society

cinemasocietyTamilnaduVideo

சாதிச்சுவரால 17 பேரு செத்தத பேசமாட்டீங்களா? புள்ளிங்கோன்னா கேவலமா? – நடிகர் தீனா ஆவேசம்

தமிழ் திரைப்படங்களில் முக்கிய வில்லன் கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தீனா. ஜிம் பாயாக இருந்து படிப்படியாக உயர்ந்த தீனா சினி உலகம் என்ற யூடியூப் சேனலுக்கு வெளிப்படையாக ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் சினிமாவை கடந்து சமூகத்தில் உள்ள சாதிய ஏற்றத்தாழ்வு, வட சென்னை இளைஞர்களை புள்ளிங்கோ என அசிங்கப்படுத்தும் வன்மம், மேட்டுப்பாளையத்தில் 17 பேர் தீண்டாமை சுவறால் கொல்லப்பட்டது என பல விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

வீடியோ:

Educationpoemsociety

மதநோய்க்கு மரணங்கள் தான் மாத்திரையா? #JusticeforFathima

முழு விபரத்துக்கு:

ஒரு முஸ்லிம் முதல் மார்க் எடுப்பதா? – சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணத்தின் பகீர் பின்னணி

https://www.newsu.in/?p=3767

மாணவி உயிர்பறித்த மதவெறி – IIT-ஐ முற்றுகையிட்ட மாணவர் அமைப்பு

https://www.newsu.in/?p=3779

தமிழ்நாடு பாதுகாப்புன்னு நம்பி அனுப்புனோம்… மதவெறில கொன்னுட்டாங்க – கதறும் பாத்திமாவின் தாய்

https://www.newsu.in/?p=3786

பாத்திமா மரணத்துக்கு காரணம் என கூறப்படும் IIT பேரா.சுதர்ஷன் ஒரு சங்கி (வீடியோ ஆதாரம்)

https://www.newsu.in/?p=3793

BackgroundPoliticssocietyTamilnadu

சாக்கடை அள்ள கூட மெசின் இல்லாமல் சாகும் உயிர்கள்… EXPRESS AVENUEவில் அம்பலமான நாட்டின் இழிநிலை!

நாகரீக வளர்ச்சியிலும் கழிவுநீர்த்தொட்டி காவுகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகமான எக்ஸ்பிரஸ் அவென்யூ கீழ்தளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்காக ஐஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார் ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் என்ற நான்கு நபர்களை அழைத்துக்கொண்டு சென்று உள்ளார்.

இதில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கம் அடைந்துள்ளார். இதனையடுத்து அவருடைய அண்ணன் அருண்குமார், ரஞ்சித் குமாரை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கியுள்ளார்.

மயக்கம் அடைந்தவரை சாதூர்யமாக தேடி மேலே தூக்கி விட்ட அருண்குமார், விஷவாயுவின் கோரத்தால் கழிவுநீர் தொட்டியிலேயே உயிரிழந்தார்.

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருண்குமாரின் உடலை பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்டு வழக்கம்போல உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்பு பணிகளை செய்ய அனுமதியளித்த வணிக வளாகம், மனித கழிவை அகற்றும் மனிதர்களுக்கும் பாதுகாப்பு உபகரணங்களை கொடுத்து துப்புரவு பணிகளில் ஈடுபடுத்தியிருந்தால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.

துப்புரவு பணிகளின்போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் வழங்க வேண்டும் என அரசும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வரும் நிலையில், எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற சில வணிக வளாகங்கள் இதில் பாரபட்சம் காட்டுவது ஏன் என்ற கேள்வியை எழுப்புகிறது….

நஷ்ட ஈடின் மூலம் குறைந்தபட்சம் அருண்குமாரின் குடும்பத்திற்காவது எக்ஸ்பிரஸ் அவென்யூ போன்ற வணிக வளாகங்கள் பதில் கொடுக்க வேண்டும்.

கடந்த ஆண்டு ஆய்வுப்படி சென்னையில் மட்டும் கழிவுநீர்த்தொட்டியில் 144 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக பேனர் பலி, ஆழ்துளை பலிகளுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கூட கழிவுநீர்த்தொட்டியின் கணக்கற்ற பலிகளுக்கு மேற்கொள்ளப்படவில்லை என்பதே பெரும் வேதனை.

இது அரசு இயந்திரம் எதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுக்கிறது என்ற கேள்வியையும் எழுப்புகிறது?

hiddensocietyTamilnadu

நேத்து சுபஸ்ரீ, இன்னைக்கு அனுராதா… அப்போ அதிமுக பேனர், இப்போ அதிமுக கொடி

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி என்கிற அணுராதா. 30 வயதான இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இன்று காலை பணிக்கு செல்வதற்காக, அணுராதா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அணுராதா கோல்டுவின்ஸ் பகுதி வழியே செல்லும்போது அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்துள்ளது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் சடன் பிரேக் போட்டதில் வண்டி சறுக்கி கீழே விழுந்தவுடன், அந்த வழியே வந்த லாரி ராதாவின் கால் மீது ஏறிவிட்டது. தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கால்களில் அறுவை சிகிச்சை செய்து இரண்டு கால்களும் அகற்றப்பட்டது.

அப்பகுதியில் உள்ள அ.தி.மு.க பிரமுகர் யோகா மாஸ்டர் சுவாமி போமிவர்தன் – தாமரை இல்ல திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதற்காக, அவிநாசி சாலையின் ஒரு பகுதி முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அ.தி.மு.க கொடி கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளன. அந்த கொடி கம்பம் சரிந்து விழுந்ததே விபத்திற்கு காரணமெனவும், அதனை காவல் துறையினர் மறைப்பதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்த நிலையில், தற்போது அதிமுக கொடிக்கம்பத்தால் பெண் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

crimeIndiasociety

கொலையில் முடிந்த 2 ரூபாய் காற்று பிரச்சனை

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடா புறநகர் பகுதியில் உள்ள வலசபாக்கா கிராமத்தை சேர்ந்தவர் சூரிய நாராயண ராஜு. சூரிய நாராயண ராஜு அதே பகுதியில் உள்ள சாம்பா என்பவருக்கு சொந்தமான சைக்கிள் கடையில் தனது சைக்கிளுக்கு காற்று பிடிக்கும் படி கூறினார். சாம்பா சூரியநாராயணன் சைக்கிளுக்கு காற்று அடித்த பின்னர் 2 ரூபாய் பணம் கேட்டார். ஆனால் சூரிய நாராயண ராஜு பணம் தராமல் சாம்பா மீது தாக்குதல் நடத்தினார்.

இதனால் சாம்பா சூரியநாராயண ராஜு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சம்பாவின் நண்பர் அப்பாராவ் அதே இடத்தில் இருந்த நிலையில் சைக்கிளில் காற்று அடித்துவிட்டு பணம் கேட்டால் அடிக்கிறாயா என்று கோபத்தில் கடையில் இருந்த இரும்பு ராடை கொண்டு சூரிய நாராயண ராஜு மீது தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த நிலையில் சூரியநாராயண ராஜுவை காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சூரிய நாராயண ராஜு உயிரிழந்தார். இதையடுத்து காக்கிநாடா ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

environmentIndiasociety

வீட்டை மறைப்பதாக கூறி 5 மரங்களை பாதரசம் செலுத்தி கொன்ற மருத்துவரின் கொடுஞ் செயல்

பெங்களூரு நகரில் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் பஞ்சசீலா என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் நிலம் வாங்கி புதிதாக வீடு கட்டியவர் மருத்துவர் நரேந்திரா. அவர் வீட்டின் முன்பாக 15 வயதான ஐந்து மரங்கள் இருந்தது. இந்த மரங்கள் தன் வீட்டின் முன் தோற்றத்தை மறைப்பதாக அவ்வப்போது அக்கம்பக்கத்தினரிடம் கூறிவந்தார்.

மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அவர் முயற்சித்தபோது அனைவரும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இரவு தன் வீட்டின் முன் இருந்த மரத்தின் அடி தண்டில் பல துளைகளிட்டு அதில் பாதரசத்தை செலுத்தியுள்ளார் மருத்துவர் நரேந்திரா. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பெங்களூரு மாநகராட்சியில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் இன்று மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் சம்பவ இடத்தை ஆய்வு செய்து நரேந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மரத்தில் செலுத்தப்பட்டு இருந்த பாதரசத்தை அகற்றினர் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மருத்துவரை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

healthhiddensocietyTamilnadu

“என்ன காய்ச்சல்னே சொல்லாம குழந்தைய கொன்னுட்டாங்க, ஆம்புலன்ஸ் கூட தரல”

நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழைய மீனவ கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஹரிணி (3 வயது) இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். ஹரிணிக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த இரண்டு நாட்களாக சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தநிலையில், போதிய சிகிச்சை அளிக்காமல் அரசு மருத்துவமனை அலட்சியம் செய்ததால் ஹரிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். “2 நாட்களாக ஹரிணிக்கு சிகிச்சை அளிக்காத நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவர்கள் கண்டுகொள்ளாமல், செவிலியர் மட்டுமே சிகிச்சை அளித்ததால் திங்கட்கிழமை ஹரிணி மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரிணிக்கு என்ன காய்ச்சல் என்று கூறாமல், என்ன மருத்துவம் அளிக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்காமல் நோட்டு பேப்பரை கிழித்து அதில் சீல் வைத்து குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர் சான்று அளித்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இறந்த குழந்தையை வீட்டிற்கு எடுத்து செல்ல அமரர் ஊர்தி கூட தராமல் மருத்துவமனை நிர்வாகம் அலைக்கழுத்ததாகவும், கடைசியாக தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுத்து பிரேதத்தை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

crimesocietyTamilnadu

மாஞ்சா நூல் அறுத்து 3 வயது குழந்தை மரணிக்க காரணமான நாகராஜ் கைது

சென்னை கொருக்குப்பேட்டை அடுத்த கொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மூன்று வயது மகன் அபினேஷ்வரனுடன் தண்டையார்பேட்டையில் இருந்து கொண்டித்தோப்புக்கு கொருக்குப்பேட்டை வழியாக பைக்கில் சென்று கொண்டிருந்தார் கோபால். அப்போது மீனாம்பல் நகர் மேம்பாலத்தின் மீது திடீரென பட்டம் விடும் மாஞ்சா நூல் அறுந்து வந்துள்ளது. இது குழந்தையின் கழுத்தை அறித்துள்ளது. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த குழந்தையை உடனடியாக அருகில் இருந்தவர்கள் ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே குழந்தை அபினேஷ் உயிரிழந்தான்.

இந்த நிலையில் சிறுவன் மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூலில் காற்றாடி விட்ட நாகராஜ் மற்றும் 17 வயது சிறுவனை போலீஸ் கைது செய்தது. நாகராஜ் ஆபத்தை விளைவிக்க கூடிய பொருள் என தெரிந்தும் அதனை பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்த ஆர்கேநகர் போலீசார், 17 வயது சிறுவனை சிறுவர் காப்பதற்கு அனுப்பி வைத்தனர்.

environmentIndiasociety

இந்திய தலைநகரின் மூச்சுக்குழாய் அடைபட்டுக் கிடக்க 7 முக்கிய காரணங்கள்

தலைநகர் டெல்லியில் கடந்த 2 வாரங்களாக காற்று மாசு ஏற்பட்டு மக்கள் பெரும் திண்டாட்டத்திற்கு ஆளாகி உள்ளனர். பனி காலத்தின் தொடக்கத்தில் டெல்லியில் காற்று மாசு ஏற்படுவது கடந்த சில வருடங்களாக வழக்கமாகி வருகிறது.காற்று மாசுபாட்டைத் தடுக்க வேண்டிய டெல்லி மாநில அரசும், மத்திய அரசும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி ஏற்கனவே திணறிக் கொண்டிருக்கும் மக்களை மேலும் திணறடித்து வருகிறார்கள்.பகல் 12 மணிக்குக் கூட சூரியனை கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு டெல்லி வீதிகளில் அடர்புகை வலம் வருகிறது. எவ்வளவு முயற்சிகள் செய்தாலும் விடாக் கொண்டன் போல நகருக்குள் புகுந்த புகை வெளியேற மறுப்பது டெல்லி வாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.நல்ல ஆரோக்கியமான உடல்நலம் உடையவர்களே மூச்சுத் திணறி மயங்கி விழும் நிலையில் சுவாசக் கோளாறு உடையவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நிலை குறித்துச் சொல்லத் தேவையில்லை. இப்படி ஒரு செயற்கை பேரிடரில் டெல்லி சிக்கிக் கொள்வதற்கு காரணம் என்ன?

1) நகரமயமாதல் ஒரு துணைகண்டத்தின் தலைநகரம் என்கிற வகையில் டெல்லி மாநகரம் மேலும் நவீனப்படுவதில் பிரச்சனை இல்லை. ஆனால், அதற்காக இயற்கையை பலி கொடுத்ததுதான் வினையாக முடிந்துவிட்டது. நகரமயமாதலுக்காக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதன் விளைவு தற்போது அங்கு கார்பன்டை ஆக்ஸைடை சுவாசிக்க மரங்களே இல்லை. ரத்தத்தை சுத்திகரிக்கும் இதயத்தைப் போல் இருந்த மரங்களை வெட்டிவிட்டு தற்போது செயற்கை காற்று சுத்திகரிப்பானை நாடித் திரிகிறார்கள் டெல்லி வாசிகள். முற்றும் முழுவதுமாக காற்று அற்றுப்போனதால் ஊருக்குள் புகுந்த மாசுப் புகை வெளியேற வழிதெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கிறது.

2) வாகனப் பெருக்கம்நகரமயமாதலால் டெல்லி தற்போது பரந்து விரிந்த மாநகராக மாறிவிட்டது. இதனால் டெல்லியில் வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் பயணத்திற்காக பல்வேறு வகையான வாகனங்களை உபயோகப்படுத்துகிறார்கள். இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையே டெல்லி மக்களை திணறடிக்கப் போதுமானது. போக்குவரத்துக்காக அரசுப் பேருந்துகள், மின்சார ரயில், மெட்ரோ என பல வசதிகள் இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. தனி ஒரு நபருக்காக கார் ஓட்டும் புன்னியவான்களுக்கு டெல்லி போன்ற மாடர்ன் நகரங்களில் குறைச்சல் இல்லை.

3) விளை நிலங்கள் எரிக்கப்படுதல்தலைநகர் டெல்லிக்கு அருகில் இருக்கும் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் இது அறுவடைக் காலம். எனவே அறுவடையை முடித்துவிட்ட விவசாயிகள் விளை நிலங்களில் உள்ள பயிர் எச்சங்களை தீயிட்டு கொழுத்தி வருகின்றனர். பல லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் கொளுத்தப்படுவதால் உண்டாகும் புகை அந்தந்த மாநிலங்களைத் தாக்காது நேராக டெல்லிக்கு கிளம்பி வந்துவிடுவதாக டெல்லி அரசு குற்றம் சாட்டுகிறது.

4) தொழிற்சாலைகள்டெல்லியில் உள்ள தொழிற்சாலைகள் வெளியேற்றும் புகை, குப்பைக் கூளங்கள் எரிக்கப்படுவதால் உருவாகும் புகை, புதிய கட்டுமானப் பணிகளின் போது ஏற்படும் புகையும் டெல்லியின் மூக்குத் துவாரங்களை அடைத்துக் கொண்டு இருக்கிறது.

5) தீபாவளிகடந்த வாரம் தீபாவளி பண்டிகையின் போது டெல்லி அரசின் தடையையும் மீறி பலர் பட்டாசுகளை கொளுத்தியதால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதில் பலர் பட்டாசுகளை வெடித்தால் மாநில அரசின் சட்டம் பாயும் என்று பயந்து கொண்டு வானவேடிக்கை நிகழ்த்தியது குறிப்பிடத் தக்கது. இப்படி தீபாவளியின் போது கொளுத்தப்பட் வானவேடிக்கைகள், பட்டாசுகள்,விளக்குகளினால் காற்று மாசுபாடு தீவிரமடைந்துள்ளது.

6) பருவநிலைதற்போது தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கி உள்ளது. குளிர்காலங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவற்றால் காற்றின் நுண்ணிய துகள்களை வெகு தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. இதனால் மாசடைந்த காற்று டெல்லி நகரையே சுற்றி சுற்றி வருகிறது. பனி மூட்டமும் புகை மூட்டமும் சேர்ந்து சூரியனையே மறைத்துவிட்டதால் பட்டப்பகலில் கூட வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டு கொண்டு வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள்.

7) அரசியல்வாதிகள்நாட்டின் முக்கிய அமைச்சர்களும், பிரதமரும் டெல்லியில் வசிக்கின்றனர். இவர்களின் போக்கு வரத்துக்காக மட்டும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அமைச்சருக்கு ஒரு வாகனம், உதவியாளருக்கு ஒரு வாகனம், பாதுகாப்பு வீரர்களுக்கு ஒரு வாகனம் என ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் குறைந்தது 5 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மாசடைந்த டெல்லியை மோட்சமடைய செய்யும் வேலையை சிறப்பாக செய்து வருகிறன.இவையல்லாமல் காற்று மாசை தடுக்க வழி தெரியாமல் மத்திய அரசும், டெல்லி மாநில அரசும் ஒருவரை ஒருவர் குறை சொல்வது பிரச்சனையின் தீவிரத்தை உக்கிரமாக்கி வருகிறது.

1 2 3 6
Page 1 of 6