More

  பாஜக வெற்றி பெற கூட்டணி வேட்பாளர்களை கழற்றி விடுகிறதா திமுக?

  கோவையில் திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகின்றார். கோவையில் பாஜக வேட்பாளரை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்ற முனைப்பில் அதிமுகவின் இரண்டு மணி அமைச்சர்களும், பாஜகவின் தேசிய தலைமையின் நேரடி பார்வையில் பாஜகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது.

  அதே வேளையில், சிபிஎம் வேட்பாளருக்கு திமுக கூட்டணி கட்சிகளின் குறிப்பாக திமுகவின் பிரச்சாரம் என்பது மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது என கூட்டணிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினின் பிரச்சார பொதுக்கூட்டம் தவிர்த்து பெரிய அளவில் எந்த ஒரு பிரச்சாரத்தையும் திமுக முன்னெடுக்கவில்லை. கருத்துக்கணிப்புகளில் இருவருக்கும் சம அளவு ஆதரவு உள்ளதாக தெரிகிறது.

  அதேபோல் ராமநாதபுரத்திலும் திமுக கூட்டணி வேட்பாளரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகிகள் பிரச்சாரத்தில் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு திமுகவில் நிலவும் உட்கட்சி பூசலும், திமுக நிர்வாகிகளின் சாதிய பாசமும் நவாஸ் கனிக்கு சறுக்கலை ஏற்படுத்துகிறது. அங்கு பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அதேபோல் தினகரன் அணியின் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகன் வ.து.ஆனந்த் போட்டியிடுகின்றார். நயினார் நாகேந்திரனும், வ.து.ஆனந்தும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே போட்டி அதிகமாகியுள்ளது. இந்த இருவரில் யாருக்கு முஸ்லிம்களின் வாக்கு அதிகம் கிடைக்கிறதோ அவர்களே அங்கு வெற்றிவாகை சூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

  கோவை, ராமநாதபுரம் மற்றும் ஏற்கனவே தங்கள் வசம் உள்ள கன்னியாகுமரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக தனது அரசியல் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. அதற்காக திமுகவிடம் சில பேரங்களை பாஜக மேற்கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேரம் என்னவென்றால் கோவை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரியில் வெற்றிபெற திமுக அதன் கூட்டணி வேட்பாளருக்கான ஒத்துழைப்பை குறைத்துக்கொள்வதும், அதற்கு பதிலாக திமுகவின் கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் வெற்றிக்கு தங்கள் தரப்பு ஒத்துழைப்பை குறைத்துக் கொள்வதும் தான்.

  தூத்துக்குடியில் சொந்த கட்சியின் மாநில தலைவரை தோல்வியடைய திமுகவுக்கு பாஜக ஒத்துழைக்கும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்தாலும் அதுதான் களநிலவரம். ஏனெனில் தூத்துக்குடியில் பாஜக கனிசமான வாக்குகளை பெற்றாலும் அது வெற்றிபெறுவதற்கான வாக்காக இருக்க முடியாது என்பதால், தங்கள் தரப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய, கனிமொழியின் வெற்றியை எளிதாக்க பாஜக ஒப்புக்கொண்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

  அதேபோல் மத்திய சென்னை தொகுதியில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று எப்படியும் வெற்றிபெற்றுவிடலாம் என்று இருந்த திமுக வேட்பாளர் தயாநிதிமாறனுக்கு, அமமுக கூட்டணி வேட்பாளர் எஸ்டிபிஐ வேட்பாளர் தெகலான் பாஹவி கடும் போட்டியை உருவாக்கியுள்ளார். இதனால் தனது வெற்றியை எந்த வழியிலாவது உறுதி செய்துவிட வேண்டும் என்பதற்காக, தானாக வழியில் வந்த பாஜகவின் ஒத்துழைப்பால் குஷியாகியுள்ளார் மாறன். ஏற்கனவே பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு அதிமுக ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று பாமகவினர் குறைபட்டுக்கொண்ட நிலையில், தற்போது பாஜகவும் சற்று பின்வாங்கத் தொடங்கியுள்ளது. இது கூட்டணி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களை நம்ப வைத்து ஏமாற்றுவதுபோல் உள்ளதாக பாமக தரப்பு கடுப்பாகியுள்ளது. இது தொடர்ந்தால் மற்ற தொகுதிகளில் தங்களின் ஒத்துழைப்பும் குறையும் என பாமக எச்சரித்துள்ளது.

  கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் தங்களால் எந்த ஒத்துழைப்பையும் தர இயலாது ஏனெனில் அது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது எனக்கூறி திமுக தரப்பு மறுத்துவிட்டது என்று கூறப்படுகிறது.

  எதிர் எதிர் கூட்டணியாக இருந்தாலும் தங்கள் தரப்பு முக்கிய வேட்பாளர்களின் வெற்றியை முன்கூட்டியே உறுதி செய்ய பாஜகவும் திமுகவும் மறைமுக ஒத்துழைப்புடன் களமாடி வருகிறதோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை

  Recent Articles

  முஸ்லிம்கள் வேலை பாக்கல – சென்னை ஜெயின் பேக்கரி மீது வழக்கு

  சென்னை டி-நகரில் உள்ள Jain Bakeries & Confectioneries என்ற பேக்கரி இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் தனது விளம்பரத்தில் பேக்கரி உணவு பொருட்கள் அனைத்தும் ஜெயின்களால் செய்யப்படுகின்றது, முஸ்லிம் ஊழியர்கள் இல்லை...

  ஒடுக்கப்படும் முஸ்லிம்கள் – ட்விட்டரில் கொந்தளித்த 13 லட்சம் இந்தியர்கள்

  இந்தியாவில் எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும் அதில் இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்தும் வெறுப்பை பரப்பும் பணியை ஊடகங்களும். பாஜக, சங்பரிவார்களின் ஐ.டி.-விங்குகளும் செய்து வருகின்றன. இதனால் சாமானியர் கூட இஸ்லாமியரை கண்டால் சந்தேகத்தும்...

  வெறுப்பை கக்கும் இந்திய சேனல்கள் – வெகுண்டு எழுந்த அரபு அதிகாரிகள்..!

  ஐக்கிய அரபு அமீரக பெடரல் பப்ளிக் ப்ராஸிகியுசன் (UAE Federal Public Prosecution) கடந்த வாரம் பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதுமட்டுமின்றி குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் கடுமையான அபராதம் மற்றும் சிறை...

  கொரோனா உற்பத்தியிடமாக மாறிய கோயம்பேடு.. – கடலூர் திரும்பிய 107 பேருக்கு கொரோனா உறுதி..!

  தமிழக அரசின் தவறான முடிவால் கோயம்பேடு சந்தை மார்கெட் கொரோனா உற்பத்தி மார்கெட்டாக மாறியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் 4 நாட்கள் முழு...

  ஆபத்தில் சென்னை மாநகரம்… மீளும் தமிழகம்!

  கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால், கடந்த 10 நாட்களாக தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் புதிதாக யாருக்கும்...

  Related Stories

  Stay on op - Ge the daily news in your inbox