sports

hiddenPoliticssports

விளையாட்டில் உள்ள அரசியல் தலையீட்டால் பாதிக்கப்பட்டேன் – தமிழக வீராங்கனை பரபரப்பு புகார்

Pic courtesy: News7

விளையாட்டு துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் வீரர்கள் பாதிப்படைவதாகவும் இது போன்ற பாதிப்புக்கு தானும் ஆளாக்கப்பட்டதாகவும் இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் வீராங்கனை ராஜ பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் பேட்டியளித்த அவர், “பெண்கள் விளையாட்டு துறையில் ஆர்வத்தோடு வர வேண்டும். விளையாட்டு துறையில் பெண்கள் சாதிக்க முன் வர வேண்டும். ஆனால் விளையாட்டு துறையில் அரசியல் தலையீடு இருப்பதால் பல்வேறு வீரர்கள் பாதிக்கப்படுவதாகவும், தானும் அது போன்று பாதிப்புக்குள்ளாகியதாக அவத் தெரிவித்தார். எத்தனை தடைகள் வந்தாலும் தமிழகத்தை சார்ந்த வீரர்கள் தகர்த்தெறிந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென கூறினார்.

sportsTamilnadutechnology

சுஜித்தை மீட்க முடியாத நமக்கு நிலவில் வீடு எதற்கு? கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் சரமாரி கேள்வி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுநாயக்கப்பட்டியில் சுஜித் என்கிற 2 வயது குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் சிக்கிக் கொண்டது.

படுகுழியில் சிக்கியுள்ள குழந்தையை 3வது நாளாக மீட்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சுஜித்தை மீட்க முடியாத விஞ்ஞானம் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறுத்து டுவிட்டரில் அவர், “நிலவில் நீர்,செவ்வாயில் குடியிருப்பு,எதற்காக இத்துணைக் கண்டுபிடிப்புகள்?நூறு அடியில் உயிரொன்று ஊசலாடுகையில் விஞ்ஞானமும் நாமும் எதற்கு.#சுர்ஜித் பூமி தாய் வயிற்றில் கருவாகி இருக்கிறாய்.பிரசவ வலி அந்த தாய்க்கு பதில் உனக்கு பொறுத்துக்கொள் சாமி.விழித்துக்கொள் தேசமே #savesurjeeth” என பதிவிட்டுள்ளார்.

BackgroundIndiaPoliticssports

காப்பி அடிச்சாலும் நியாயம் வேண்டாமா? மோடியை வாழ்த்த வீராங்கனைகளுக்கு அழுத்தம் தரப்படுகிறதா?

பாரத் கி லக்‌ஷ்மி என்ற பிரச்சாரம் மூலம் இந்த தீபாவளியன்று இந்திய பெண்களின் திறமைகள், சாதனைகளை பேற்றுவோம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை பரப்பும் வகையில் பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து, நடிகை தீபிகா படுகோனேவை வைத்து எடுக்கப்பட்ட விளம்பர வீடியோவை பி.வி.சிந்து தனது ட்விட்டரில் பதிவிட, அதனை பிரதமர் மோடியும் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இந்த பிரச்சாரத்தை அறிமுகம் செய்ததற்காக பிரதமர் மோடிக்கு இந்திய விளையாட்டு வீராங்கனைகள் டுவிட்டரில் நன்றி தெரிவித்தனர்.

இதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. இந்திய பேட்மிட்டன் வீராங்கனைகள் பி.வி.சிந்து, சாய்னா நேவால், குத்துச்சண்டை வீராங்கனைகள் மேரி கோம், நிகாத் ஜரீன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா ஆகிய அனைவரும், ட்விட்டரில் பிரதமருக்கு தெரிவித்த வாழ்த்துச்செய்தி அச்சு அசலாக ஒரே மாதிரியாக உள்ளது.

அவர்கள் அனுப்பிய வாழ்த்து ஆங்கிலத்தில்,

I thank @narendramodi for his initiative to honour and empower women this Diwali. Acknowledgement motivates us to work harder and make India proud. .

இதில், சற்று மாற்றமாக பி.வி.சிந்து மோடியின் ட்விட்டர் பெயருக்கு பின்னால் சார் என்றும், மனிகா பத்ரா ஜி என்றும் சேர்த்துள்ளனர். மற்ற வார்த்தைகள் எல்லாம் அச்சுபிசகாமல் அதே வாழ்த்துச்செய்தியை அனுப்பியுள்ளனர்.

இதில் கூடுதல் நகைச்சுவை என்னவென்றால் மல்யுத்த வீராங்கனை பூஜா தண்டா தனது வாழ்த்துச்செய்தியின் முன்னாள் TEXT: என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பலர் அவரது பதிவுக்கு கீழ் கருத்திட்டதால் அதனை அவர் பின்னர் நீக்கிவிட்டார். இதனை வைத்து பார்க்கையில் பிரதமர் மோடியை கட்டாயமாக வாழ்த்த வீராங்கனைகளுக்கு விளையாட்டுத்துறை அல்லது பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே தான் வீராங்கனைகள் இதுபோல் ஒரே பதிவை காப்பி பேஸ்ட் செய்திருப்பார்கள் என தோன்றுகிறது. குறிப்பாக பூஜா தண்டாவின் பதிவில் இருந்த TEXT: என்பதை பார்க்கையில் இது மேலும் உறுதிபடுத்த முடிகிறது. காரணம் ஒரே மாதிரியான விசயத்தை சமூக வலைதளத்தில் பரப்ப பதிவிட வேண்டிய பதிவை இதுபோல் குறிப்பிட்டு தான் அனுப்புவார்கள். ஆனால், பூஜா தண்டா சரியாக கவனிக்காமல் அதை பதிவிட்டுவிட்டார்.

நாட்டின் புகழை உலகெங்கும் பரப்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒருபக்கம் பாஜக வேட்பாளர்களாக மாற்றப்பட்டு வருகிறார்கள். இந்த சூழலில் அவர்களின் கண்ணியத்தை சீர்குழைக்கும் வகையில் பிரதமர் மோடியை ஒரே மாதிரியான பதிவில் வாழ்த்த ஒரு வீராங்கனைகளுக்கு அழுத்தம் தரப்பட்டால் அது நிச்சயம் கண்டிக்கத்தக்கது.

articlecinemaPoliticssports

ஆம், மக்களும் அரசியல்வாதிகளே…

தேர்தலில் போட்டியிடும் தங்கள் கட்சிக்கு வெற்றி வாய்ப்பே இல்லை என்று தெரிந்த பின்னரும் நாற்பதும் நமதே என அசராமல் பேசித்திரியும் அரசியல்வாதிகளைப் போல், தனக்கு பிடித்த கிரிக்கெட் அணி வெற்றி பெறாது என தெரிந்த பின்னரும், தனக்கு பிடித்த நடிகனின் படம் நன்றாக ஓடாது என அறிந்த பிறகும் கப் நமக்கு தான், படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகப்போகுது என்பார்கள்.

தேர்தலில் தங்கள் கட்சி தோல்வி அடைந்துவிட்டால் வெற்றிகரமான தோல்வி, அடுத்த தேர்தலுக்கன முன்னோட்டம் இது, எங்கள் கட்சியில் உள்ள இந்த நிர்வாகி சரியில்லை, தேர்தல் ஆணையம் சரியில்லை, வாக்குப்பதிவு இயந்திர மோசடி என அரசியல்வாதிகள் சப்பைக்கப்பட்டு கட்டுவார்கள்.

இதே போல் தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் அணி தோல்வியடைந்துவிட்டால் They won the cup, We won hearts, நடுவர் சரியில்லை, மேட்ச் பிக்சிங், அம்பானி காசு கொடுத்துட்டான், எங்க டீம்ல இந்த ப்ளேயர் சொதப்பிட்டான், அந்த ப்ளேயருக்கு இஞ்சூரி ஆகிருச்சு என்று ஏதாவது சொல்லி சப்பைக்கட்டு கட்டுவார்கள். இதே போல் தங்களுக்கு பிடித்த நடிகனின் படம் தோல்வியடைந்துவிட்டால் டைரக்டர் சரியில்ல, மியூசிக் சொதப்பிருச்சு, ரிலீஸ் டேட் சரியில்ல, பட்ஜட் ப்ராப்ளம் என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள்.

ஒரு வேளை தங்கள் கட்சியோ, பிடித்த கிரிக்கெட் அணியோ, படித்த நடிகரின் படமோ வெற்றி பெற்றுவிட்டால் இனி நாங்க தான் எல்லாம் என்று ஆட ஆரம்பித்து விடுவார்கள். தோல்வியடைந்த பின்னர் அவர்கள் சொல்லும் காரணங்கள், குறைகள் யாவும் இப்போது நினைவில் வராது. அந்த வெற்றிக்கு காரணம் தனது கட்சித்தலைவர், கிரிக்கெட் அணியின் கேப்டன், பிடித்த நடிகன் என்று சொல்வார்கள். தோல்வியின் பழியை பிறர் மீது சுமத்துபவர்கள் வெற்றியின் பங்கை தனக்கு பிடித்தமானவரது தனி உடமையாக்குவார்கள்.

இதற்கு முழு முதல் காரணம் ஒன்று தான். தனி மனித வழிபாடு. அது நம்மை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். இவ்வுலகில் 100% உத்தமர்கள் யாருமில்லை. இவ்வுலகம் ஒளியாலும் இருளாலும் சூழப்பட்டுள்ளதை போல் தான் மனித உள்ளங்களும். நாம் தலைவன் எனக்கருதுபனின் இருள் சூழ்ந்த உள்ளத்தை காணும் முன் தனி மனித வழிபாட்டை கைவிடுவோம். அதை கண்டுகொண்டால் அவனது முதல் எதிரி நாமாகிவிடுவோம்.

BackgroundsportsTamilnadu

தமிழ்நாட்டு வீராங்கனையாக விளையாட நிறைய தடைகளை சந்தித்தேன் – தங்க மங்கை கோமதி

சென்னை பெரியமேட்டில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மற்றும் இளையோர் ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தபிதா மற்றும் வெள்ளி வென்ற மதிஷ் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட, தங்க மங்கை கோமதி செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர், தனக்கு வெளிநாடுகளில் பயிற்சி தேவைப்படுவதாக கூறினார். அதன் மூலம் சிறப்பான பயிற்சி பெற்று ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக தங்கம் வெல்ல வேண்டும் எனக்கூறிய அவர், ஏழ்மை நிலையில் நல்ல திறமையான வீரர்கள் இருப்பதாகவும் அவர்களுக்கு அரசு போதிய உதவிகளை செய்துத்தர வேன்டும் என்றார்.

தற்போது நான் கர்நாடகாவில் பணியாற்றி வருவதாகவும் தமிழகத்தில் தனக்கு அரசு வேலை கிடைத்தால் தமிழகத்திற்கு மேலும் பல்வேறு பெருமைகளை சேர்ப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். மேலும், தமிழ்நாடு சார்பாக தான் விளையாட பல்வேறு தடைகள் இருந்ததாகவும் கோமதி கூறினார். தான் தமிழ்நாட்டை சேர்ந்தவராக விளையாடாமல் கர்நாடகாவை சேர்ந்தவராக விளையாடி இருந்தால் யாரும் தன்னை கண்டுகொண்டிருக்க மாட்டார்கள்.

நியூசு கருத்து:

தமிழகத்தை பொறுத்தவரை குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர பெரும்பாலான வீரர்களுக்கு திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பொருளாதார பலம் பலம் படைத்தவர்கள் திறமை இல்லாவிட்டாலும் பணத்தின் மூலமாக வாய்ப்புகளை பெறுவதால் இதுபோன்ற திறமையானவர்கள் அங்கீகரிக்கப்படுவதில்லை. ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவம் தடகள போட்டிகளுக்கு வழங்கப்படாததால் சாதனையாளர்கள் இனம்காணப்படாமல் உள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த கோமதி, தான் தமிழ்நாட்டிற்காக விளையாட பல்வேறு தடைகள் இருப்பதாக கூறியதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதன் பின்னணியில் பல்வேறு சாதிய, பொருளாதார அரசியல்கள் நிறைந்துள்ளன. இதனை ஊடகங்கள் இதுவரை பெரிதுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

articlesportsTamilnadu

சித்ரா, கோமதியை புகழும் நாம் சாந்தியை மறந்துவிட்டோமே..!

சித்ரா,கோமதி இவர்களின் வெற்றி புகைப்படங்கள் மனதிற்கு அவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது.

இவர்களின் வெற்றியை கொண்டாடும் அதே சமயத்தில், இதேப்போன்றொரு வெற்றியை பெற்று, பின் ஏதோ ஏதோ அறிவியல் சொற்களை சொல்லி ஒழித்துக்கட்டப்பட்ட தமிழக வீராங்கணை சாந்தியின் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை. சாந்தி 2006 ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றவர்.

வெள்ளிப்பதக்கம் வென்று தமிழகமே அவரது வெற்றியை கொண்டாடிக்கொண்டிருந்த சமயம் தேவையே இல்லாத ‘பாலின பரிசோதனை’ ஒன்றை செய்து சாந்தி, பெண்ணே இல்லை என்று கூறி பதக்கத்தை பறித்துக்கொண்டதுடன், தடகள போட்டிகளில் பங்கேற்பதற்கு நிரந்தர தடையும் விதிக்கப்பட்டது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து என்ன செய்வது, எங்கு குரல் கொடுப்பது என்றுக்கூட சாந்திக்கு தெரிந்திருக்கவில்லை.

நியாயத்திற்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாந்தி ஒரு‌முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், சாந்திக்கு செய்யப்பட்ட பாலின பரிசோதனை அவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்ததில்லை என காலம் கடந்து செய்திகள் வந்தது. சாந்திக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பயிற்சியாளர் வேலையும் பல்வேறு சட்டப்போராட்டத்திற்கு பின்தான் கிடைத்தது.

சாந்தி தற்போது திடமாக இருக்கிறார், தனக்கு மறுக்கப்பட்ட வெற்றியை தன்னுடைய மாணவர்கள் மூலமாக வென்றெடுக்க காத்துக்கொண்டிருக்கிறார். ‘உங்களால் அநீதி இழைக்கப்பட்டு பதக்கத்தை பறிக்கொடுத்த புதுக்கோட்டை சாந்தியினுடைய மாணவன்’ என்கிற குரல் ஏதோ ஒரு சர்வதேச போட்டியில் ஒலிக்கத்தான் போகிறது.

சாந்தி,சித்ரா,கோமதி இவர்களின் வெற்றி. நமக்கான வெற்றி.

-ராகுல் பாஸ்கர்

sports

கோலிக்கு கோப்பை கிடைக்குமா? உலகக்கோப்பைக்கான இந்திய வீரர்கள் அறிவிப்பு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் வீரர்கள் பட்டியலை நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அறிவித்துள்ளன.

இந்திய அணியை பொறுத்தவரை இம்முறை வீரர்கள் தேர்வு மிகவும் குழப்பமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில் அண்மையில் நடந்த கிரிக்கெட் தொடர்களில் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் என பார்த்தால் கோலி, தோனி, ரோகித் சர்மா மட்டுமே. மற்றா வீரர்கள் அதிகம் சொதப்பி வந்தனர். குறிப்பாக 4வது இடத்தில் விளையாடும் வீரர் யார் என்பது இந்திய அணி நிர்வாகத்திற்கே தெரியாத நிலையில் தான் இருந்தது. இதற்கு ராயுடு, ரிஷப் பாண்ட், விஜய் சங்கர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் எதிர்பார்க்கப்பட்டது. வேகப்பந்துவீச்சை பொறுத்தவரை முஹம்மது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா ஆகியோரும், சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரும் ஏறக்குறையே முன்பே உறுதி செய்யப்பட்டனர். அதன்படியே தற்போது இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில் கலீல் அஹமது, நவ்தீப் ஷைனி ஆகிய பந்துவீச்சாளர்களையும் சேர்ப்பது குறித்து பரிசீலித்ததாகவும், தொடரின் போக்கை பொறுத்து அவர்களில் ஒருவரோ, இருவருமோ இங்கிலாந்துக்கு மாற்று வீரர்களாக அனுப்பப்படுவார்கள் என தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்தார்.

இதில் நான்காம் வரிசை பேட்ஸ்மேனுக்கு தீர்வு காணும் வகையில் விஜய் சங்கருக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டது. மாற்று விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தான் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியிக் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக தமிழகத்தை சேர்ந்த அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் அணியில் இடம்பிடித்துள்ளார். இதே போல் தொடர்ந்து 4ம் வரிசையில் சொதப்பி வந்த அம்பத்தி ராயுடுவும் அணியில் இடம்பெறவில்லை. விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா என 4 ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். தொடக்க வீரர்களை பொறுத்தவரை ரோகித் ஷர்மா, தவான் ஆகியோரும் மாற்று வீரர் என்ற அடிப்படையில் கே.எல்.ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

sportsviral

கடுப்பான கூல் கேப்டன்… மைதானத்தில் இறங்கி மாஸ் காட்டிய தோனி

ராஜஸ்தான் அணியை சென்னை அணி வீழ்த்தியதன் மூலம், ஐ.பி.எல் போட்டி வரலாற்றில் 100 வெற்றிகளை குவித்த முதல் கேப்டன் என்ற சாதனையை தோனி படைத்துள்ளார்.

ஜெய்பூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 28 ரன்கள் எடுத்தார். குறிப்பாக, சாகர் வீசிய 3 வது ஓவரில் ரகானே எல்.பி.டபள்யூ ஆனார். அதற்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்தார். இதனையடுத்து, ரிவியூ கேட்குமாறு சாகர் முறையிட, தோனி நீண்ட யோசனைக்குப் பிறகு கடைசி நொடியில் ரிவ்யூ கேட்டார். அதற்கு பலனாக ரகானே, எல்.பி.டபள்யூ அவுட் என அறிவிக்கப்பட்டார்.

பின்னர், 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. வாட்சன் உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி தவித்தது. இதனையடுத்த களம் கண்ட தோனி 58 ரன்களிலும், ராயுடு 57 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அந்த ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய பந்து ஒன்றை ஒரு நடுவர் நோ பால் என்று அறிவித்தார். மற்றொரு நடுவர் அதனை நிராகரித்தார். இதனால், ஆத்திரமடைந்த தோனி, நேரடியாக களத்துக்கே சென்று நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், சென்னை அணி கடைசி பந்து திரில்லாக வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. இந்த போட்டியின் வெற்றியை விட தோனி ஆத்திரமடைந்து மைதானத்திற்குள் இறங்கி சென்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Indiasports

பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக பறக்கவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் – மீண்டும் நம்பர் 1

சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் XI பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் லீக் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய வாட்சனும், பிளெஸ்ஸிஸும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எதிரணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் பஞ்சாப் பவுலர்கள் தடுமாறினர்.

சென்னை அணியின் ஸ்கோர் 56-ஆக இருந்தபோது வாட்சன் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத்தொடர்ந்து, அரைசதம் கடந்து 54 ரன்கள் (38 பந்துகள், 4 சிக்ஸர், 2 பவுண்டரி) எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெஸிஸ் அவுட் ஆனார். இதன்பின் களமிறங்கிய ’சின்ன தல’ ரெய்னா தன்பங்கிற்கு 17 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் தோனி 37 ரன்களும், அம்பத்தி ராயுடு 21 ரன்களும் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. பஞ்சாப் அணியின் பவுலிங் தரப்பில் கேப்டன் அஷ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. அணியின் ஸ்கோர் 7-ஆக இருந்தபோது அதிரடி நாயகன் கிறிஸ் கெயில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய மயாங்க் அகர்வால் ’டக் அவுட்’ ஆனதால் பஞ்சாப் அணி 7 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பெரிதும் திணறியது. இதையடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் மற்றும் சர்ஃப்ராஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ராகுல் 55 ரன்களிலும், மில்லர் 6 ரன்களிலும், சர்ஃப்ராஸ் 67 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களை மட்டுமே எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. சென்னை அணியின் பவுலிங் தரப்பில் ஸ்காட் ககலகென் மற்றும் ஹர்பஜன் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

sportsworld

நியூசிலாந்து மசூதிகளில் துப்பாக்கிச்சூடு! 50 பேர் பலி: உயிர் தப்பிய பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள்

நியூசிலாந்தில் தொடர்ந்து 2 பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள். இந்த துப்பாக்கி சூட்டில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியாகியுள்ளது.
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச்சில் நகரில், ஹாக்லே பூங்கா அருகே, மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற பள்ளிவால் உள்ளது. மேலும் இன்று வெள்ளிக்கிழமையானதால், சுமார் 300க்கும் அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.


நியூசிலந்தில் கிரிக்கெட் தொடர் விளையாடி வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி வீரர்களில் சிலரும் அங்கு தொழுகைக்கு சென்றிருந்தனர். பள்ளிவாசல் உள்ளே நுழைந்தபோது, அங்கு பயங்கரமாக துப்பாக்கி சத்தம் கேட்டது. பின்னர் அங்கிருந்து பத்திரமாக ஓட்டல் அறைக்கு தப்பி சென்றனர் பங்களாதேஷ் வீரர்கள். துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர்.
இதற்கிடையே, பங்களாதேஷ்நியூசிலாந்து அணிகள் பங்கேற்கும் 3 வது டெஸ்ட் போட்டி, நாளை நடப்பதாக இருந்தது. ஆனால் இந்த சம்பவத்தால் இப்போட்டி நடக்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
முஷ்பிகுர் ரஹீம்: அல்லாஹ் எங்களை காப்பாற்றிவிட்டார். இதுபோன்ற சம்பவம் இன்னொரு முறை நடக்க கூடாது. எங்களுக்காக பிரார்த்தியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தமிம் இக்பால்: துப்பாக்கி சூட்டிலிருந்து மொத்த அணியும் தப்பித்துவிட்டோம். அச்சமூட்டும் அனுபவம். தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

1 2 3
Page 1 of 3