fact checkfarmersPoliticsTamilnadu

தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது லயோலா கல்லூரியா? உண்மை என்ன?

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. அதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், அ.தி.மு.க கூட்டணி 3-5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது எனவும், அ.ம.மு.க 2 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதே போல் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 9 -11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், அ.தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது என்றும், அ.ம.மு.க 3 – 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனை பலர் பலவாறு விமர்சித்து வரும் நிலையில். கருத்துக்கணிப்பிற்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என லயோலா கல்லூரி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி எந்த ஊடகமும் இந்த கருத்துக்கணிப்பில் தங்கள் கல்லூரி பெயரை பயன்படுத்த வேண்டாம் என கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.