viral

hiddenIndiasocietyviral

“நீங்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்” – தேசிய கீதத்திற்கு நிற்காத குடும்பத்திடம் அத்துமீறிய நடிகர்!

இந்தியா முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு திரையரங்குகளில் தேசிய கீதத்தை கட்டாயமாக்கிய உச்சநீதிமன்றம் பிறகு அந்த உத்தரவை கடந்த ஜனவரி 2018ம் ஆண்டு விலக்கிக் கொண்டது. இந்நிலையில் சோ கால்டு தேச பக்தர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நடிகர் அருண் கவுடா, நடிகை ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து மேலும் சிலர் திரையரங்குகளில் தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் இருப்பவர்களை ஆண்டி இந்தியன் தொணியில் சாடுவது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் கடந்த 23ம் தேதி ‘அசுரன்’ திரைப்படம் காண ஒரு குடும்பம் சென்றுள்ளது. காட்சி திரையிடுவதற்கு முன்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டுள்ளது. அப்போது அந்த குடும்பம் எழுந்து நிற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சிலர் அந்த குடும்பத்தினர் மீது வன்மத்தை கக்கியுள்ளனர். குறிப்பாக திரைப்படம் பார்க்கச் சென்ற கன்னட நடிகர்கள் அருண் கவுடா மற்றும் ஐஸ்வரியா ஆகியோர் அந்த குடும்பத்தினரை வீடியோ எடுத்தும் கடுமையான வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்துள்ளனர்.

நீங்க என்ன பாகிஸ்தான் தீவிரவாதியா என அடையாளம் தெரியாத ஒருவர் கடுமையான கேள்வியை வீசுகிறார். தேசத்திற்காக ஒரு 52 நிமிஷம் எழுந்து நிற்க முடியாத உங்களுக்கு 3 மணி நேரம் படம் கேக்குதா..? என கேள்வி எழுப்புகிறார் ஐஸ்வரியா. பிறகு திரையரங்கில் இருந்து அந்த குடும்பத்தினர் வெளியேற்றப்படுகின்றனர். இது குறித்து தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ள ஐஸ்வரியா, தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர்களை தரக்குறைவாக விமர்சித்துள்ளார். பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் தேசப்பற்றுக்கு அளவுகோல் என்ன..? தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர் தேச விரோதிகளா..? உச்சநீதிமன்றமே தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டாம் என அறிவுறுத்திய பிறகும் ஏன் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படுகிறது என பல கேள்விகள் எழுகிறது. 3 மணி நேரம் ஓடும் திரையரங்கில் தேசிய கீதம் ஒலிக்கப்படாமல் இருப்பதே சாலச்சிறந்தது.

வரலாறு:

சரியாக இன்றிலிருந்து 3 வருடங்களுக்கு முன்பு, 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி மக்களிடம் தேசப்பற்றை அதிகரிக்க உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் இனி திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. ஆனால், 2018-ம் ஆண்டு ஜூன் 9-ம் தேதி இந்த உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம் தேசிய கீதத்தை திரையரங்குகளில் ஒளிக்கச்செய்வது மாநில அரசுகளின் விருப்பம் எனக் கூறிவிட்டது.

என்ன சொல்கிறது சட்டம்?

அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 3, 1972-ன் படி “வேண்டும் என்றே உள்நோக்கத்தோடு தேசியகீதம் பாடுவதை தடுப்பவர்களுக்கும், இடையூறு ஏற்படுத்துவர்களுக்கும் தேச நிந்தனை வழக்கில் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது அபராதமோ விதிக்கலாம்”.

எழுந்து நிற்பது கட்டாயமா?

அரசியல் சாசனச் சட்டத்தில் எந்த இடத்திலும் தேசிய கீதம் ஒளிபரப்பப்படும்போது எழுந்து நிற்கவேண்டும் என கூறப்படவில்லை. தேசநிந்தனை சட்டம் பிரிவு 3, 1972-ம் கூட தேசிய கீதத்தின் போது எழுந்து நிற்பதையோ, அமர்ந்திருப்பதையோ குற்றம் என கருதவில்லை மாறாக இடையூறு ஏற்படுத்துபவர்களைப் பற்றி மட்டுமே கூறியுள்ளது. எனவே தேசிய கீதம் ஒளிக்கப்படும்போது எழுந்து நிற்பதும், அமர்ந்திருப்பதும் அவரவர் விருப்பமே.

ஆனால், தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காததை வைத்து ஒருவரை பாகிஸ்தான் தீவிரவாதி என்று கூறுவதையோ, திரையரங்கத்தை விட்டு வெளியேற்றுவதையோ ஒரு போதும் அனுமதிக்க முடியாது. தன்னுடைய தேசப்பற்றை வெளிகாட்டவும், புகழ் பரவவும் அரசியல் சாசனச்சட்டம் தனிமனிதருக்கு வழங்கி உள்ள உரிமைகளில் கை வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்பதும், கொடிக்கு வணக்கம் வைப்பதும், ராணுவ வீரர்களைப் புகழ்வதும், பாகிஸ்தானை திட்டுவதும் மட்டுமே தேசப்பற்று என்று ஒரு கூட்டம் கற்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மதச்சார்பின்மை, சகிப்புத்தன்மை, தனிநபர் உரிமைகள் குறித்து எந்த கவலையும் கிடையாது.

ComedyIndiaMedia Criticsviral

பைசா செலவின்றி மோடி, சீன அதிபரை விளம்பர மாடலாக்கிய ராம்ராஜ் காட்டன்

நேற்று மாமல்லபுரத்தில் சீன அதிபருடனான சந்திப்புக்காக வந்த பிரதமர் மோடி தமிழர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை, தோளில் துண்டு என வித்தியாசமாக தோற்றமளித்தார். இருவர் சந்திப்பில் பேசப்பட்ட விசயங்களை விட மோடியின் தமிழர் கெட்டப் தான் சமூக ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழிசை ஆந்திரா முதல்வரானவுடன் கண்டண்ட் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மீம் கிரியேட்டர்களுக்கு மோடியின் இந்த கெட்டப் வரப்பிரசாதமானது. மோடியின் இந்த கெட்டப்பை வைத்து விதவிதமான மீம்களை அள்ளிவீசியவர்கள், மோடியின் வேஷ்டி சட்டையுடன் நடந்து வரும் காட்சிகளுக்கு பின்னால் எம்.சி.ஆர். வேஷ்டி விளம்பர பாடலை போட்டு எடிட் செய்து வீடியோ வெளியிட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை செய்தித்தாளை வாங்கிப்பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ராம்ராஜ் வேஷ்டி நிறுவனம். ஆம், மோடி வேட்டி சட்டை அணிந்து சீன அதிபருடன் கைக்கொடுத்துக்கொண்டு நிற்கும் படத்தை போட்டு உறவுகள் மேம்பட ராம்ராஜ் காட்டன் வேட்டி சட்டை என்ற விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

hiddenIndiaviral

போலீஸை கொன்ற பசு பயங்கரவாதிகளுக்கு உற்சாக வரவேற்பு அளித்த பா.ஜ.க.

ஜெய் ஸ்ரீ ராம், பாரத் மாதாகி ஜெ, வந்தே மாதரம் முழக்கங்களும், சிலருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் காட்சிகளும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

யார் இவர்கள்? மக்களுக்காக உழைத்த மகான்களா? நாட்டுக்காக பாடுபட்ட நல்லவர்களா? இல்லை. கொலை குற்றவாளிகள் அதுவும் மிருகத்திற்காக இரண்டு மனிதர்களை கொலை செய்துவிட்டு ஜாமினில் வெளி வந்த குற்றவாளிகளுக்கு உத்தரப் பிரதேச மாநில பாரதிய ஜனதா கட்சியினர் கொடுத்த உற்சாக வரவேற்பு தான் அந்த வீடியோ காட்சி.

கடந்த வரும் டிசம்பர் 3-ம் தேதி உ.பி மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் சிலர் மாடுகளை வாகனங்களில் கொண்டு செல்வதாக ஒரு செய்தி காட்டுத் தீயாய் பரவியது. அடுத்த சில மணி நேரங்களில் இதற்கெனவே காத்துக் கொண்டிருந்தது போல 400-க்கும் மேற்பட்ட பசுக் காவலர்கள் அங்கு குவிந்துவிட்டனர்.

மாடுகளை வாகனத்தில் எடுத்துச் சென்றவர்களை அடித்து துவைத்ததோடு, சாலையில் சென்ற மற்ற வாகனங்களை அடித்து, உடைத்து தீவைத்து கொளுத்தினர். ஒரு கட்டத்தில் கலவரத்தை அடக்க முடியாத காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி பசு குண்டர்ளை விரட்டி அடித்தனர்.

இந்த கலவரத்தில் சிக்கி காவல் துறை ஆய்வளர் சுபோத் குமாரும் மற்றொரு நபரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அது நாள் அப்பாவி தலித்துகளையும், முஸ்லிம்களையும் மட்டுமே குறிவைத்து தாக்கி வந்த பசு குண்டர்கள் காவல் துறை மீதே கை வைத்து மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

உத்தரப்பிரதேசத்தில் மாட்டின் பெயரால் நடந்த பல கொலைகளிலும், பசு குண்டர்ளுக்கு ஆதரவாக இருந்த யோகியின் பாரதிய ஜனதா அரசு இந்த முறை அவர்களை காப்பாற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.

வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் பா.ஜ.க தலைமையிலான மாநில அரசு திடீரென சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இந்த கொலை மற்றும் கலவர வழக்கில் இருந்து ஜாமின் பெற்று நேற்று வெளியே வந்தவர்களுக்குத் தான் பாரதிய ஜனதா இப்படி ஒரு உற்சாக வரவேற்பு அளித்துள்ளது.

ஏற்கனவே பசு பாதுகாப்பின் பெயரால் நாட்டில் வன்முறைகள் தலைவிரித்தாடும் நிலையில், பசு குண்டர்களுக்குப் பாரதிய ஜனதா கட்சியினர் அளித்துள்ள மலர் மாலை வரவேற்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் தீவிரவாதத்திற்கு எதிராக வாய்கிழிய பேசும் பா.ஜ.க, பசுகுண்டர்களின் வன்முறைக்கு மலர் செண்டு கொடுப்பதா? என பலரும் சமூக வலை தளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

hiddenIndiaviral

ரமலான் நோன்பை கைவிட்டு இரத்ததானம் செய்த இளைஞர்… இந்தியாவின் மதம் கடந்த சகோதரத்துவம்

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்தவர் பனுல்லா அகமது 26 வயது இளைஞரான இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் லேப் அசிஸ்டெண்டாக பணியாற்றி வருகிறார். அவரது ரூம் நண்பரான தபாஷ் பகவதியும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாக பணியாற்றி வருகிறார்.

தபாஷ் பகவதி, தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ரத்ததானம் போன்ற சேவைகளையும் ஒருங்கிணைத்து வருகிறார். இந்நிலையில் வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராஜன் என்பவருக்கு அவசரமாக 2 யூனிட் ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவை என தபாஷுக்கு அழைப்பு வந்துள்ளது. பல இடங்களில் முயற்சி செய்தும் ரத்தம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை தனது நண்பன் பானுல்லா அகமதுவிடம் சொல்ல, தனக்கு ஓ பாசிட்டிவ் ரத்தம் தான் எனக்கூறி ரத்தம் கொடுக்க முன்வந்துள்ளார்.

ஆனால் பானுல்லா ரமலான் நோன்பில் இருப்பதால் உணவு ஏதும் உட்கொள்ளாத நிலையில் ரத்தம் கொடுத்தால் அவரது உடல் நிலை பாதிக்கப்படும் என்பதால் தபாஷ் அதனை ஏற்கவில்லை. ஆனால் நிலைமையை உணர்ந்த பானுல்லா அகமது தனது நோன்பை கைவிட்டு சாப்பிட்டுவிட்டு பிடிவாதமாக மருத்துவமனைக்குச் சென்று ரத்தத்தை நோயாளிக்கு தானம் செய்தார்.

இது குறித்து பேசிய தபாஷ் பகவதி, ”பானுல்லா அகமது ரத்தம் கொடுப்பாக கூறியதும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவன் நோன்பில் இருப்பதால் அதற்கு தடையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் அவன் பிடிவாதமாக ரத்தம் கொடுத்துவிட்டான்” என்றார்.

ரத்ததானம் செய்தது குறித்து பேசிய பானுல்லா அகமது, ”ரத்தம் வேண்டும் என்றதும் நான் கொடுக்க தயாரானேன். இது குறித்து எங்கள் மத பெரியவர்களுடன் ஆலோசித்தேன். அவர்கள் என்னை ஊக்கப்படுத்தி உதவி செய்யக் கூறினர். மேலும் ரத்தம் கொடுத்தபின் உணவு உட்கொள்ளக் கூறியும் அறிவுரை வழங்கினர்” என தெரிவித்துள்ளார்.

பானுல்லாவின் உதவிக்கு நன்றி தெரிவித்த நோயாளி ராஜனின் மைத்துனர், ”நோன்பை பாதியில் விட்டுவிட்டு பானுல்லா அகமது ரத்ததானம் செய்தது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். மேலும் ”அவருக்கு நாங்கள், பதில் உதவியாக எதையாவது கொடுக்க நினைத்தோம் அவர் எதையுமே வாங்கிக்கொள்ளவில்லை” என்றார்.

இந்தியாவில் மத மோதல்களை ஏற்படுத்தி அரசியல் லாபம் பார்க்க கட்சிகள் முயற்சித்து வரும் நிலையில், மதம் கடந்த சகோதரத்துவத்தை பரைசாற்றும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர்.

Source: Hindustan Times

Translation: Newsu editorial

IndiaPoliticsviral

மோடியையே மிரள வைத்த கவுதம் கம்பீரின் பளே பிரச்சார ஐடியா…

பாரதிய ஜனதா சார்பில் டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் பிரச்சாரத்திற்காக தன்னைப்போலவே இருக்கும் டூப்லிகேட் மனிதரை பயன்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலின் 6ம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான இறுதிகட்ட பிரச்சார பணிகளில் அரசியல் கட்சிகள் படு தீவிரமாக இறங்கியுள்ளன.

டெல்லியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் ஆம் ஆத்மி கட்சியிடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் “ஆட்சியைப் பிடிக்கப் போவது நாங்கதானுங்கோ” என எல்லா கட்சிகளும் வீதிக்கு வீதி பிரச்சாரம் செய்து வருகின்றன.

ஆனால், இதில் பாரதிய ஜனதா வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் காம்பீரின் பிரச்சாரம் அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களையே ஆச்சர்யப்பட வைத்து உள்ளது.

ஆம், சினிமாவில் சண்டைக் காட்சிகளில் கதாநாயகனுக்கு டூப் வைத்து மட்டுமே பார்த்து பழக்கப்பட்ட இந்திய மக்கள், முதன்முறையாக ஒரு வேட்பாளர் தனக்குத் தானே டூப் வைத்துக் கொண்டதை பார்த்த அதிர்ச்சியில் உள்ளனர்.

கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்ய முடியாத கவுதம் காம்பீர் தன்னைப் போலவே உருவத் தோற்றம் உடைய ஒருவரை பிரச்சார வாகனத்தின் கூரைப் பகுதியில் நிற்கவைத்துவிட்டு ஏ.சி காரில் கூலாக அமர்ந்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவிவருகின்றன.

இதில் கொடுமை என்னவென்றால் அங்கே கூடியுள்ள மக்கள் வாகனத்தின் மேலே நின்று வாக்குச் சேகரிப்பது காம்பீரின் டூப் என்றுத் தெரியாமல் மாலைகளையும், பொன்னாடைகளையும் அந்த டூப்பிற்கு அணிவிப்பது தான்.

சாதாரண வெயிலில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிக்க முடியாத காம்பீர் நாளை இந்த மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடி வருவாரா? அல்லது அப்போதும் தனது டூப்பை அனுப்பி வாக்களித்த மக்களுக்கு டிமிக்கி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்?

ஏற்கனவே பாரதிய ஜனதா வேட்பாளரும், முன்னாள் நடிகையுமான ஹேமா மாலினி கதிர் அறுக்க ஹெலிகாப்டரில் சென்ற அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மை ஆளத் தகுதியானவர்கள் யார் என்பதை நாம் சிந்தித்து முடிவு எடுக்காதவரை ஹெலிகாப்டரில் கதிர் அறுக்கும் நடிகையும், வெயிலுக்கு பயந்து டூப் போடும் விளையாட்டு வீரரும் நம்மை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்

Comedyviralworld

ஆஸ்திரேலிய கடையில் திருட்டு… சிசிடிவி கேமராவில் பதிவான டொனால்டு ட்ரம்ப் முகம்

ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ராத்பைன் பகுதியில் உள்ள பிரபல வாட்ச் கடைக்குள் புகுந்த திருடன் அங்கிருந்த விலை உயர்ந்த வாட்ச்களை திருடிச்சென்றான். இதுகுறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரை தொடர்ந்து அங்கு வந்த போலிஸார் கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தனர். அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முகம் பதிவானது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த வீடியோவை மெதுவாக இயக்கியபோது திருடன் தன்னை யாரும் பார்கக்கூடாது என்பதற்காக அமெரிக்க அதிபர் முகமூடியை அணிந்து வந்து திருடியது பதிவாகியுள்ளது.

பின்னர் திருடன் கடைக்கு வெளியே வந்தபோது கீழே விழுந்த பொருள் ஒன்றை எடுக்க குனிந்தான். அப்போது அவன் முகத்தில் அணிந்திருந்த முகமூடி கீழே விழுந்து முகம் தெரியவந்தது. அதனை ஆதாரமாக வைத்து குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

sportsviral

கடுப்பான கூல் கேப்டன்… மைதானத்தில் இறங்கி மாஸ் காட்டிய தோனி

ராஜஸ்தான் அணியை சென்னை அணி வீழ்த்தியதன் மூலம், ஐ.பி.எல் போட்டி வரலாற்றில் 100 வெற்றிகளை குவித்த முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

ஜெய்பூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, சாகர் வீசிய 3 வது ஓவரில் ரகானே எல்.பி.டபள்யூ ஆனார். அதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இதனையடுத்து, ரிவியூ கேட்குமாறு சாகர் முறையிட, தோனி நீண்ட யோசனைக்குப் பிறகு கடைசி நொடியில் ரிவ்யூ கேட்டார். அதற்கு பலனாக ரகானே, எல்.பி.டபள்யூ அவுட் என அறிவிக்கப்பட்டார்.

பின்னர், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வாட்சன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தவித்தது. இதனையடுத்த களம் கண்ட தோனி 58 ரன்களிலும், ராயுடு 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்றை ஒரு நடுவர் நோ பால் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் அதனை நிராகரித்தார். இதனால், ஆத்திரமடைந்த தோனி, நேரடியாக களத்துக்கே சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சென்னை அணி கடைசி பந்து திரில்லாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியின் வெற்றியை விட தோனி ஆத்திரமடைந்து மைதானத்திற்குள் இறங்கி சென்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

PoliticsTamilnaduviral

இளநீர் வெட்டி அரிவாள் சுழற்றி வாக்கு சேகரித்த மன்சூர் அலிக்கான்!

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலி கான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மக்களவை கவரும் விதமாக நூதன முறையில் வாக்குகளை சேகரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாட்டுவண்டியில் சென்றும், சூ பாலிஷ் செய்தும் வாக்குகள் சேகரித்த அவர், இன்று தனக்கே உரிய பாணியில் கூவி கூவி இளநீர் விற்ற படி அவர் பிரசாரம் செய்தார். அவரது இந்த வித்தியாசமான பிரசார உத்தியை ஏராளமான மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர்.

PoliticsTamilnaduVideoviral

தேர்தல் வருது… தேர்தல் வருது… ஜனங்க ஜாக்கிரத – பட்டையை கிளப்பும் பாடல்

இயக்குநர் கரு.பழனியப்பன் நடத்தி வரும் கரு நீலம் என்ற யூ டியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த பாடல் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இமான் இசையமைத்துள்ள இந்த பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியுள்ளார். 5 ஆண்டுகால மத்திய பாஜக அரசின் அவலத்தை 5 நிமிடத்த விளக்கும் இந்த பாடல் யூடியூப், பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. நீட் பிரச்சனை தொடங்கி, ஸ்டெர்லைட் படுகொலை வரை அனைத்தையும் விவரிக்கும் அந்த பாடல் இதோ…

articlePoliticsviral

மோடிக்கு நாடக தின வாழ்த்து சொன்ன ராகுல்

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உலக நாடக தின வாழ்த்துக்களை தெரிவித்து கேலி செய்துள்ளார்.

மிஷன் சக்தி திட்டம் குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சியில் உரையாற்றியதை கேலி செய்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது டுவிட்டர் பதிவில், மிஷன் சக்தி திட்டத்தின் வெற்றிக்கு காரணமான பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டு அமைப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், இந்த சாதனையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார். இதுகுறித்து, பிரமதர் மோடி மக்களுக்கு ஆற்றிய உரையை குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, உலக நாடக தினவாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கேலியாக பதிவிட்டுள்ளார்.

1 2 3
Page 1 of 3