EconomyhiddenPolitics

அனில் அம்பானி கட்ட வேண்டிய வரியை ரபேல் ஒப்பந்தம் மூலம் அடைத்த காவலாளி மோடி

அனில் அம்பானிக்கு பிரான்சில் ஒரு டெலிகாம் கம்பெனி இருக்கிறது. அதன் பெயர் – Reliance Atlantic Flag France.
அந்தக் கம்பெனியின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்த பிரான்ஸ் அரசு, 2007-2010 காலகட்டத்துக்கு 60 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டியிருக்கிறது என்று கண்டறிந்தது.

7.6 மில்லியன் யூரோ செலுத்தி விடுகிறோம் என்று ரிலையன்ஸ் இறங்கி வந்தது. பிரான்ஸ் அதிகாரிகள் மறுத்து விட்டார்கள். பிரான்ஸ் மீண்டும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்த்து. 2010-12 காலத்துக்கு 91 மில்லியன் யூரோ வரி செலுத்த வேண்டும் என்றும் கோரியது பிரான்ஸ்.

அப்புறம்… அப்புறம்தான் பெரிய ட்விஸ்ட்
2015ன்படி ரிலையன்ஸ் செலுத்த வேண்டிய வரி 151 மில்லியன் யூரோ. 2015ல் ரபேல் ஒப்பந்தத்தை மாற்றி HAL இற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை நீக்கிவிட்டு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடுகிறார் மோடி.

அடுத்த ஆறே மாதங்களில் ரிலையன்ஸ் தருவதாகச் சொன்ன 7.6 மில்லியன் யூரோக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு 143 மில்லியன் யூரோவை தள்ளுபடி செய்துவிட ஒப்புக் கொள்கிறது பிரான்ஸ் அரசு.

ஷெர்பா என்கிற ஒரு தனியார் தொண்டு நிறுவனம், 2018 அக்டோபரில் ஒரு கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு அரசு அளித்த பதிலிலிருந்துதான் இந்த விவரம் தெரிய வந்தது. அப்படியானால் பிரான்ஸ்க்கு இது நஷ்டமா? இல்லை. என்னது? 143 மில்லியன் யூரோ – 1120 கோடி ரூபாய் வரி கிடைக்காமல் போவது பிரான்சுக்கு நஷ்டம் இல்லையா இல்லை. பிரான்சுக்கு வேறு வழியில் அதைவிடப் பெரிய லாபம் லாபம் வரும்போது இதை விட்டுக்கொடுக்கத்தானே செய்யும்?

அந்த லாபம்தான் ரபேல். காங்கிரஸ் அரசு குறைந்த கட்டணத்தில் அதிகமான ரபேல் விமானங்கள் வாங்குவதாக போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து குறைவான ரபேல் விமானங்களை தொழில்நுட்ப பகிர்மானம் ஏதுமின்றி 36 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போட்டார் இந்தியாவின் காவலாளியான மோடி. ஆக, அம்பானி பிரான்சுக்குத் தர வேண்டிய ரூ.1,120 கோடி ரூபாய் வரிப்பணத்துக்கும் சேர்த்து இந்தியா ரபேலுக்குத் தரப்போகிறது. நம் இந்திய மக்களின் பணத்தை எடுத்து அம்பானிக்கு உதவி செய்கிறார் மோடி. ஜூலியன் என்ற பத்திரிகையாளர் இதை டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.

Reference:
https://www.indiatoday.in/india/story/rafale-deal-french-authorities-anil-ambani-162-6-million-dollar-debt-narendra-modi-1501000-2019-04-13