cinemahiddenIndiaPolitics

பாஜக அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய களமிறங்கிய 100 இயக்குநர்கள்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக அரசுக்கு எதிராக வெற்றிமாறன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர்.

ஜனநாயகத்தை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் நாடு முழுவதும் ஒன்றிணைத்துள்ள இயக்குநர்கள், மத்திய பாஜக அரசில் நிகழ்த்தப்பட்ட பசு படுகொலைகள், மத கலவரங்கள், இராணுவத்தை அரசியலுக்காக பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் பிரபல தமிழ் இயக்குநர், வெற்றிமாறன், மலையாள இயக்குநர் ஆஷிக் அபு, சனல் சசிதரன், ஆனந்த் பத்வர்தன், தீபா தன்ராஜ், குர்வீந்தர் சிங் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் நாடு முழுவதும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.