EconomyhiddenIndiaPolitics

ரூ.3 லட்சம் கோடி கள்ள நோட்டுக்களை மோடி, அமித்ஷா அச்சிட்டார்களா?

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி புழக்கக்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் வங்கி, ஏடிஎம் வாசல்களில் காத்துக்கிடந்து 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாமல் இறந்தனர். பல திருமணங்கள், முக்கிய நிகழ்ச்சிகள் ரத்தாகின. ஆயிரக்கணக்கான சிறு, குறு நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். இதனால் வீழ்ந்த இந்திய பொருளாதாரம் இன்னும் மீண்டு எழவில்லை. ஆனால், கருப்புப்பணமும், கள்ள நோட்டுக்களும் தொடர்ந்து புழக்கத்தில் உள்ளன.

இந்த நிலையில், ரூபாய் நோட்டு தடை செய்யப்பட்டபோது பணப்பரிமாற்றம் செய்யும் செயல்பாடுகளில் பிரதமர் அலுவலகமும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் தலையிட்டதாக இந்திய உளவு அமைப்பான ’ரா’வை சேர்ந்த உதவியாளர் ஒருவர் கூறியுள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு ஒன்றை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் கடந்த ஏப்ரல் 9ம் தேதி வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் பண மதிப்பழிப்பின்போது ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் வெளிநாட்டில் அச்சடிக்கப்பட்டு, டெல்லி அருகேயுள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தின் வழியாக இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும், அதை ரிசர்வ் வங்கியில் கொடுத்து மாற்றியதாகவும் ஆதாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிரதமர் அலுவலகத்துக்கும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கும் இந்த முறைகேடுகளில் நேரடி தொடர்பிருப்பதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த வீடியோவானது மும்பையில் உள்ள ஹோட்டல் ட்ரைடெண்ட்டில் எடுக்கப்பட்டது. அதில் ரகுல் ரதனேகரும், அருகில் அவரது மனைவியும் உள்ளனர்.

பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த நிபுண் சரண் என்பவர் இந்த திட்டத்தை ஒருங்கிணைத்தார் என்றும், 26 பேரின் கண்காணிப்பில் இந்த குழு அமைக்கப்பட்டதாக வீடியோவில் கூறப்படுகிறது. அமித் ஷாவின் பெயர் இந்த வீடியோவில் இரண்டு இடங்களில் வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கபில் சிபல், “இந்த ஆதாரங்களை தொலைக்காட்சி உரிமையாளர்கள் வெளியிடுவார்கள் நான் நம்புகிறோம். பல மணி நேரங்களுக்கு ஓடும் இந்த வீடியோவில், பண மதிப்பழிப்பு மிகப்பெரிய நிதி மோசடி என்பதை நிரூபிக்க சிறு பகுதியை வெளியிட்டுள்ளோம். பணமதிப்பிழப்பின் போது அமித்ஷா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு பழைய ரூபாய் தாள்களுக்குப் பதிலாக புதிய ரூபாய் தாள்களை மாற்றிக் கொடுத்தனர். இதற்கு 15 முதல் 40 விழுக்காடு கமிஷன் பெற்றுக்கொண்டார்கள்” என குற்றம்சாட்டினார்.

இதில் குறிப்பாக அமித்ஷா மகன் ஜெய்ஷாவிற்கு தொடர்பு இருப்பதாகவும், புதிய பணத்தை கமிஷன் பெற்று மாற்றிக்கொடுத்ததற்கு ஜெய்ஷா மூளையாக செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டு அப்போதே எழுந்தது. பண மதிப்பிழப்பை தொடர்ந்து, ஜெய்ஷாவினுடைய சொத்து மதிப்பு மூன்று வருடங்களில் 16 ஆயிரம் மடங்கு கூடியுள்ளது. 2014-15 ஆம் ஆண்டில் ரூபாய் 15 ஆயிரமாக இருந்த சொத்து மதிப்பு 2015-16 ஆம் ஆண்டில் ரூபாய் 80 கோடியாக பெருகியுள்ளது. இதன்மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டில் ரூபாய் 6,230, 2014 இல் ரூபாய் 1,724 கடனாக கணக்கு காட்டிய ஜெய்ஷாவின் நிறுவனம் மத்தியில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தவுடன் வருமானம் பல மடங்கு பெருகியுள்ளது. அதன்படி 2014-15 இல் ரூபாய் 50 ஆயிரம் வருமானம் இருந்தபோது ரூபாய் 18,728 லாபம் காட்டப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் வரவு-செலவு வைத்திருந்த நிறுவனம், 2015-16 இல் ரூபாய் 80.5 கோடி கணக்கு காட்டியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த கணக்கின்படி 16 லட்சம் சதவீதம் சொத்து மதிப்பு பெருகியிருக்கிறது குறிப்பிடத்தக்கது

வீடியோ லிங்க்: https://youtu.be/3JiJq0MEa4g