archiveOctober 14, 2019

hiddenIndiakashmir

காஷ்மிரில் வீதிக்கு வராமல் வீட்டுக்குள் முடங்கி ஒத்துழையாமை போராட்டம் நடத்தும் மக்கள்

காஷ்மீர் மாநில வியாபாரிகள் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக உண்மை கண்டறியும் குழு ஒன்று அறிக்கை வெளியிட்டு உள்ளது.

4 கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கொண்ட அந்த உண்மை கண்டறியும் குழு கள நிலவரத்தை ஆராய்ந்து, அறிந்து தனது அறிக்கையை இந்திய மக்களின் பார்வைக்கு வைத்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தின் இறுதியில் காஷ்மீர் மாநிலத்தில் திடீரென ராணுவம் குவிக்கப்பட்டது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டார்கள். நாடு முழுவதும் காஷ்மீரில் என்ன நடக்கிறது என குழம்பிக் கொண்டிருந்த நேரத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதி திடீரென காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.

1975-ல் அரசியல் சாசனச் சட்டம் எப்படி தவறாக கையாளப்பட்டு நாடு சர்வாதிகாரத்தின் கையில் பிடிபட்டதோ அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டது. தனது அருதிப் பெரும்பான்மையை பயன்படுத்தி பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு சர்வாதிகரப் போக்கில் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக பலரும் கண்டனக் குரல்கள் எழுப்பினார்கள். ஆனால் யாருடைய குரலும் காஷ்மீரிகளுக்கு கேட்கவில்லை.
காஷ்மீரிகளின் குரலோ பள்ளத்தாக்கின் உள்ளேயே புதைக்கப்பட்டது.

காஷ்மீருக்குள் வீசும் காற்றை கூட இந்திய ராணுவ வீரர்கள் விசாரித்துவிட்டுத்தான் அனுப்பினார்கள். ஆனால் காஷ்மீரிகளோ தங்களது மாநிலம் துண்டாடப்பட்டது குறித்தோ, தலைவர்கள் சிறைவைக்கப்பட்டது பற்றியோ அல்லது தங்களது சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டது குறித்தோ எதுவும் அறியாமல் வீட்டுக்குள் முடங்கியிருந்தார்கள்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட பிறகு அம்மாநில மக்கள் பல முறை வீதிகளில் இறங்கி போராடியும் அது வெளிச்சத்திற்கு வரவில்லை. அவர்களின் குரல் வலைகள் இந்திய ராணுவத்தின் கைகளில் இருந்ததால் நமது காதுகளில் எட்டவில்லை. எட்டு வயது சிறுவன் முதல் எண்பது வரை கிழவன் வரை கலகக்காரன் என கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆனால், இவை எல்லாவற்றையும் மீறி காஷ்மீர் அமைதியாக இருப்பதாக உலகை நம்பவைக்க மத்திய பாஜக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது. பல வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு காஷ்மீர் அமைதியாக இருப்பது போலவும், காஷ்மீரிகள் பாரதிய ஜனதாவின் சர்வாதிகார போக்கை ஏற்றுக் கொண்டது போலவும் திரிபு செய்ய முயற்சித்தது மத்திய அரசு. ஆனால், எதுவும் பலனளிக்கவில்லை.

பாரதிய ஜனதா அரசின் சர்வாதிகாரப் போக்கினால் அம்மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது, பூட்டிய கடைகள் திறக்கப்படவில்லை. ஆனால் இதற்கு போராட்டக்காரர்களும், பாகிஸ்தானிய தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் தான் காரணம் என்று மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உண்மை கண்டறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீரிகள் தங்களது சிறப்பு அந்தஸ்தை நீக்கி தங்களது கவுரவத்தை குறைத்த இந்திய அரசுக்கு வித்தியாசமான முறையில் பாடம் புகட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. “இவ்வளவு நாட்களாக வீதிக்கு வந்து போராடிய காஷ்மீரிகள் தற்போது வீதிக்கு வரப்போவதில்லை என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ”

அம்மாநிலத்தில் உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளை திறக்க மறுத்துள்ளனர். இதனால் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இவ்வளவு நாட்களாக கடைகளை மூடச் சொல்லிய ராணுவம் தற்போது கடைகளைத் திறக்க சொல்லி மிரட்டுவதாக அங்குள்ள வியாபாரிகள் உண்மை கண்டறியும் குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு மிரட்டினாலும் கடைகளைத் திறக்கப்போவதில்லை என்று கூறும் வியாபாரிகள், தங்களை புறக்கணித்துவிட்ட இந்தியாவை தாங்களும் புறக்கணிப்பதாக கூறுகின்றனர்.

இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கான காலம் இறந்துவிட்டதாக காஷ்மீர் வியாபாரிகள் கருதுவதாக கூறும் உண்மை கண்டறியும் குழு, காஷ்மீரிகள் புதிதாக இந்த ஒத்துழையாமை போராட்ட முறையை கையில் எடுத்துள்ளதாக கூறுகிறது.

காஷ்மீரின் மீண்டும் இயல்பு நிலை திரும்ப வேண்டுமானால் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370 மற்றும் 35A மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், காஷ்மீர் மாநிலம் குறித்து பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் உண்மை கண்டறியும் குழு வலியுறுத்தி உள்ளது.

தி வயர் ஆங்கில இணையதளத்தில் வெளியான கட்டுரையை நியூசு குழு தமிழில் மொழிபெயர்த்து வழங்குகிறது.
Indiatechnology

“சமூக வலைதள கணக்குகளை ஆதாருடன் இணைக்கணும்” – உச்சநீதிமன்றம் வைத்த குட்டு..!

சமூக வலைதள கணக்குகளை ஆதாரோடு இணைக்கவேண்டும் என கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் போலியான கணக்குகளின் மூலம் வதந்திகளும் பொய்யான தகவல்களும் பரப்புவதை தடுக்க, சமூக வலைதளங்களை பயன்படுத்தி வரும் இந்தியர்களின் கணக்குகளோடு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சமூக வலைதளங்களில் ஆதார் எண்ணை இணைக்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

fact checkIndiaTamilnadu

மோடி குப்பை அள்ளியபோது படப்பிடிப்புக்குழு இருந்ததாக பரவும் பொய்யான புகைப்படம்

சீன அதிபர் ஷி ஜின்பிங் – பிரதமர் மோடி இடையே மாமல்லபுரத்தில் நிகழ்ந்த சந்திப்புக்கு நிகராக பேசுபொருளாக உருவெடுத்திருக்கிறது மோடியின் கடற்கரை பிலாகிங். பிலாகிங் என்ற ஆங்கில வார்த்தைக்கு நடைப்பயணம் சென்றவாறே குப்பையை சேமித்தல் என்று அர்த்தம்.

தமிழகம் வந்தாலே உலகளவில் hashtagகுகள் ட்ரெண்ட் ஆகும் அளவு மோடிக்கு எதிர்ப்பலைகள் கிளம்பும் நிலையில், தற்போது மோடி கடற்கரையை சுத்தம் செய்யும் போது படப்பிடிப்பு ஊழியர்கள் நிற்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா காட்சிகளை பதிவு செய்வதை போல் ஒரு குழுவை வைத்துக்கொண்டு குப்பை பொறுக்கியதாக ஒரு படத்தை பகிர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அந்த படம் உண்மை தானா எனத்தேடியபோது, அது ஸ்காட்லாந்தில் கடந்த 2005ம் ஆண்டு அங்குள்ள கடற்கரை ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. அது தான் கோவளத்தில் எடுக்கப்பட்டதாக தற்போது பரவி வருகிறது.

ஆனால், மோடி கோவளத்தில் எடுத்த புகைப்படங்களை அடிப்படையாக வைத்து பார்த்தபோது, அது யதாரத்தமானதாக இல்லை. திறமைவாய்ந்த புகைப்பட கலைஞர் மூலம் எடுத்ததை போல் தான் அது உள்ளது. படப்பிடிப்பு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், படப்பிடிப்பு என பகிரப்படும் படம் தவறானது.

கோவளம் கடற்கரையில் எந்தவித படப்பிடிப்புகள் இல்லையென்றாலும் கூட மோடிக்கு ஏது அவ்வளவு குப்பை என்ற சந்தேகம் வலுக்கிறது. இதற்கு காரணம் அவர் தங்கியிருந்த பிஷர்மேன் கோவ் நட்சத்திர ரிசார்ட். இந்த ரிசார்டின் கட்டுப்பாட்டில் தான் அந்த கடற்கரையும் அமைந்துள்ளது. ரிசார்ட் ஊழியர்களால் தினசரி பராமரிக்கப்படும் இந்த கடற்கரையில், குப்பைகள் எங்கிருந்து வந்தது என்பது தான் பெரும்பாலான சாமானியர்களின் கேள்வி..!

அதே போல், சுவச் பாரத் என்ற பெயரில் நாடு முழுவதும் தூய்மைப் பணிகளை மேற்கொள்வதாக சொல்லும் பா.ஜ.க அரசு, அந்த திட்டத்தை கொண்டு பெரும்பாலான இடங்களில் கண்துடைப்பு நாடகத்தையே அரங்கேற்றி இருக்கிறது.மத்திய அமைச்சர்கள் முதல் மாவட்ட தலைவர்கள் வரை குப்பைகளை தெருவில் வீசிவிட்டு பின்னர் அதை தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்தும் காட்சிகள் ஒன்றும் இந்தியாவுக்கு புதிதல்ல.

இந்த கண்துடைப்பு நாடகத்தை கைவிட்டு துப்புரவு தொழிலாளர்களின் நலனுக்காகவும், மலக்குழி மரணங்களை தடுத்து நிறுத்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே தூய்மை இந்தியாவிற்கு உண்மையான பொருள் தகும்.

articleBackgroundMedia Criticssociety

“புள்ளிங்கோ” என்ற பெயரில் சென்னை பூர்வகுடிகளை கொச்சைப்படுத்தும் யூடியூப் சேனல்கள்

“எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்” என சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் பாடிய பாடல் வைரலானதை தொடர்ந்து ட்ரெண்டானது இந்த புள்ளிங்கோ வார்த்தை. சென்னையில் அடித்தட்டு பூர்வக்குடி மக்கள் தங்கள் இளைஞர்களை பாசத்துடன் புள்ளிங்கோ அழைப்பார்கள். ஆனால், இந்த வார்த்தை டிரெண்டானவுடன் அதை வைத்து வீடியோ வெளியிடும் யூடியூப் சேனல்களோ சென்னை இளைஞர்களின் உடல்மொழி, ஆடை கலாச்சாரம், பேச்சு வழக்கை கேலி செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

சென்னையின் பூர்வகுடி மக்களின் எந்த அடிப்படை வாழ்வியல் பிரச்சனைகள் பற்றியும் அதிகம் வாய் திறக்காத இந்த யூடியூப் சேனல்கள், டிரெண்டுக்காக அவர்கள் அழைக்கும் புள்ளிங்கோ வார்த்தையை வைத்து இழிவுபடுத்தி, அவர்களை ஏதோ ஒரு ஜந்து போல் பாவித்து சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கானா, ஹிப் ஹாப், ரேப் கலைஞர்கள் அதிகம் உள்ள வட சென்னையில், தங்கள் கலைக்கு தகுந்தவாறு சிகை, உடை அலங்காரம் செய்து கொள்கிறார்கள். ஆனால், வட சென்னைக்குள் சென்று பார்த்தால் 100ல் 10 பேர் தான் அவ்வாறு இருப்பார்கள். ஆனால், இந்த யூடியூப் சேனல்களோ வட சென்னை புள்ளிங்கோ அனைவருமே தலையில் வண்ணச்சாயம் பூசிகொள்பவர்கள் போன்றும், அனைவருமே ரவுடிகள் போன்றும், அனைவருமே டியோ பைக்கை வைத்து போக்குவரத்து விதிகளை மீறி விபத்துக்களை ஏற்படுத்துபவர்கள் போன்றும் சித்தரிக்க முயல்கிறார்கள்.

வட சென்னையில் ரவுடிகளே இல்லையா என்றால் இருக்கிறார்கள். ஆனால், அதை விட பல மடங்கு அதிகமாக அங்கு நல்ல கானா பாடகர்கள், கால்பந்து வீரர்கள், பாக்சர்கள், கிரிக்கெட் வீரர்கள், தடகள் வீரர்கள், எழுத்தாளர்கள், திரைப்பிரபலங்கள், நகைச்சுவை கலைஞர்கள், உழைப்பாளிகள், மீனவர்கள், கட்டிட கலைஞர்கள், பொறியாளர்கள், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், ஆபத்து என்றால் ஓடி வந்து உதவும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்.

படித்து பணம் சம்பாதித்துவிட்டு, சாதியால் வர்க்கத்தால் ஏற்றத்தாழ்வு காட்டும் எலைட் வந்தேரிகள் நிறைந்த சென்னையில், அனைவரையும் சமமாக பாவித்து நம்ம புள்ளிங்கோ என அரவணைக்கும் பூர்வக்குடி சென்னைவாசிகள் அவர்கள் தான். ஆனால், டிரெண்டிங் வீடியோவை பதிவிட்டால் பணம் ஈட்டலாம் என அலையும் இந்த யூடியூப் சேனல்கள், பழைய சினிமா படங்களின் பாணியில் வட சென்னை இளைஞர்களை கெட்டவர்கள், வில்லன்கள், ரவுடிகள், கொலைகாரர்கள் என்றே சித்தரிக்கின்றன.

“புள்ளிங்கோ” டியோவை வைத்துக்கொண்டு சாலை விதிகளை மீறுவது தவறு இல்லையா என்றால் தவறு தான். அவர்களை தண்டிக்க வேண்டும். அதற்காக அவர்கள் அனைவருமே அப்படிப்பட்டவர்கள் என காட்டுவது எந்த வகையில் நியாயம். இவர்களை விமர்சிக்கும் யூடியூப் சேனல்கள், சென்னை ஈ.சி.ஆரில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்ரக பைக்குகளில் ரேஸ் சென்று விபத்துக்களை ஏற்படுத்தும் பணக்கார இளைஞர்கள், தென் தமிழகத்தில் முறுக்கு மீசையுடன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ராயல் என்பீல்டில் தங்கள் சாதிப்பெயரை அச்சிட்டுக்கொண்டு சாதித்திமிருடன் போலீஸுக்கு அடங்காமல் வேகமாக செல்பவர்கள், குடித்திவிட்டு ஆடிகாரில் சென்று சாலையோரம் படுத்துறங்கும் ஏழைகள் மீது மோதி கொல்பவர்கள் பற்றி பேசியுள்ளார்கள்

“புள்ளிங்கோ”க்களை ரவுடிகள் என்ற வகையில் சித்தரிப்பவர்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கௌரவக்கொலைகளை, சாதி வன்முறைகளை நிகழ்த்தும் ஆதிக்க சாதியினர் பற்றி பேசத்தயங்குவது ஏன்? அனைத்து ஊர்களிலும், சாதிகளிலும் ரவுடிகள், சமூதாய விரோதிகள் உள்ளர்கள். ஆனால், தமிழகத்தின் பிற சாதி, பகுதி மக்கள் அனைவரையும் ரவுடிகள் என பொதுமைப்படுத்தி அழைக்கப்படாதபோது, வட சென்னையில் ஒரு சிலர் செய்யும் குற்றங்களுக்கு ஒட்டுமொத்த பகுதி மக்களையும் தவறாக சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?

PoliticsTamilnadu

ராஜீவ் காந்தியை கொன்றது நாங்கள் தான் எனப்பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு

கடந்த 12-ம் தேதி விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் என்பதை பெருமையாக சொல்வோம். அவரை கொன்றது சரிதான். ராஜீவ் காந்தியை தமிழர் தாய் நிலத்திலேயே கொன்று புதைத்தான் என்பதை வரலாறு பேசும்” என்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் சீமானை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் ராஜிவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றத்தின் அடிப்படையில் உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார். அதே போல் திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி.ஜெயக்குமார் டி.ஜி.பி அலுவலகத்தில் சீமான் மீது புகார் அளித்தார்.

இந்த நிலையில், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

articlehiddenPolitics

தமிழக பள்ளிகளில் அரசு ஆதரவுடன் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்!

ஆர்.எஸ்.எஸ். கோட்டையாக தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மாறி வருகின்றன. தமிழகம் முழுவதும் பாஜக அனுதாபிகள், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளால் நடத்தப்படும் தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். ரகசிய தீவிரவாத பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளிகளிலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ளது. கோவை மாவட்டத்தின் பல அரசு பள்ளிகளில் தூய்மை பணி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியுள்ளது. இவர்கள் தூய்மை பணி என்ற பெயரில் பள்ளிக்குள் நுழைந்து நல்லவர்கள் போல் மாணவர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்பட்டு, தூய்மை என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். சித்தாங்களை புகுத்த முயற்சிப்பார்கள். மேலோட்டமான பார்வையில் தூய்மைப்பணி தானே என இவர்களுடன் இணையும் மாணவர்களும் ஆர்.எஸ்.எஸ். மத பயங்கரவாத சித்தாந்தால் மூளைச்சலவை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இதே போல்.கன்னியாகுமரி மாவட்டம் விவேகானந்தபுரம் கே.வி. தனியார் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். சாகா பயங்கரவாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

-கே.வி. தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி, குமரி

சாகா பயிற்சி வகுப்பில், நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்படுவதுடன், அவர்கள் வந்தேறிகள், அவர்களை இந்தியாவை விட்டே விரட்ட வேண்டும், அவர்களை கொல்ல வேண்டும் என்பது போன்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு சட்டவிரோத ஆயுதப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆர்.எஸ்.எஸ். சாகா பயிற்சியின் உண்மை குறித்து அந்த அமைப்பில் இருந்து வெளியேறியவரின் பேச்சை கேளுங்கள்

இதே போல் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் ஒரு வார காலமாக நடந்துள்ளன. இந்த நிலையில், இன்று சென்னை மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி பேச்சாளருமான ராமசுப்பிரமணியத்தின் ஸ்ரீ நடேசன் வித்தியாலயா மேல்நிலைப்பள்ளியில் இன்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்தியாவில் 2 முறை தடை செய்யப்பட்ட அமைப்பவாகவும், மத்திய பாஜக அரசை பின்னால் இருந்து இயக்கும் சக்தியாகவும், தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொலை செய்த அமைப்பாகவும், பாபர் மசூதி இடிப்புக்கு காரணமாக இருந்த, இந்தியாவில் லட்சக்கணக்கான மதக்கலவரங்களை நிகழ்த்திய RSS அமைப்பு சிறுவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் அமைப்பில் இணைத்து பயங்கரவாதிகளாக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. வடநாட்டில் பெரிய அளவில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்கு பிறகு தங்கு தடையின்றி நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி, கல்லூரிகளில் அரசியல்சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில், எந்த அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குகிறது என்ற பெற்றோர்கள் எழுப்பாவிட்டால், உங்கள் குழந்தைகளும் எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதியாக மாறக்கூடும்.

BackgroundhistoryPoliticsTamilnadu

ராஜீவ் காந்தியை கொல்லவில்லை என்ற பிரபாகரன்… கொன்றோம் என பேசிய சீமான்!

“ராஜீவ் காந்தி படுகொலை – எங்கள் மீது சுமத்தப்பட்ட அபாண்டமான குற்றச்சாட்டு” என்றார் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன். அதேபோல் விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் பிரபாகரன் கருத்தையே முன்மொழிந்தார்.

ஆனால் (12.10.2019), விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம்” என்கிறார். ‘நாங்கள்’ என்னும் போது அதில் யார் யார் அடக்கம்?

தமிழர்கள் சேர்ந்து ராஜீவ் காந்தியை கொன்றதாக கூறுகிறார். அந்த ‘தமிழர்கள்’ யார்? ராஜீவ் காந்தியை கொலை செய்தது விடுதலை புலிகள் தான் என்று அபாண்டமான குற்றச்சாட்டை முன்வைக்கும் பாஜகவின் சுப்ரமணியசாமி போல், சீமான் விடுதலை புலிகள் மீது மீண்டும் இக்குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.

காணொளி: வீடியோ

தேர்தல் பிரச்சாரத்தின் போது திடீரென ராஜீவ் காந்தி படுகொலையை குறித்து எதற்காக சீமான் வலிந்து பேசுகிறார்?

18.10.2019 முதல் 21.10.2019 ஆம் தேதி வரை விடுதலை புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமா? இல்லையா? இந்த அறிவிப்பை நீடிக்கச் செய்வதா? விலக்கு அளிப்பதா? என நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது. இந்நிலையில் மீண்டும் இவ்வாறு பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சீமான்.

ஏற்கனவே ஈழப்போரில் கொல்லப்பட்ட தமிழர்கள் குறித்து சர்வதேச விசாரணை நடைபெற்ற மன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் அனைத்துலக நாடுகள் ஒருங்கிணைப்பாளராக இருந்த பால் நியூமன் சமர்ப்பித்த 41 பக்க அறிக்கைகளில் 40 வது பக்கத்தில், விடுதலை புலிகளின் எதிர்ப்பாளர்கள் முன்வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் இருந்தன.

சிறுவர் சிறுமிகளை பெற்றோர்களிடம் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் பிரித்து கட்டாயமாக இயக்கத்தில் சேர்த்தனர் என்றும், பெண்களுக்கு கட்டாய கரு கலைப்பு செய்யப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்டனர் என்றும் அவ்வறிக்கை கூறியது. நாம் தமிழர் கட்சி கூறியிருந்த இந்த குற்றச்சாட்டு மேலும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால் சீமான், ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்று சமாளித்தார். தனது கட்சியில் இருந்த இளைஞர்களிடம், ‘அரசியல் எதிரிகள் நம்மை பிரிக்க கையாளும் சதி’ என்றார்.

நேற்று (12.10.2019) தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ‘நாங்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றோம்’ என எதற்காக பேசினார்? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘தமிழர்கள் தான் ராஜீவ் காந்தியை கொன்றார்கள்’ என கூறி சர்வதேச அரசியல் படுகொலையை தமிழர்கள் மீது சீமான் திணிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

– தமிழச்சியின் முகநூல் பதிவின் ஒரு பகுதி