட்டோ, கார் பார்க்கிங் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் உள்ளன. ஆனால் எதையும் காதில் வாங்காத தமிழக்அ அரசு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டி கடந்த 5 ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதையடுத்து ரயில் நிலையத்தின் பெயரை மாற்றும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரயில் நிலையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பலகையில் சென்னை என்ற பெயர் இடம்பெறாமல் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையம் என்ற பெயரிடப்பட்டுள்ளது.

சென்ட்ரல் என்றவுடன் குழந்தைகளும் வழி சொல்லும் வகையில் இருந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் மாற்றத்தை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் கூட ரசிக்கவில்லை. இந்த நிலையில் உலகளவில் அதிக எழுத்துகளை கொண்ட பெயர் உள்ள ரயில் நிலையம் என்ற சாதனையை சென்ட்ரல் ரயில் நிலையம் தவறவிட்டுள்ளது. இதன் புதிய பெயரில் 57 ஆங்கில எழுத்துகள் உள்ளன.

ஆனால், பிரிட்டனில் உள்ள வேல்ஸ் ரயில் நிலையத்தின் பெயரில் 58 ஆங்கில எழுத்துக்களுடன் உலகிலேயே மிக நீண்ட பெயர் கொண்ட ரயில் நிலையமாக உள்ளது. இதன் மூலம் ஒற்றை எழுத்தில் சாதனை படைக்க தவறிவிட்டதாம். வேண்டுமென்றால் அந்த பெயரின் முன்னாள் பொன்மனச்செம்மல் என்ற பெயரையும் சேர்த்து மிகப்பெரிய பெயராக அறிவிக்கலாம்.