fact check

fact checkTamilnadutechnology

“ஆபாசப்படம் பார்த்தால் கைது இல்லை, நம்பாதீங்க”- குழப்பத்தை தெளிவுபடுத்திய ஏடிஜிபி ரவி

ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏ.டி.ஜி.பி. ரவி எச்சரிக்கை விடுத்ததாக பல்வேறு தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்களில் செய்திகள் வெளியாகின. இது கடந்த ஒருவாரத்துக்கும் மேலாக மீம்கள் வாயிலாக பேசுபொருளாக இருந்து வந்தது. பலருக்கும் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இத்தகையை குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கும் வகையில், ஏடிஜிபி ரவி இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார். அதில், “குழந்தைகளை வைத்து ஆபாசப்படம் எடுப்பவர்கள், அதை பரப்புபவர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும். பார்ப்பவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படாது. அவர்களுக்கே தெரியாமல் கூட பார்க்கும் வாய்ப்பு உள்ளது. யூடியூபில் நான் சொன்னதை மிகைப்படுத்தி கூறிவிட்டார்கள்” என்றார்.

fact checkIndiaPoliticsTamilnadu

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு வாக்களிக்காமல் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததா?

குடியுரிமை திருத்த மசோதா திங்கட்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆதரவாக 311 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சியினரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், எப்படி 80 வாக்குகள் மட்டுமே எதிராகப் பதிவாயின, யார் ஓட்டுப் போடவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஒரு கட்டத்தில், தி.மு.க. இந்த மசோதாவை எதிர்த்தாலும் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்புச் செய்துவிட்டது என மூத்த பத்திரிகையாளர்களே எழுத ஆரம்பித்தார்கள். இத்தனைக்கும் முந்தைய நாள் இரவு, தொலைக்காட்சியில் நேரலையாக நடந்த நிகழ்வில், என்ன நடந்தது என்பதில் இவ்வளவு குழப்பம். மக்களவை உறுப்பினர்களிடம் கேட்டால், “ஏன் தி.மு.க.தான் எதிர்த்து வாக்களித்ததே” என்கிறார்கள். இதுகுறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களித்ததற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் ஆதாரம் இல்லை. எந்தப் பத்திரிகையிலும் எந்தக் கட்சியெல்லாம் எதிர்த்து வாக்களித்தார்கள், எந்தக் கட்சியெல்லாம் ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற விவரங்கள் இல்லை.

இதையெல்லாம்விட உச்ச கட்டக் குழப்பம், முரசொலியில் வந்த செய்தி. “குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா குறைபாடுடையது! மக்களவையில் டி.ஆர். பாலு பேச்சு! தி.மு.க. வெளிநடப்பு!” என்றது அந்தச் செய்தி.

ஆகவே, தி.மு.க. மசோதாவை எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்புச் செய்ததற்கு முரசொலியே ஆதாரமாக இருந்தது. ஆனால், எதிர்த்து வாக்களித்ததற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இது தவிர, தாங்கள் வெளிநடப்புச் செய்வதாக டி.ஆர். பாலு பேசிய உரையும் சமூக வலைதளங்களில் வலம் வந்தது.

உண்மையில் என்ன நடந்தது?

வாக்களிப்பில் தி.மு.க. எம்.பிக்கள் கலந்துகொண்டு எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். ஆனால், மக்களவையில் உள்ள எலெக்ட்ரானிக் வாக்களிக்கும் ஸ்விட்சுகளில் ஏகப்பட்ட பிரச்சனை. பலரது வாக்குகள் பதிவாகவேயில்லை என்கிறார்கள் எம்பிக்கள். இந்த 311-80 என்பது பதிவான வாக்குகளில் ஆதரவு – எதிர்ப்பு விகிதம்தான். உண்மையிலேயே எவ்வளவு ஆதரவு, எவ்வளவு பேர் எதிர்ப்பு என்பது யாருக்கும் தெரியாது.

இந்தக் குழப்பத்திற்குப் பிறகு, வாக்குகள் பதிவாகாதவர்களுக்கு தனியாக வாக்குச் சீட்டுகள் கொடுத்து வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றின் முடிவுகள் இன்னும் யாருக்கும் தெரியாது. லோக்சபா நடவடிக்கைகளுக்கென ஒரு இணையதளம் இருக்கிறது. அதில் மக்களவையின் ஒவ்வொரு மணி நேரமும் யார் என்ன செய்தார்கள் என தகவல்கள் இருக்கும். இந்தக் குறிப்பிட்ட டிசம்பர் 9ஆம் தேதியன்று, மக்களவை இணையதளத்தில் இரவு 10-11வரை என்ன நடைபெற்றது என்ற தகவல்கள் இருக்கின்றன.

11-12 மணியளவில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இந்த 11 -12 மணியளவில்தான் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தகவல் லோக் சபா இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்டால், எந்தக் கட்சி யாருக்கு வாக்களித்தது என்பதில் தெளிவு வரும்.

முரசொலி ஏன் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக செய்தி வெளியிட்டது?

அதாவது காலையில் குடியுரிமை திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, அறிமுக நிலையிலேயே அந்த மசோதாவை தி.மு.க. எதிர்த்தது. அந்தத் தருணத்தில்தான், அதனை எதிர்த்துப் பேசிவிட்டு டி.ஆர். பாலு வெளிநடப்புச் செய்தார்.

இந்தச் செய்திதான் தி.மு.க. வெளிநடப்புச் செய்ததாக முரசொலியில் வெளியானது. தினத்தந்தி செய்தியிலும் தலைப்பில் தி.மு.க. வெளிநடப்பு என்று இருந்தாலும், செய்திக் கட்டுரையின் உள்ளே, தி.மு.க. அறிமுக நிலையில் வெளிநடப்புச் செய்ததாகவும் பிறகு திரும்பி வந்ததாகவும் இருந்தது.

எல்லோர் கண் முன்பும் நடந்த ஒரு நிகழ்வு செய்தியாகப் பதிவாவதில் இவ்வளவு குழப்பம்!

-முரளிதரன் காசி விஸ்வநாதன்

fact checkhistoryTamilnadu

திருக்குறளில் இந்து கடவுள்கள் பெயர் இருப்பதாக பதிவிட்ட எச்.ராஜா.. உண்மை என்ன?

தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக இணையத்தில் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். தமிழக பாஜக திருவள்ளுவரை அவமானப்படுத்திவிட்டது. அவருக்கும் கூட மத சாயம் பூசிவிட்டது என்று குறிப்பிட்டு பலர் இணையத்தில் தமிழக பாஜகவிற்கு எதிராக டிவிட் செய்து வருகிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பல்வேறு கட்சித்தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதற்கு பாஜகவே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அரசியல்வாதிகள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்து வருகிறார்கள்.

இதற்கிடையே நேற்று டிவிட்டரில் கீழ்காணும் பதிவை பகிர்ந்திருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, திருக்குறளில் இந்து மத கடவுள்கள் பெயர் இருப்பதாக கூறினார்.

எச்.ராஜா பகிர்ந்துள்ள அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள குறள்களை நாம் நியூசு தரப்பில் வாசித்து அதன் பொருள் விளக்கத்தை ஆராய்ந்தோம். அதில் எச்.ராஜாவின் பதிவில் கூறியதை போல் எந்த இந்துமத கடவுள்களின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பது உறுதியாகிறது.

எச்.ராஜா குறிப்பிட்டுள்ள குறள்களையும் அதன் விளக்கத்தையும் தற்போது காண்போம்.

குறள் 610:

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு

பொருள்:

சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்.

குறள் 1103:

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு

பொருள்:
தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?.

குறள் 84:

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.

பொருள்:

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

குறள் 167:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

பொருள்:

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

குறிப்பு: திருமகள் என இக்குறள்களில் செல்வத்தையே வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

குறள் 179:

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு

பொருள்:

பிறர் பொருளைக் கவர விரும்பாத அறநெறி உணர்ந்த அறிஞர் பெருமக்களின் ஆற்றலுக்கேற்ப அவர்களிடம் செல்வம் சேரும்.

குறள் 519:

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு

பொருள்:

எடுத்த காரியத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவரின் உறவைத் தவறாக எண்ணுபவரை விட்டுப் பெருமை அகன்று விடும்.

குறள் 617:
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.

பொருள்:
ஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும்.

குறள் 920:
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு

பொருள்:
இருமனம் கொண்ட பொதுமகளிருடனும், மதுவுடனும், சூதாட்டத்தினிடமும் தொடர்பு கொண்டு உழல்வோரைவிட்டு வாழ்வில் அமைய வேண்டிய சிறப்பு அகன்றுவிடும்.

குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்

பொருள்:
பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.

குறள் 25:
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

பொருள்:
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும்ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்.

குறள் 269:
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்

பொருள்:
எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்.

குறள் 326:
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

பொருள்:
கொலை செய்யாமையை வாழ்வில் அறநெறியாகக் கொண்டவரின் பெருமையை வியந்து, சாவுகூட அவர் உயிரைப் பறிக்கத் தயங்கி நிற்கும்.

குறள் 765:
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.

பொருள்:
உயிரைப் பறிக்கும் சாவு எதிர்கொண்டு வந்தாலும் அஞ்சாமல் ஒன்றுபட்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதற்கே படை என்ற பெயர் பொருந்தும்.

குறள் 1083:

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு

பொருள்:
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை.

குறள் 1085:
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து

பொருள்:
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.

இத்தனை குரள்களிலும் திருமால், இந்திரன், எமன், ப்ரம்மதேவர் என்ற பெயர் ஒரு இடத்தில் கூட வரவில்லை. மரணம் குறித்து வரும் இடத்தில் எல்லாம் எமன், கூற்றுவன் என பொருளறிஞர்கள் விளக்கம் எழுதியுள்ளனர். ஆனால், வள்ளுவர் எமன் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லக். இந்து மதத்தினர் எமன் என்பதை போல், இஸ்லாமியர்கள் உயிர் எடுக்கவரும் வானவரை இஸ்ராயீல் என அழைக்கிறார்கள். அதே போல், சில இடங்களில் பொருளறிஞர்கள் கடவுள் குறித்து வரும் இடத்தில் திருமால், இந்திரன் என்னும் சொற்களை புரிதலுக்காக பயன்படுத்தியுள்ளார்கள். காரணம், இந்துக்கள் அதிகமுள்ள சமுதாயத்தில் அவர்களது தெய்வங்களை குறிப்பிட்டால் தான் புரியும் என்ற காரணத்தால் கூட இருக்கலாம். மேலும், பொருளறிஞர்களும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களாக உள்ளதாலும், அதன் தாக்கம் இருந்திருக்கும். மாறாக வள்ளுவர் எழுதியுள்ள குறலில் எச்.ராஜா குறிப்பிட்டதை போல் எந்த மதத்தின் கடவுள் பெயரும் இல்லை என்பதே தெளிவாகிறது.

இந்து மத வேதங்கள் பலவும், பிறப்பின் அடிப்படையில் நால் வர்ண ஏற்றத்தாழ்வை முன்வைக்கின்றன. அப்படி இருக்கையில் எச்.ராஜா கூறுவதை போல், திருக்குறள் இந்துமத கருத்தை பிரதிபலிப்பதாக இருந்தால், அவர் பிறப்பால் அனைவரும் சமம் என்ற சமுத்துவ கருத்தை வலியுறுத்தும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளை எழுதி இருக்க மாட்டார்.

fact checkTamilnadu

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவிடப்பட்டதா… உண்மை என்ன…?

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பதற்காக அரசு மேற்கொண்ட பணிகளுக்கு ரூ.11 கோடி செலவானது என வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியதாக செய்தி பரவி வருகிறது. தினமதி என்ற நாளிதழ் பேஸ்புக்கில் வெளியிட்ட படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசு பொய்யான கணக்குகளை போட்டு செலவு கணக்கை அதிகமாக்கி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கமளித்துள்ளார். சுஜித் மீட்பு பணிக்கு ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது என அவர் கூறியுள்ளார். மீட்பு பணிக்கு ரூ.5 லட்சம் மற்றும் 5 ஆயிரம் லிட்டர் டீசல் மட்டுமே செலவானதாக கூறிய அவர், மீட்பு பணிக்கு செலவான தொகை குறித்து பொய்ச் செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உள்ளூர் போர்வேல் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் செய்த பணிக்கு பணம் வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், L&T நிறுவனம் தாங்கள் செய்த பணிக்கான செலவு விவரங்களை இன்னும் அனுப்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

fact checkTamilnadu

கூடங்குளம் அணு உலை தாக்கப்பட்டதா…?

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணு உலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. பலரும் இதுகுறித்து அச்சம் தெரிவித்து பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இதுகுறுத்து கூடங்குளம் அணு உலை நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், கூடங்குளம் அணுவுலை கட்டுப்பாட்டு அமைப்புகள் தனித்துவமானது என்றும், வெளியிலிருந்து எந்த சக்தியாலும் அதை கையாள முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அணுஉலையை சைபர் (கணினி இணையம்) மூலம் கையாண்டு தாக்குதல் நடத்த முடியாது என தெரிவித்துள்ள நிர்வாகம், கூடங்குளத்தில் 2 அணுவுலையிலும் மின் உற்பத்தி நடப்பதாக தெரிவித்துள்ளது.

Comedyfact checkworld

ஐ.எஸ். தலைவருடன் செத்து செத்து விளையாடும் ட்ரம்பும், ஊடகங்களும்… அவர் என்ன UNDERTAKERஆ?

தினத்தந்தி:

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார்.

அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் என உளவு அமைப்பின் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க ராணுவ படைகள் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. இதில், அல் பாக்தாதி கொல்லப்பட்டு உள்ளார் என சிரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன் இந்த தகவலை ஈரான் அரசுக்கும் தெரிவித்து உள்ளது.

நியூசு பின்னணி:

WWE இல் வரும் UNTERTAKER இறந்து போய் மீண்டும் வருவார், அவருக்கு 7 உயிர்கள் உள்ளன என்று சிறுவயதில் நாம் பேசி இருப்போம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நெருக்கமான அந்த WWE நிறுவனம் உலக மக்கள் பலரை UNTERTAKER கட்டுக்கதையை வைத்து முட்டாளாக்கியது. தற்போது அதே அமெரிக்க அதிபர் ட்ராம்பும், அவரது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும் அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களும் பாக்தாதியை UNTERTAKER போல் பல முறை இறந்துவிட்டார் என செய்திகள் வெளியிடுவார்கள். ஆனால், அவர் மீண்டும் ஏதாவது ஒரு வீடியோவில் பேசுவார். தற்போதும் அதே போன்று 6வது முறையாக அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று செய்தி வெளியிட்ட இதே தினத்தந்தி கடந்த 2017-ம் ஆண்டு பாக்தாதி இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது போல் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி எப்படி தனக்கு நெருக்கடியோ அல்லது அரசு மீது அதிகம் விமர்சனம் எழுகிறதோ, அப்போதெல்லாம் பயங்கரவாதம், பாகிஸ்தான் பற்றி பேசுவார் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கும்.

அதே போல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அரசு மீது நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஐ.எஸ்.தலைவர் இறந்துவிட்டதாக கூறிவந்துள்ளார். அந்த வகையில் தற்போதும் அதை செய்துள்ளார். ஆனால், இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்களும் பல முறை அதே செய்தியை மாற்றி மாற்றி வெளியிட்டு தங்கள் மீதுள்ள கடமையை மறந்து மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்கள்.

fact checkIndiaMedia CriticsPolitics

கருத்துக்கணிப்புக்கும் தேர்தல் முடிவுக்கும் எவ்ளோ வித்தியாசம்… அசிங்கப்பட்ட ஊடகங்கள்!

நடந்து முடிந்த அரியானா சட்டசபை தேர்தல் பாஜக 40 தொகுதிகளையும், காங்கிரஸ் 31 தொகுதிகளையும், பிற கட்சிகள் 19 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. எந்த கட்சியும் அதிக பொரும்பான்மை பெறாததால் ஆட்சியமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

தேர்தலில் காங்கிரஸ் தோற்றதா அல்லது பாஜக தோற்றதா என்பதை விட தேசிய ஊடகங்களின் பொய்யான கருத்துக்கணிப்புகள் தோற்றது எனலாம். ஆம், அந்த அளவுக்கு கருத்துக்கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கு வித்தியாசம் உள்ளன.
டைம்ஸ் நவ் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 71 தொகுதிகளையும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ரிபப்ளிக் டிவி மற்றும் ஜான்-கி-பாத் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் பாஜக 52 முதல் 63 தொகுதிகளையும், காங்கிரஸ் 15 முதல் 19 தொகுதி வரையிலும் இந்திய தேசிய லோக்தள் ஒரு இடத்திலும், ஜனநாயக மக்கள் கட்சி 9 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் – போல்ஸ் ட்ராட் வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக 75-80 தொகுதிகளையும், காங்கிரஸ் 9-12 தொகுதிகளிலும், அகாலி தளம் 0-1, பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

சி.என்.என் நியூஸ் 18 தொலைக்காட்சி, இப்சாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அரியானாவில் பாஜக 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஓரளவு தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கமாக அமைந்தது இந்தியா டுடே – ஆக்சிஸ் மை போல் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு மட்டும் தான். அதில் பாஜக 32 முதல் 44 தொகுதிகளையும், காங்கிரஸ் 30- 42 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆக, இந்தியா டுடேவை தவிர மற்ற ஊடங்கள் எந்த சாத்தியக்கூறுகளும் இல்லாத பொய்யான தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பாஜகவுக்கு நிகராக எந்த ஒரு எதிர்க்கட்சியும் இல்லை என்பது போலவும், காங்கிரஸ் கட்சி முற்றிலுமாக துடைத்து எறியப்பட்டதை போன்றதொரு பிம்பத்தை உடைக்க முயன்றார்கள். ஆனால், காங்கிரஸ் அரியானாவில் பாஜகவுக்கு கடும் போட்டியை அளித்துள்ளது. மேலும், தேர்தலுக்கு பின்னால் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கும் நிலைகூட உருவாகும் வாய்ப்பு அங்கு ஏற்பட்டுள்ளது.

நியூசு விமர்சனம்:

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை தவறாக வெளியிட்டால் பயன் உண்டு. பிந்தைய கருத்துக் கணிப்புகளை மாற்றுவதால் ஓட்டுக்கள் கூடவோ குறையவோ செய்யாது. இதனால் கட்சிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதால் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உண்மையாக இருக்கும் என்ற கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வாக்குகளை பெற்றுத்தராது. ஆனால், பெரும் பணத்தை வழங்கும். 2019 மக்களவை தேர்தல் கருத்துக் கணிப்பு முடிவுக்கு பிறகு மோடிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் தொழிலதிபர் அதானி குழும பங்குகள் மிக அதிக உயரத்தை எட்டின. ஒரே நாளில் அதானி குழுமத்தின் பங்குகள் 17 சதவிகிதம் விலை உயர்ந்தன.

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் 17 சதவிகிதம் உயர்ந்து ஒரு பங்கு ரூபாய் 43.70 ஆக இருந்தது. அதானி கேஸ் நிறுவனத்தின் பங்குகள் 16 சதவிகிதம் உயர்ந்து 135 ரூபாய் ஆக உயர்ந்தது. அதானி பவர் நிறுவனத்தின் பங்குகள் 14 சதவிகிதம் உயர்ந்து 46 ரூபாயாக இருந்தன. அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்குகள் 9 சதவிகிதம் உயர்ந்து 274 ரூபாயாக இருந்தது. அதானி துறைமுகம் சிறப்புப் பொருளாதார மண்டலம் தொடர்பான பங்குகள் 8 சதவிகிதம் அதிகரித்து 395 ரூபாயாக உயர்ந்தது. அன்று காலை 10 மணிக்குள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு பங்குச் சந்தைகளிலும் 9.68 மில்லியன் பங்குகள் விலை உயர்ந்து இன்னொரு கைகளுக்குச் சென்றன என.

இவ்வாறு சுமார் ஒரு கோடி பங்குகள் விலை உயர்வின் மூலம் அதானி மற்றும் அம்பானி உட்பட பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரே நாளில் லட்சக்கணக்கான கோடிகள் லாபம் கிடைத்துள்ளன. இந்த பணத்தை வைத்து தான் பாஜக தங்கள் ஆட்சியை நிறுவ பிற கட்சிகளிடம் பேரம் பேசப்போகிறது. நாளை எம்.பிக்கள், மாநில கட்சிகள், குட்டி கட்சிகள் காட்டில் மழை தான்.

fact checkPoliticsTamilnadu

எல்லாமே பொய்… யாரும் நம்பாதீங்க! – கமல் கட்சி அவசர வேண்டுகோள்

கமல் தெரிவித்ததாக கூறி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குறிய போட்டோஷாப் செய்யப்பட்ட படங்கள் பரப்பப்படுவதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த சில தினங்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனி புகைப்படங்களைப் பயன்படுத்தி போட்டோஷாப் செய்து அவரது ட்விட்டர் பதிவு போலவும், தொலைக்காட்சி பிரபலங்கள் சிலருடன் உணவு உண்ணுவது போலவும், சீன பிரதமருக்கு கவிதை எழுதியது போலவும், சமூக வலைத்தளங்கள பரப்பப்பட்டு வருகிறது. இவையனைத்தும் பொய்யான தகவல்கள். கமலின் பிரபலத்தை பயன்படுத்தி, வேண்டுமென்றே விஷம் பிரச்சாரம் செய்கிற சிலர் இது போன்று நாகரீகமற்ற செயல்கள் செய்வது வன்மையாக கண்டிக்கப்படத்தக்கது.

இதுபோன்ற பொய்யான, தவறான, விஷமத்தனமான செய்திகளை பரப்புகிறவர்கள் உடனடியாக நிறுத்திவிட வேண்டும். மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியின் சமூக வலைத்தளம் தொண்டர்கள் இதுபோன்ற விஷமா பிரச்சாரங்கள் மீது விழிப்புடன் இருந்து அவை குறித்த தகவல்களை தலைமைக்கு அனுப்புவது, மேலும் இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான ஆயத்தப் பணிக ள்தங்களை ஈடுபடுத்தி கொள்ளுமாறு வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Educationfact checkTamilnadu

மாணவர்களை மதரீதியில் அணி திரட்டுவதை தடுக்க அரசு உத்தரவிட்டது உண்மையா?

பரவும் செய்தி:

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் இந்து மாணவர் முன்னணி, இந்து இளைஞர் முன்னணி என்ற பெயர்களில் மாணவர்கள் அணிதிரட்டுப்படுவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளதாக உத்தரவு நகலுடன் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

செய்தியின் தன்மை:

பள்ளிக்கல்லூரிகளில் மாணவர்கள் மத, சாதி ரீதியாக அணி திரட்டப்படுவதும், சிறுபான்மை, தலித்துகளுக்கு எதிராக வெறுப்புணர்வு தூண்டப்படுவதும் உண்மை தான். இது குறித்து நமது தளத்தில் கூட

“தமிழக பள்ளிகளில் அரசு ஆதரவுடன் மாணவர்களை மூளைச்சலவை செய்யும் ஆர்.எஸ்.எஸ்!”

என்ற செய்தியை வெளியிட்டோம். ஆனால், இதனை தடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:

-file image

சென்னைஅண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு கூடத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்படவில்லை. பள்ளிக்கல்விதுறை அனுப்பினால் மட்டுமே முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டும். பள்ளிக்கல்வி துறை மூலம் எந்த சுற்றறிக்கை அனுப்பபட்டாலும் முதலமைச்சர் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது” என்றார்.

நியூசு விமர்சனம்:

மாணவர்கள் சாதி, மத ரீதியில் பிரிக்கப்படுவது, சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கயிறுகள் கட்டுவது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. இதுபோன்று பொய்யான செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தும் சமயத்திலாவது அமைச்சர் சற்று சுதாரித்துக்கொண்டு, சாதி, மத ரீதியில் மாணவர்களை அமைப்புகள் பிரித்தால் புகாரளிக்கலாம் என சொல்லி இருக்கலாம். ஆனால், அதை அப்படியே மறுத்துவிட்டு கடந்துவிடுவது என்பது பள்ளிகள் இதுபோன்ற தவறான செயல்கள் நடக்கவே இல்லை என்பதை போல் காட்டுகிறது.

fact checkPoliticsTamilnadu

விவாதத்தில் பொய் சொன்ன சீமான்… மோடியை புகழ்ந்து பிரச்சாரம் செய்த வீடியோ

புதிய தலைமுறை நடத்திய விவாத நிகழ்ச்சியில் நெறியாளர் “மும்பைக்கு சென்று பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டது உண்மையா?” என சீமானிடம் கேட்கிறார்.

அதற்கு சீமான் “பி.ஜே.பி வேட்பாளர்னு சொல்றது பைத்தியக்காரத்தனம். தமிழ்செல்வன் என்னும் தமிழர்… புதுக்கோட்டைகாரரு… அங்க வந்து போட்டியிடறாரு…”

நிருபர் குறுக்கிட்டு, ‘அவர் ஒரு பி.ஜே.பி வேட்பாளர்’

சீமான்: “ஆமா… அவரு ஒரு வேட்பாளர்… அவரு ஈழ விடுதலை ஆதரவாளர்… அவர் அங்க இருக்கிற மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண்…. அவரை என் மேடையில ஏத்தி, அவரு கட்டியிருந்த கொடிய எடுத்துட்டு இவருக்கு வாக்கு செலுத்துங்கன்னு….

நிருபர் குறுக்கிட்டு: “இல்ல அவருடைய கட்சி கொடி உள்ள புகைப்படங்கள் எல்லாம் அங்க இருக்கு. அதையெல்லாம் இன்னைக்கு மறுபதிப்பு செய்து இணையத்தளத்துல எல்லாம் போடறாங்க…”

சீமான்: அது போடலாம். நா வந்து பாரதிய ஜனதா கட்சி… யியியி…

நிருபர் குறுக்கிட்டு: தமிழ் செல்வனுக்கு மட்டுமல்ல… அங்கிருந்த மற்ற பி.ஜே.பி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்காகவும் நீங்கள் எங்கெங்கு போனீர்கள் என்கிற டீட்டெய்ல் எல்லாம் போடறாங்க… உங்க பரப்புரை நடந்திருக்கு….

சீமான்: தமிழ்செல்வனுக்கு வாக்கு கேட்டது உண்மை…. மத்ததெல்லாம் சும்மா சொல்லிட்டிருப்பாங்க…

நிருபர்: நீங்க போன புகைப்படம்லாம் ஆதாரங்கள் இருக்கு.

…… இப்படி போய் கொண்டிருக்கிற நிகழ்ச்சியில….

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு மும்பை பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை சீமான் புகழ்ந்து தள்ளும் வீடியோ வெளியாகி, சீமானின் உண்மை முகத்தை தோலுறித்து காட்டியுள்ளது.

வீடியோ:

1 2 3 4
Page 1 of 4