Economytechnology

சிறு, குறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள வாட்ஸ் அப் பிஸ்னஸ் ஆப்

இந்தியாவில் சிறுகுறு தொழில் செய்பவர்களுக்காக வாட்ஸ் ஆப் நிறுவனம் கொண்டு வந்துள்ள பிசினஸ் ஆப் பற்றி தெரியுமா?

உலகமெங்கும் பல்லாயிரம் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் நிறுவனம் வியாபாரிகளுக்காக பிஸ்னஸ் ஆப்பை ஆண்டிராய்டு இயங்குதளத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்துள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஐ.ஓ.எஸ் இயங்குதளத்திற்கும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பின் பிஸினஸ் ஆப் சிறு தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை எளிதாகவும் விரைவாகவும் தொடர்பு கொள்ள உதவுகிறது. இந்த பிஸினஸ் வாட்ஸ் ஆப்பில் வணிகம் குறித்த சுயவிவரங்கள், கடையின் முகவரி, மெயில் ஐடி, இருக்குமிடம் ஆகிய தகவல்களை வைத்திருக்க முடியும். உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக உரிமையாளர்கள் பிஸினஸ் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர்.