India

hiddenIndiaPolitics

நிறைவேறியது குடியுரிமை திருத்தச்சட்டம் – ஆதரித்த, எதிர்த்த கட்சிகள் எவை?

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தவர்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.க்களும், எதிர்த்து 105 பேரும் வாக்களித்துள்ளனர்.

ஆதரித்த கட்சிகள்: பாரதிய ஜனதா, தமிழகத்தை சேர்ந்த அ.தி.மு.க, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக்கின் பிஜூ ஜனதா தளம்ம் பஞ்சாபை சேர்ந்த பாஜக கூட்டணி கட்சியான சிரோமனி அகாலி தளம், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்.

எதிர்த்த கட்சிகள்: காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முஸ்லீம் லீக், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஆம் ஆத்மி.

இதில் மற்றுமொரு இந்துத்துவ கட்சியான சிவசேனை மசோதா மீதான வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. மக்களவையில் தங்கள் கட்சி மசோதாவுக்கு ஆதரவளித்தபோதிலும் தாங்கள் அளித்த திருத்தங்களை ஏற்க மறுத்ததால் புறக்கணிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

hiddenIndiaworld

“எல்லை மீறி போறீங்க! இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தார்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியுரிமை திருச்சட்ட மசோதா இஸ்லாமியர்களை அடிமைப்படுத்துவதற்கும், சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கும், மத ரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்ய நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

குஜராத் கலவரத்தை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு இந்த ஆணையம் அளித்த பரிந்துரை காரணமாகவே அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தடை விதிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றுள்ளது.

fact checkIndiaPoliticsTamilnadu

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வாக்களிக்காமல் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததா?

குடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், “ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே” என்கிறார்கள். இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களித்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் ஆதாரம் இல்லை. எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இதையெல்லாம்விட உச்ச கட்டக் குழப்பம், முரசொலியில் வந்த செய்தி. “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது! மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு! தி.மு.க. வெளிநடப்பு!” என்றது அந்தச் செய்தி.

ஆகவே, தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர். பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

உண்மையில் என்ன நடந்தது?

வாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்சனை. பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்பிக்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு – எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது. லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன.

11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.

முரசொலி ஏன் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக செய்தி வெளியிட்டது?

அதாவது காலையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அறிமுக நிலையிலேயே அந்த மசோதாவை தி.மு.க. எதிர்த்தது. அந்தத் தருணத்தில்தான், அதனை எதிர்த்துப் பேசிவிட்டு டி.ஆர். பாலு வெளிநடப்புச் செய்தார்.

இந்தச் செய்திதான் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக முரசொலியில் வெளியானது. தினத்தந்தி செய்தியிலும் தலைப்பில் தி.மு.க. வெளிநடப்பு என்று இருந்தாலும், செய்திக் கட்டுரையின் உள்ளே, தி.மு.க. அறிமுக நிலையில் வெளிநடப்புச் செய்ததாகவும் பிறகு திரும்பி வந்ததாகவும் இருந்தது.

எல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்!

-முரளிதரன் காசி விஸ்வநாதன்

cinemaIndia

நான் ஏன் இந்தில பேசனும்? வேண்டுமென்றால் தமிழில் பேசட்டுமா? – நடிகை டாப்சியின் துணிச்சல் பேச்சு

கோவாவில் 50 இந்தியாவின் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை டாப்சி ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர் டாப்சியிடம் இந்தியில் பேசுங்கள் என்றார். அதற்கு டாப்சி கூட்டத்தை பார்த்து “இங்கு அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காத்தனர். ஆனால், அந்த நபரோ டாப்சி இந்தியில் தான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அதற்கு இங்கு பலருக்கும் புரியாத இந்தியை நான் ஏன் பேசவேண்டும்? என கேட்டார். நீங்கள் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் தான் பேச வேண்டும் என்றார்.

“நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் தான் நடிக்கிறேன். நான் வேண்டுமானால் தமிழில் பேசட்டுமா?” என கேட்டு அந்த இந்திக்காரரை வாயடைக்க செய்தார். டாப்சியின் இந்த துணிச்சலான பதிலை கேட்டு அங்கிருந்த கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

IndiaTamilnadu

இந்தியாவிலேயே சிறந்த மாநிலத்துக்கான விருது பெற்ற தமிழ்நாடு

இந்தியா டுடே பத்திரிக்கையின் 2019-ம் ஆண்டுக்காந “மாநிலங்களில் சிறந்த மாநிலம்” விருதுகள் வழங்கும் விழா தலைநகர் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மாநிலத்திற்கு இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மூன்று விருதுகளை பெற்றுள்ளது.

  1. பெரிய மாநிலங்களில் அனைத்து துறைகளின் செயல்பாட்டில் மிகச்சிறந்த மாநிலம்.
  2. சட்டம் ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் மிகச்சிறந்த மாநிலம்.
  3. சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் மிகச்சிறந்த முன்னேற்றம் அடைந்த மாநிலம்.

இந்த விருதுகளை மத்திய சுற்றுச்சூழல், தட்பவெப்ப நிலை மாறுதல்கள் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வழங்க தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

India

டெல்லி JNU மாணவர்கள் மீது தடியடி..! – தொடரும் கைது படலம்.. மெட்ரோ ரயில்கள் மூடல்..!

டெல்லியில் ஜே.என்.யு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் எல்லோ லைன் வழித்தடத்தில் செயல்படும் 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

டெல்லியில் JNU-வில் ஹாஸ்டல் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி மாணவர்கள் ஆயிரக்கணக்கான பேர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த நிலையில் இன்று பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தியபோது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சித்தனர். இருப்பினும் மாணவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் கைது நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது காவல்துறை.

மாணவர்கள் கூட்டம் சேர்வதை தவிர்க்க JNU வளாகத்திற்கு அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.

உத்யாக்பவன், படேல் சவுக், மத்திய தலைமை செயலக மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவு மற்றும் வெளியே செல்லும் வாயில்கள் மூடப்பட்டுள்ளது.

டெல்லியில் தற்காலிகமாக மூடப்பட்ட 3 மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும் நேரம் குறித்து ஏதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.

crimeIndiasociety

கொலையில் முடிந்த 2 ரூபாய் காற்று பிரச்சனை

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா புறநகர் பகுதியில் உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சூரிய நாராயண ராஜு. சூரிய நாராயண ராஜு அதே பகுதியில் உள்ள சாம்பா என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு காற்று பிடிக்கும் படி கூறினார். சாம்பா சூரியநாராயணன் சைக்கிளுக்கு காற்று அடித்த பின்னர் 2 ரூபாய் பணம் கேட்டார். ஆனால் சூரிய நாராயண ராஜு பணம் தராமல் சாம்பா மீது தாக்குதல் நடத்தினார்.

இதனால் சாம்பா சூரியநாராயண ராஜு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பாவின் நண்பர் அப்பாராவ் அதே இடத்தில் இருந்த நிலையில் சைக்கிளில் காற்று அடித்துவிட்டு பணம் கேட்டால் அடிக்கிறாயா என்று கோபத்தில் கடையில் இருந்த இரும்பு ராடை கொண்டு சூரிய நாராயண ராஜு மீது தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த நிலையில் சூரியநாராயண ராஜுவை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சூரிய நாராயண ராஜு உயிரிழந்தார். இதையடுத்து காக்கிநாடா ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

cinemaIndiaPolitics

கேரள முதலமைச்சர் ஆனார் நடிகர் மம்மூட்டி…

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற ஊரில் 1944 ஆம் ஆண்டு‍ மார்‌ச் 21-ம் தேதி பிறந்தார் விஜயன். 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து‍ கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் தேர்வானார்.

தற்போது கேரள மாநில முதல்வராக பதவி வகித்து வரும் பினராயி விஜயனை அம்மாநிலம் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். காம்ரேட்டாக அரசியலில் நுழைந்த முதல்வராக உயர்ந்த பினராயி விஜயன் சினிமாக்களில் வருவதைப்போல் அதிரடி அரசியலுக்கு பெயர்போனவர். கேரள வெள்ள மீட்புப்பணி, நோய்த்தடுப்புப்பணி, புதிய புதிய மக்கள் நலன் சார்ந்த உத்தரவுகளை பிறப்பித்து புகழ்பெற்ற இவர் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. அண்மையில் கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாகக்கூறி பினராயி அரசு மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் நிகழும் அரசியல் கொலைகளை பினராயி கண்டுகொள்ளவில்லை எனவும், அரசுக்கு எதிராக போராடிய சொந்தக்கட்சியின் மாணவர் அமைப்பான SFI உறுப்பினர்கள் இருவரை இஸ்லாமியர் என்ற காரணத்துக்காக UAPA சட்டத்தில் கைது செய்தது, இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துகொண்ட ஹாதியாவின் கணவர் மீது லவ் ஜிஹாத் குற்றச்சாட்டை அவரது தந்தை முன் வைத்தபோது கேரள அரசு வழக்கறிஞரும் அதற்கு ஆதரவாக வாதாடியது வரை பினராயி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றார்கள் அம்மாநில மக்கள்.

இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி பினராயி விஜயன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ONE என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ராவில் மம்மூட்டி நடித்தார். அது மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Source: Manorama

hiddenIndiaLaw

நான் தீர்ப்பளித்தால் பாபர் மசூதியை கட்ட சொல்லி இருப்பேன் – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:
அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளது…. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

1856-57 இல் இல்லையென்றாலும், நிச்சயமாக 1949 முதல், அங்கு தொழுகை நடத்தப்பட்டு வந்துள்ளது., அது ஆவணங்களில் உள்ளது. எனவே, நமது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோதும், தொழுகை அங்கு நடத்தப்பட்டு வந்துள்ளது. தொழுகை நடத்தப்பட்ட அந்த இடம், ஒரு மஸ்ஜித் என்று அங்கீகரிக்கப்பட்டால், சிறுபான்மை சமூகத்திற்கு அவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு -அது அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஒரு அடிப்படை உரிமை.

ஒரு முஸ்லீம் இன்று என்ன பார்ப்பார்? ஒரு மஸ்ஜித் பல ஆண்டுகளாக இருந்தது, அது இடிக்கப்பட்டது. இப்போது அந்த இடம் ராம் லல்லாவுக்கு சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் ஒரு கட்டிடம் வர நீதிமன்றம் அனுமதிக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நில உடைமை குறித்து உச்ச நீதிமன்றம் முடிவு செய்யுமா? அரசியலமைப்பு வந்தபோது அங்கு ஒரு மஸ்ஜித் இருந்தது என்பதை உச்ச நீதிமன்றம் மறக்குமா? ”அரசியலமைப்பு மற்றும் அதன் விதிகள் மூலம், அதைப் பாதுகாப்பது உச்சநீதிமன்றத்தின் பொறுப்பாகும். ”
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு இருந்தவை உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில் வராது. அதற்கு முன்பு இந்திய ஜனநாயக குடியரசு என்று எதுவும் இருக்கவில்லை.பின்னர்
ஒரு மஸ்ஜித் இருந்த இடத்தில், , ஒரு பெளத்த ஸ்தூபம் இருந்த இடத்தில், ஒரு தேவாலயம் இருந்த இடத்தில்… இதுபோன்ற தீர்ப்புகளை நாம் வழங்க ஆரம்பித்தால் , நிறைய கோயில்கள் மற்றும் மஸ்ஜிதுகள் மற்றும் பிற கட்டமைப்புகள் இடிக்கப்பட வேண்டியிருக்கும். நாம் புராண ‘உண்மைகளுக்கு’ செல்ல முடியாது. ராம் யார்? வரலாற்று ரீதியாக நிரூபிக்கப்பட்ட சூழ்நிலை ஏதேனும் உள்ளதா? இது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

விசுவாசத்தின் அடிப்படையில், நீங்கள் எந்த முன்னுரிமையையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் இந்த முறை கூறியது. மஸ்ஜிதின் கீழ், கட்டமைப்புகள் இருந்தன என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அந்த கட்டமைப்பு ஒரு கோயில் அல்ல. ஒரு கோவிலை இடித்ததன் மூலம் மஸ்ஜித் கட்டப்பட்டது என்று யாரும் சொல்ல முடியாது. இப்போது ஒரு மஸ்ஜிதை இடிப்பதன் மூலம், ஒரு கோயில் கட்டப்படுகிறதா?

500 ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தை யார் வைத்திருந்தார்கள், யாருக்கும் தெரியுமா? நாம் வரலாற்றை மீண்டும் உருவாக்க முடியாது. எது இருந்ததோ அதைப் பாதுகாப்பதே நீதிமன்றத்தின் பொறுப்பு. எதுவாக இருந்தாலும் உரிமைகளைப் பாதுகாக்கவேண்டும். வரலாற்றை மீண்டும் உருவாக்க நீதிமன்றத்திற்கு எந்த கடமையும் இல்லை. ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு என்ன இருந்தது, என்பதை நீதிமன்றம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. மஸ்ஜித் இருந்தது என்றுதான் நீதிமன்றம் சொல்ல வேண்டும் – அது ஒரு உண்மை. ஒரு வரலாற்று உண்மை மட்டுமல்ல, (ஆனால்) எல்லோரும் பார்த்த ஒரு உண்மை. அதன் இடிப்பு அனைவராலும் பார்க்கப்பட்டது. அதை மீட்டெடுக்க வேண்டும். அவர்களுக்கு(முஸ்லிம்களுக்கு) ஒரு மஸ்ஜிதை வைத்திருக்க உரிமை இல்லை என்றால், ஒரு மஸ்ஜிதை கட்ட ஐந்து ஏக்கர் நிலத்தை வழங்குமாறு அரசாங்கத்தை எவ்வாறு வழிநடத்துகிறீர்கள்? ஏன்? மஸ்ஜித் இடிக்கப்பட்டது முறையானது அல்ல என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

நானாக இருந்தால் ஒன்று அந்த பகுதியில் மஸ்ஜிதை மீண்டும் கட்டியிருக்க சொல்லியிருப்பேன். அல்லது அது சர்ச்சைக்குரியதாக இருந்தால், அந்த பகுதி, ‘மஸ்ஜிதும் இல்லை, அந்த பகுதியில் கோயிலும் இல்லை’ என்று சொல்லியிருப்பேன். நீங்கள் ஒரு மருத்துவமனையையோ அல்லது பள்ளிக்கூடத்தையோ, அல்லது கல்லூரியை உருவாக்கலாம் என்று கூறியிருப்பேன். வெவ்வேறு பகுதிகளில் ஒரு மஸ்ஜித அல்லது கோவில் கட்டவும் கூறியிருப்பேன். அதை இந்துக்களுக்கு கொடுக்க முடியாது. இது விஸ்வ இந்து பரிஷத் அல்லது பஜ்ரங் தளத்தின் கோரிக்கை. அவர்கள் எந்த மஸ்ஜிதையும் – – இன்றோ, பின்னரோ இடிக்க முடியும். அவர்கள் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுள்ளனர்; இப்போது அவர்கள் நீதித்துறையின் ஆதரவையும் பெறுகிறார்கள். நான் மிகவும் கலக்கம் அடைகிறேன். பெரும்பாலோர் இதை தெளிவாக சொல்லப்போவதில்லை, ”

ஆதாரம்: டெலிகிராப்

1 2 3 24
Page 1 of 24