hiddenIndiasociety

சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்… உச்சக்கட்ட தண்டனை வழங்கிய பாஜகவினர்

வேறு சாதி இளைஞரை திருமணம் செய்து கொண்டதால் மத்திய பிரதேசத்தில், இளம்பெண் தனது கணவனை தோளில் சுமந்து செல்ல வற்புறுத்தப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டம் தேவிகார் பகுதியில் பா.ஜ.கவை சேர்ந்த 20 வயது இளம்பெண், வேறு சாதி இளைஞர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இளம்பெண் தனது கணவனை தோளில் பல கிலோ மீட்டர் தூக்கி செல்ல வேண்டும் என பா.ஜ.க வினா் நூதன தண்டனை வழங்கினா்.அதன்படி கணவனை சுமந்தபடி சென்ற இளம்பெண்ணை, பின்தொடர்ந்த பா.ஜ.க கட்சி சோ்ந்த பலர், வழிநெடுகிலும் அவரை அவதூறாக பேசியபடி வந்துள்ளனர். கணவனை சுமக்க முடியாமல் பெண் கீழே சரிந்தபோது, இழிவாக பேசி சத்தமிட்டுள்ளனர்.வீடியோ பதிவு அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார், பெண்ணை இழிவுபடுத்தியதாக பாஜக சோ்ந்த 2 பேரை கைது செய்துள்ளனர். இதில் தொடர்புடைய மேலும் பலரை போலீசார் தேடி வருகின்றனர்.வீடியோவை காண: https://youtu.be/uKMVsOv2hbM