archiveApril 29, 2019

IndiaPolitics

சவுக்கிதார் மோடிக்கு எதிராக போட்டியிடும் உண்மை சவுக்கிதார்!

காஷ்மீரில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதனிடையே இவரை சமாஜ்வாடி கட்சி பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தேஜ் பகதூரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடி தன்னை சவுக்கிதாராக அறிவித்துள்ள நிலையில் அவருக்கு எதிராக உண்மையான சவுக்கிதார் போட்டியிடுகிறார்.

Headlines

அதிர்ச்சியில் மோடி… வாரணாசியில் போட்டியிடும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத பிரதமர் மோடியை எதிர்த்து உத்தர்அ 111 விவசாயிகள் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்வார்கள் என்று கூறினார். இந்த நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்த அய்யக்கண்ணு அந்த முடிவை கைவிட்டார். நதிகள் இணைப்பு தொடர்பான கோரிக்கையை பாஜக தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதாக அமித்ஷா உறுதியளித்ததாலும், அவருக்கு வாரிய தலைவர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டதாலும் அய்யக்கண்ணு பாஜகவுக்கு தேர்தலில் ஆதரவு அளித்துள்ளாதாக செய்திகள் வெளியாகின.

இதனால், மோடிக்கு எதிராக விவசாயிகள் போட்டியிடப்போவதில்லை என பாஜக தலைமை ஆறுதல் அடைந்தது. இந்த நிலையில் அய்யாகண்ணுவின் பேச்சை காதில் கூட வாங்காத விவசாயிகள், மோடிக்கு எதிராக போட்டியிடுவதில் உறுதியாக இருந்தனர். இந்த சூழலில், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மோடிக்கு எதிராக போட்டியிட வாரணாசிக்கு சென்றுள்ளனர். அங்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தங்கியிருக்கும் தங்களை போலீசார் மிரட்டுவதாகவும் தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

fact checkworld

இலங்கையில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடையா? பொய்யை பரப்பும் ஊடகங்கள்

நாட்டிலுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது அடையாளத்தை வெளிப்படுத்த முடியாதவாறு முகத்தை மூடும் விதத்தில் ஆடையோ அல்லது வேறு பொருட்களையோ அணிவதை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சகல மக்களினதும் பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், இஸ்லாமிய பெண்கள் பர்தாவுடன் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தில் பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை என்றாலும் பெண்கள் தங்கள் விருப்பத்தின் பேரிலும், பிற ஆண்களின் தவறான பார்வைகளில் இருந்து தற்காத்து கொள்ளவும் முகத்திரை அணிகிறார்கள். நமது தமிழகத்திலேயே முகத்தை மூடிய இஸ்லாமிய பெண்களையும், முகத்தை மூடாமல் பர்தா மட்டும் அணிந்த பெண்களையும் நாம் பார்த்திருப்போம்.

இந்த சூழலில் அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு முகத்திரைக்கான தடை தானே தவிர பர்தாவுக்கான தடை இல்லை. ஆனால், இந்த வித்தியாசம் அறியாத இந்த அறிவுஜீவி ஊடகங்கள் பர்தாவுக்கு தடை என செய்தி வெளியிட்டு வருகின்றன. இது முழுக்க முழுக்க தவறான செய்தி. இந்த தவறான செய்தியை அடிப்படையாக கொண்டு இந்துத்துவ மதவாத அமைப்புகள் இந்தியாவிலும் பர்தா அணியும் பெண்களுக்கு எதிராக தாக்குதல் நடத்த வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

hiddenIndia

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவரை அடித்துக் கொன்ற போலீஸ்

ராஜஸ்தான் மாநிலம் பரான் மாவட்டத்தை சேர்ந்தவர் முஹம்மது ரம்ஜான். 60 வயதான இவருக்கு 1992 ஆண்டு வழக்கு ஒன்றில் கீழ் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். அங்கு காவல்துறையால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமானது.

இதனால், கோட்டா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் ரம்ஜானுடன் மருத்துவமனையில் பாதுகாப்புக்காக தங்கி இருந்த 2 போலீசார் குடி போதையில் மதத்தின் பெயரால் திட்டி, பைப் மூலம் 10 தடவை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரம்ஜான் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து 2 காவலர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்