societyTamilnadu

மருத்துவமனை அலெட்சியம்… பெண் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் அவலூர் கிராமத்தை சேர்ந்தவர் மங்கம்மாள். இவர் கார் விபத்தின் போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் அறுவை சிகிச்சை முடிந்து மயக்க நிலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட அவர், செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை நிர்வாகத்தின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் பெண்ணின் உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.