cinema

cinemasocietyTamilnaduVideo

சாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா? புள்ளிங்கோன்னா கேவலமா? – நடிகர் தீனா ஆவேசம்

தமிழ் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தீனா. ஜிம் பாயாக இருந்து படிப்படியாக உயர்ந்த தீனா சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு வெளிப்படையாக ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவை கடந்து சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வு, வட சென்னை இளைஞர்களை புள்ளிங்கோ என அசிங்கப்படுத்தும் வன்மம், மேட்டுப்பாளையத்தில் 17 பேர் தீண்டாமை சுவறால் கொல்லப்பட்டது என பல விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ:

cinemaIndia

நான் ஏன் இந்தில பேசனும்? வேண்டுமென்றால் தமிழில் பேசட்டுமா? – நடிகை டாப்சியின் துணிச்சல் பேச்சு

கோவாவில் 50 இந்தியாவின் சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட தமிழில் ஆடுகளம், ஆரம்பம், கேம் ஓவர் போன்ற படங்களில் நடித்த பாலிவுட் நடிகை டாப்சி ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினார். அப்போது அங்கிருந்த ஒருவர் டாப்சியிடம் இந்தியில் பேசுங்கள் என்றார். அதற்கு டாப்சி கூட்டத்தை பார்த்து “இங்கு அனைவருக்கும் இந்தி தெரியுமா?” என கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதிலளிக்காமல் அமைதி காத்தனர். ஆனால், அந்த நபரோ டாப்சி இந்தியில் தான் பேச வேண்டும் என கட்டாயப்படுத்தினார். அதற்கு இங்கு பலருக்கும் புரியாத இந்தியை நான் ஏன் பேசவேண்டும்? என கேட்டார். நீங்கள் பாலிவுட் நடிகை என்பதால் இந்தியில் தான் பேச வேண்டும் என்றார்.

“நான் தமிழ், தெலுங்கு படங்களிலும் தான் நடிக்கிறேன். நான் வேண்டுமானால் தமிழில் பேசட்டுமா?” என கேட்டு அந்த இந்திக்காரரை வாயடைக்க செய்தார். டாப்சியின் இந்த துணிச்சலான பதிலை கேட்டு அங்கிருந்த கூட்டம் கைத்தட்டி ஆரவாரம் செய்தது.

cinemaIndiaPolitics

கேரள முதலமைச்சர் ஆனார் நடிகர் மம்மூட்டி…

கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராயி என்ற ஊரில் 1944 ஆம் ஆண்டு‍ மார்‌ச் 21-ம் தேதி பிறந்தார் விஜயன். 1964 இல் மாணவர் சங்கத்திலிருந்து‍ கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த இவர், கேரள மாணவர் சங்கத்தின் (KSF) மாநிலத் தலைவர் மற்றும் மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் இருந்தவர். அவர் கேரள வாலிபர் சங்கத்திலும் (KSYF) மாநிலத் தலைவராக இருந்தார். கேரள கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். மீண்டும் 1977, 1991 மற்றும் 1996 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் கூட்டுறவுத் துறைகளில் அமைச்சராக 1996 முதல் 1998 வரை இருந்துள்ளார். 1998 இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக்குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு‍ உறுப்பினராகவும் தேர்வானார்.

தற்போது கேரள மாநில முதல்வராக பதவி வகித்து வரும் பினராயி விஜயனை அம்மாநிலம் மட்டுமின்றி பிற மாநிலத்தவரும் நன்கு அறிந்து வைத்துள்ளனர். காம்ரேட்டாக அரசியலில் நுழைந்த முதல்வராக உயர்ந்த பினராயி விஜயன் சினிமாக்களில் வருவதைப்போல் அதிரடி அரசியலுக்கு பெயர்போனவர். கேரள வெள்ள மீட்புப்பணி, நோய்த்தடுப்புப்பணி, புதிய புதிய மக்கள் நலன் சார்ந்த உத்தரவுகளை பிறப்பித்து புகழ்பெற்ற இவர் மீது விமர்சனங்களும் எழாமல் இல்லை. அண்மையில் கேரள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது போலி என்கவுண்டர் நடத்தப்பட்டதாகக்கூறி பினராயி அரசு மீது இந்திய கம்யூனிஸ்டு கட்சியே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதுமட்டுமின்றி அம்மாநிலத்தில் நிகழும் அரசியல் கொலைகளை பினராயி கண்டுகொள்ளவில்லை எனவும், அரசுக்கு எதிராக போராடிய சொந்தக்கட்சியின் மாணவர் அமைப்பான SFI உறுப்பினர்கள் இருவரை இஸ்லாமியர் என்ற காரணத்துக்காக UAPA சட்டத்தில் கைது செய்தது, இஸ்லாம் மதத்துக்கு மாறி திருமணம் செய்துகொண்ட ஹாதியாவின் கணவர் மீது லவ் ஜிஹாத் குற்றச்சாட்டை அவரது தந்தை முன் வைத்தபோது கேரள அரசு வழக்கறிஞரும் அதற்கு ஆதரவாக வாதாடியது வரை பினராயி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றார்கள் அம்மாநில மக்கள்.

இந்த நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி பினராயி விஜயன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ONE என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ஏற்கனவே மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படமான யாத்ராவில் மம்மூட்டி நடித்தார். அது மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Source: Manorama

cinemascienceTamilnadu

ராக்கெட் விட்டால் மட்டும் போதுமா? – அறம் இயக்குநர் கோபி நயினார் அரசுக்கு சரமாரி கேள்வி

ஆழ்துளை கிணற்றில் 2 வயது குழந்தை சுஜித் விழுந்த நிலையில் அதை மீட்க முடியாமல் அரசு இயந்திரம் திணறி வருகிறது. இது குறித்த கதைக்களத்தை கொண்டு அறம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் கோபி நயினார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர், “ராக்கெட்டுகள் மேல் இருக்கும் கவனம், சாதாரண மக்களுக்கும் பயன்படும் விஞ்ஞானத்திலும் இருக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளில் சிக்கும் குழந்தைகளை மீட்க, புதிய இயந்திரங்களை கண்டுபிடித்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்கு வழங்க வேண்டும். ஜேசிபி போன்ற இயந்திரங்கள், குழந்தையை மீட்பதற்கான இயந்திரம் கிடையாது. ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளை மீட்க ஏன் புதிய இயந்திரங்களை கண்டுபிடிக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

BackgroundcinemacrimeTamilnadu

பிகில் படம் வெளியாக தாமதம்… பேனர்கள், காவல் தடுப்புகளை உடைத்து விஜய் ரசிகர்கள் வெறித்தனம்

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே, நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், திடீரென நேற்று அனுமதியை அளித்தார் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. இதைத் தொடர்ந்து, இன்று அதிகாலை தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் பிகில் திரைப்படம் வெளியானது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு திரையரங்கத்தில் அதிகாலை காட்சி வெளியாக தாமதமானது. இதனால் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக சாலையோரம் இருந்த கடைகளின் பேனர்களை உடைத்தும், பேரிகாடுகளை கீழே தள்ளியும் அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் மீதும் ரசிகர்கள் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது.

சினிமாவில் சமூகத்துக்கு தேவையான பல கருத்துக்களை கூறும் நடிகர் விஜயின் ரசிகர்கள் இப்படி ஒரு படத்துக்காக குண்டர்களாக மாறி மக்களுக்கு தொல்லை கொடுப்பதும், பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும் ஒவ்வொரு பட வெளியீட்டின்போதும் அதிகரித்து வருகிறது. பல்வேறு கதைக்களங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய், இதுபோன்று நடிகர்கள் பின்னால் எதிர்காலத்தை மறந்து திரியும் ரசிகர்களுக்கு புத்தி சொல்லும் வகையில் கதையை தேர்வு செய்து நடிப்பாரா? தங்கள் படத்தை குறைந்தபட்சம் நஷ்டத்திலிருந்து தவிர்க்க பயன்படுவதால் ரசிகர்கள் செய்யும் இதுபோன்ற தவறுகளை பகிரங்கமாக, அழுத்தமாக கண்டிக்காமல் விஜய் போன்ற நடிகர்கள் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

வீடியோ:

cinemaComedyPoliticsTamilnadu

பிகில் படம் நிச்சயம் ஹிட் தான்… எதிர்ப்பு தெரிவித்து இலவச விளம்பரம் செய்யும் இந்து மக்கள் கட்சி

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது பிகில் திரைப்படம். இந்த திரைப்படம் தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. கதைத்திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாக இருக்கும் இந்த படத்துக்கு அதிகாலை சிறப்புக்காட்சி வைக்க அரசு தடை விதித்தது அண்மையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 ஆண்டுகளாகவே தலைவா படத்திலிருந்து பெரும்பாலான விஜய் படங்கள் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் வெளியிடப்படுகிறது. 2016-ம் ஆண்டு இதே அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான வசனங்கள் இடம்பெற்றதால் பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். ஒருவாரமாக ஊடகங்களின் தலைப்புச்செய்திகளாக இந்த எதிர்ப்பும் அதற்கான எதிர் விணையும் மாறியதால், ஓரளவு ஓட வேண்டிய மெர்சல் படம் என ஓஹோ என ஓடி பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இதே போல் கதைத்திருட்டு சர்ச்சையுடன் சென்ற ஆண்டு வெளியான சர்க்கார் படத்தில் அரசின் இலவச நலத்திட்டங்களுக்கு எதிரான காட்சிகள் வைக்கப்பட்டதால் தமிழக அரசிடம் இருந்தே கடும் எதிர்ப்பை சந்தித்து. இதுவும் ஊடகங்களில் முக்கிய செய்தியானதால் சர்க்கார் படத்துக்கு இலவச விளம்பரமாக மாறியது.

இதே போல், கதைத்திருட்டு சர்ச்சையுடன் வெளியான பிகில் படத்துக்கு வெளியீட்டுக்கு முன்பாக அரசியல் ரீதியிலான எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன. அந்த வகையில் பாஜக ஆதரவு இந்துத்துவ அமைப்பான இந்து மக்கள் கட்சி பிகில் படத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இலவச விளம்பரம் செய்ய களமிறங்கியுள்ளது. ஆம், கும்பகோணத்தில் பிகில் படத்துக்கு எதிர்ப்ப்ய் தெரிவித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், இந்து ரசிகர்களை மதம் மாற்றும் முயற்சியில் ஜோசப் விஜய்யின் பிகில் திரைப்படம் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவி வேட்டி, கழுத்தில் சிலுவையுடன் விஜய் தோன்றுவதால், ரசிகர்களின் மனநிலை பாதிக்கும் என்அ தெரிவித்துள்ள அக்கட்சி, இதனை கண்டித்து கும்பகோணத்தில் உள்ள இந்து மக்கள் ருத்ராட்சம் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிகில் படம் வெளியாகும் குஷியில் செய்வதறியாமல் ஏதோ செய்து வரும் விஜய் ரசிகர்கள், இந்து மக்கள் கட்சியின் எதிர்ப்பு நோட்டீசை கண்டு கடுப்பாகாமல், இலவச விளம்பரம் கிடைத்துவிட்டதாக எண்னி மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

cinemafact checkMedia Critics

அம்பலமானது பிக்பாஸ் தில்லாலங்கடி… பழைய வீடியோவை வெட்டி ஒட்டி அசிங்கப்பட்ட விஜய் டிவி

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்தே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. குறிப்பாக இந்த சீசனில் நடுபாதியில் நகைச்சுவை நடிகை மதுமிதா கையை அறுத்துக்கொண்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் காவிரி பிரச்சனை குறித்து மதுமிதா பேசியதாகவும் அதற்கு சேரன், கஸ்தூரியை தவிர்த்து மற்ற போட்டியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பிக்பாஸ் நிர்வாகமும் தன்னை கண்டித்ததாகவும் கூறிய மதுமிதா இதனால் மன உளைச்சல் அடைந்து கையை அறுத்துக்கொண்டதாக கூறினார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தரப்பிலும், மதுமிதா தரப்பிலும் மாறி மாறி காவல் நிலையங்களில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், நடந்து முடிந்த பிக்பாஸ் இறுதிப்போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியில் அனைத்து போட்டியாளர்களும் கலந்துகொண்ட போது, நடிகர் சரவணனும், மதுமிதாவும் பங்கேற்கவில்லை. ஆனால், மதுமிதாவின் கணவர் மோசஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காட்சி ஒளிபரப்பானது.

அதை பார்த்த மக்களும் மதுமிதா, விஜய் டிவி இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாக நினைத்தனர். ஒரு சிலரோ இதை வைத்து மதுமிதா தரப்பை விமர்சிக்க செய்தனர். இந்த நிலையில் டுவிட்டரில் வீடியோ வெளியிட்டுள்ள மதுமிதாவின் கணவர் மோசஸ், தங்களுக்கு பிக்பாஸ் இறுதி நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு வரவில்லை என்றும், தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே இல்லை எனவும் தெரிவித்தார். மேலும், இதை ஏன் விஜய் டிவி செய்தது என தனக்கு புரியவில்லை என தெரிவித்த மோசஸ் இது மிகமிக தவறானது என்றார்.

இதில் உண்மை என்னவென்று நாம் ஹாட்ஸ்டாரில் தேடியபோது, பிக்பாஸ் முதல் நாள் நிகழ்ச்சியில் மோசஸ் கலந்துகொண்ட எடுத்த வீடியோவை வெட்டி இறுதி நாள் நிகழ்ச்சியுடன் ஒட்டி விஜய் டிவி ஒளிபரப்பியது தெரியவந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னணி சதி, அதன் மூலம் அவர்கள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பதை அண்மையில் விரிவான பதிவாக நாம் நமது நியூசுவில் வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், இந்த சம்பவம் நமது பதிவை மெய்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அதிர வைக்கும் உண்மை பின்னணி

https://www.newsu.in/?p=2755

BackgroundcinemaTamilnadu

இயக்குநர் வெற்றிமாறனுக்கு நக்சல்களுடன் தொடர்பாம் – அசுரன் படம் மீது இந்து மகாசபா புகார்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்தை திரைத்துறையினர், சினிமா ரசிகர்கள் என பலரும் பாரட்டி வருகின்றனர். சாதி ஆதிக்கத்துக்கு எதிரான வலுவான குரலை எழுப்பி இருக்கும் இந்த படத்தில் வன்முறை இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்து கரூர் எஸ்.பி.யிடம் அகில பாரத இந்து மகா சபா புகார் அளித்துள்ளது.

அதில் “அசுரன் திரைப்படத்தில், பள்ளி மாணவர் நாட்டு வெடிகுண்டு வீசுவதுபோல் காட்சி இடம் பெற்றுள்ளது எனவும், இது அரசுக்கு எதிராக பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, பழைய சாதிய நிகழ்வுகளை வன்முறை கலந்து படமாக்கி இருப்பதாக கூறியுள்ள இந்து மகா சபா, நக்சல் மற்றும் மாவோயிஸ்ட்களுடன் இயக்குநர் வெற்றிமாறன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுவதாக கூறியுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தி, அவரது பின்புலத்தை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்ட கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் தனுஷ் ஆகியோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர்கள் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

நியூசு விமர்சனம்:

இந்து மகா சபா என்ற இந்த அமைப்பு தான் கடந்த ஆண்டு காந்தியின் நினைவு நாளின் போது அவரது உருவ பொம்மையை கொள்வதை போல் வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. காந்தியை ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கோட்சே சுட்டுக்கொன்றது வன்முறை இல்லையா?

தமிழகம் முழுவதும் இன்று வரை சாதி கலவரங்கள், கௌரவக்கொலைகள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு அன்றைய தேவர் மகன், சின்ன கவுண்டர், நாட்டாமை தொடங்கி, இன்றைய சுந்தரப்பாண்டியன், மதயானைக்கூட்டம், மருது, முத்துராமலிங்கம், தேவராட்டம், குட்டிப்புலி என சுயசாதிப்பெருமை பேசும் படங்களும் ஒரு காரணமாக உள்ளன. இதையெல்லாம் கண்டிக்காத இந்து மகா சபா அங்கொன்றும் இங்கொன்றுமாக வரும் சாதி அடக்குமுறைகளுக்கு எதிரான படங்களை மட்டும் எதிர்ப்பது ஏன்? இது வன்முறை இல்லையா…?

ஜல்லிக்மட்டு போராட்டம் தொடங்கி, ஸ்டெர்லைட் போராட்டம் வரை அரசு, கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருபவர்கள் நக்சல்களாக, ஆண்டி இந்தியன்களாக, தேச விரோதிகளாக வலதுசாரிகளால் சித்தரிக்கப்படுகிறார்கள். நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை பிரதமர் மோடி தடிக்க வேண்டும் என கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது தேச விரோத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடும் எதிர்ப்புக்கு பின் விலக்கிக்கொள்ளப்பட்டது. அரசுக்கு, வலதுசாரி, இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு எதிராக பேசிய கௌரி லங்கேஷ், தபோல்கர், கோவிந்த் பன்சாரே உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். அவர்கள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த வரிசையில் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளை பார்க்கையில் முசோலினியின் பாசிச, ஹிட்லரின் நாஜிச ஆட்சியை கலந்து பாஜக நடத்தி வருகிறதோ என்ற சந்தேகம் இங்கு வலுவாக எழுகிறது.

articlecinemaPoliticssports

ஆம், மக்களும் அரசியல்வாதிகளே…

தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பின்னரும் நாற்பதும் நமதே என அசராமல் பேசித்திரியும் அரசியல்வாதிகளைப் போல், தனக்கு பிடித்த கிரிக்கெட் அணி வெற்றி பெறாது என தெரிந்த பின்னரும், தனக்கு பிடித்த நடிகனின் படம் நன்றாக ஓடாது என அறிந்த பிறகும் கப் நமக்கு தான், படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகப்போகுது என்பார்கள்.

தேர்தலில் தங்கள் கட்சி தோல்வி அடைந்துவிட்டால் வெற்றிகரமான தோல்வி, அடுத்த தேர்தலுக்கன முன்னோட்டம் இது, எங்கள் கட்சியில் உள்ள இந்த நிர்வாகி சரியில்லை, தேர்தல் ஆணையம் சரியில்லை, வாக்குப்பதிவு இயந்திர மோசடி என அரசியல்வாதிகள் சப்பைக்கப்பட்டு கட்டுவார்கள்.

இதே போல் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி தோல்வியடைந்துவிட்டால் They won the cup, We won hearts, நடுவர் சரியில்லை, மேட்ச் பிக்சிங், அம்பானி காசு கொடுத்துட்டான், எங்க டீம்ல இந்த ப்ளேயர் சொதப்பிட்டான், அந்த ப்ளேயருக்கு இஞ்சூரி ஆகிருச்சு என்று ஏதாவது சொல்லி சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதே போல் தங்களுக்கு பிடித்த நடிகனின் படம் தோல்வியடைந்துவிட்டால் டைரக்டர் சரியில்ல, மியூசிக் சொதப்பிருச்சு, ரிலீஸ் டேட் சரியில்ல, பட்ஜட் ப்ராப்ளம் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

ஒரு வேளை தங்கள் கட்சியோ, பிடித்த கிரிக்கெட் அணியோ, படித்த நடிகரின் படமோ வெற்றி பெற்றுவிட்டால் இனி நாங்க தான் எல்லாம் என்று ஆட ஆரம்பித்து விடுவார்கள். தோல்வியடைந்த பின்னர் அவர்கள் சொல்லும் காரணங்கள், குறைகள் யாவும் இப்போது நினைவில் வராது. அந்த வெற்றிக்கு காரணம் தனது கட்சித்தலைவர், கிரிக்கெட் அணியின் கேப்டன், பிடித்த நடிகன் என்று சொல்வார்கள். தோல்வியின் பழியை பிறர் மீது சுமத்துபவர்கள் வெற்றியின் பங்கை தனக்கு பிடித்தமானவரது தனி உடமையாக்குவார்கள்.

இதற்கு முழு முதல் காரணம் ஒன்று தான். தனி மனித வழிபாடு. அது நம்மை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். இவ்வுலகில் 100% உத்தமர்கள் யாருமில்லை. இவ்வுலகம் ஒளியாலும் இருளாலும் சூழப்பட்டுள்ளதை போல் தான் மனித உள்ளங்களும். நாம் தலைவன் எனக்கருதுபனின் இருள் சூழ்ந்த உள்ளத்தை காணும் முன் தனி மனித வழிபாட்டை கைவிடுவோம். அதை கண்டுகொண்டால் அவனது முதல் எதிரி நாமாகிவிடுவோம்.

cinemaVideo

திறமையை விட லுக் தான் முக்கியம் – ஏழை இளைஞர்களின் வலியை விவரிக்கும் ஆரா குறும்படம்

ஒரு வேலை வழங்குவதில் பார்க்கப்படும் ஏற்றத்தாழ்வுகள். இண்டெர்வீவ் டிரஸ் கோட், அதன் பின்னால் இருக்கும் ஏழைகளின் துயர் என பலவற்றை இந்த குறும்படம் விளக்குகிறது. ராஜ்கமல் நடித்து, இயக்கி பாண்டவாஸ் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த குறும்படம் சம கால வேலை தேடும் ஏழை இளைஞர்களுக்கு திறமை இருந்தும் ட்ரஸ் கோட் போஅன்ற காரணங்களால் வேலை மறுக்கப்படுவதன் துயரத்தை பதிவு செய்கிறது. வேலையில்லா இளைஞர்கள், நேர்காணலை வைத்து நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு வரும் யூடியூப் சேனல்களுக்கு மத்தியில் நேர்காணலுக்கு பின்னால் உள்ள இளைஞர்களின் கஷ்டத்தை இந்த குறும்படத்தின் மூலம் வெளியிட்ட பாண்டவாஸ் குழுவிற்கு வாழ்த்துக்கள்.

1 2
Page 1 of 2