world

hiddenIndiaworld

“எல்லை மீறி போறீங்க! இனி தடை தான்” – அமித்ஷாவுக்கு சர்வதேச மத சுதந்திர ஆணையம் எச்சரிக்கை

இஸ்லாமியர்கள், இலங்கை தமிழர்கள், வட கிழக்கு மாநிலத்தார்கள், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கி எதிரானது பல தரப்பினராலும் சாடப்பட்டு வரும், திங்கள்கிழமை மக்களவையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்த மசோதா. இதில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வரும் முஸ்லிம் அகதிகளை தவிர்த்து மற்ற மத அகதிகள் 5 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குடியுரிமை திருச்சட்ட மசோதா இஸ்லாமியர்களை அடிமைப்படுத்துவதற்கும், சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கும், மத ரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச மத சுதந்திர ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அமித்ஷா மற்றும் முக்கிய பாஜக தலைவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதிக்க பரிந்துரை செய்ய நேரிடும் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

குஜராத் கலவரத்தை காரணம் காட்டி கடந்த 2005-ம் ஆண்டு இந்த ஆணையம் அளித்த பரிந்துரை காரணமாகவே அமெரிக்காவுக்குள் நுழைய மோடிக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பதிலளித்துள்ள இந்தியா, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மீது தடை விதிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றுள்ளது.

hiddenworld

முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போல், முழு நாடான பாலஸ்தீனையே மேப்பில் மறைத்த கூகுள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான பாலஸ்தீன், அமெரிக்கா, பிரிட்டனின் வளர்ப்புக் குழந்தையான இஸ்ரேலுக்காக கூறுபோடப்பட்டு வருகின்றது. ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவுடன் நாள்தோறும் பாலஸ்தீன் மக்கள் இஸ்ரேல் ராணுவத்தால் துடிதுடிக்க கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை கண்டும் காணாதது போல் பெரும்பான்மையான உலக மீடியாக்களும், உலக நாடுகளும், ஐ.நா. சபையும் மௌனம் காத்து வருகின்றன.

இஸ்ரேல் என்பதை ஒரு நாடாக அன்று இந்தியா போன்ற பல நாடுகள் ஏற்க மறுத்த காலம் போய், பாலஸ்தீனையே இஸ்ரேல் உடையதாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அமெரிக்க நிறுவனமான கூகுள், பாலஸ்தீனையே தனது மேப்பில் இருந்து நீக்கியுள்ளது.

இணையதளத்தில், ஸ்மார்ட்போனில் மேப்பை தேடும் பலரது முதல் தேர்வு கூகுள் மேப் தான். அப்படிப்பட்ட கூகுள் மேப்பில் மத்திய கிழக்கு வளைகுடாவில் லெபனான், ஜோர்டான், இராக், இஸ்ரேல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் பாலஸ்தீன் அங்கு இடம்பெற்வில்லை. மாறாக காசா எல்லையை மட்டும் Gaza strip என குறிப்பிட்டுள்ளனர்.

பாலஸ்தீனம் என டைப் செய்து தேடினால், அது ஏதோ இஸ்ரேலுக்கு உட்பட்ட ஒரு மாகாணத்தை போல் (Palestine country, Isreal) என வருகிறது. சாதாரணமாக நாம் ஒரு மாநிலத்தை கூகுள் மேப்பில் தேடினால் அதன் பெயருடன் நாட்டின் பெயரும் வரும். அதுபோல் பாலஸ்தீனுடன் இஸ்ரேல் பெயரும் வருகிறது.

அப்படியென்றால் பாலஸ்தீனம் இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட ஒரு மாகாணம் என கூகுள் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதனை கண்டித்து பலரும் ப்ளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் கூகுள் மேப்புக்கு ஒரு ஸ்டார் ரேட்டிங்கை வழங்கி #WhereisPalestine என கேட்கத்தொடங்கி உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு காஜா மீது இஸ்ரேல் பல நாள் தொடர் தாக்குதல் நடத்தி கொத்துக்கொத்தான மக்களை கொன்றபோதும் பாலஸ்தீன் கூகுள் மேப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனை எதிர்த்து 2016-ல் #PalestineisHere என்ற ஹேஷ்டேக் டிரெண்டானது. 25 லட்சம் பேர் கூகுள் மேப்பை பாலஸ்தீனில் சேர்க்க ஆன்லைன் பெட்டிஷன் மூலம் கோரினர். பலத்த எதிர்ப்புகள் காரணமாக பாலஸ்தீன் கூகுள் மேப்பில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Indiatechnologyworld

IMO பயன்படுத்தும் இளைஞர்களே உஷார்… உங்களை குறிவைக்கிறது பாலியல் கும்பல்

இதுகுறித்து குவைத்தில் பணிபுரிந்து வரும் சபியுல்லா என்ற பொறியாளர் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ…

Indiaworld

மோடி அரசை வெளுத்து வாங்கிய இங்கிலாந்து எம்.பி..! : அம்பலமானது பாஜக-வின் காஷ்மீர் நாடகம்..!

கடந்த திங்கள்கிழமை ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் காஷ்மீரின் நிலைமையைப் பார்வையிடுவதற்காக இந்தியா வந்தது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால், இவர்களின் வருகைக்குப் பின்னால் பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட செய்தி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய யூனியனில் அங்கமாக உள்ள இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினரும், விடுதலை ஜனநாயகக் கட்சியின் பிரநிதியுமான கிரிஸ் டேவிஸ்ஸின் காஷ்மீர் வருகைக்கான அனுமதி நிராகரிக்கப்பட்டது தான் பரபரப்புக்குக் காரணம்.

இது குறித்து கிரிஸ் டேவிஸ் கூறும்போது கடந்த அக்டோபர் 8-ம் தேதி வெஸ்ட்(WESTT) அமைப்பிடம் இருந்து காஷ்மீரைப் பார்வையிடுவதற்காக வந்த அழைப்பை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், சில நிபந்தனைகளுடன் காஷ்மீரைப் பார்வையிட விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்குள் பாதுகாப்பு அதிகாரிகளோடு அல்லாமல் பத்தரிக்கையாளர்களுடன் செல்ல விரும்புவதாகவும், உண்மை நிலவரத்தை அறிய அங்குள்ள பொது மக்களுடன் தன்னை சகஜமாக பேச அனுமதிக்க வேண்டும் என்றும் நிபந்தனை அவர் வித்தித்துள்ளார்.

இந்த சாதரண நிபந்தனைகளைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் கிரிஸ் டேவிஸின் காஷ்மீர் பயணத்துக்கான அனுமதி மறுக்கப்படுவதாக அக்.10-ம் தேதி காலையில் அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பேசிய கிரிஸ் டேவிஸ் “மறைக்கும் அளவுக்கு காஷ்மீருக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய அரசு அரசியல்வாதிகளையும், பத்திரிக்கையாளர்களையும் காஷ்மீரைச் சேர்ந்த உள்ளூர் மக்களுடன் கலந்துரையாட அனுமதி மறுப்பது ஏன்? என்றும் கேட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ஏராளமான காஷ்மீரிகள் வசிப்பதாகவும் அவர்கள் அனைவரும் காஷ்மீரில் வசிக்கும் தங்களுடைய உறவினர்களுடன் பேசுவதற்கு ஏங்குவதாகவும் அவர் கூறி உள்ளார். இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் காஷ்மீரிகளின் பிரதிநிதியான தனக்கு இந்தியா அனுமதி மறுப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கிரிஸ் டேவிஸ் வருகைக்கான அனுமதி மறுப்பும் அவரது நியாயமான நிபந்தனகள் நிராகரிக்கப்பட்டதும் ஐரோப்பிய கூட்டமைப்பின் எம்.பி.க்களின் காஷ்மீர் வருகை ஒரு நாடகம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முஹம்மது குரேஷி விடுத்த சவாலுக்கு பதில் கூறவே இந்தியா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருப்பதும் பட்டவர்த்தனமாகிவிட்டதாக கருதப்படுகிறது.

கடந்த மாதம் ஐ.நா. சபையில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சர்வதேச குழுவை, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்கத் தயார் என்றும் இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்வதேச குழுக்களை அனுமதிக்க இந்தியா தயாரா” என்றும் கேள்வி எழுப்பினார்.

அப்போது “இது உள்நாட்டு விவகாரம், இதித் அயல்நாடுகள் தலையிடுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், உலக நாடுகள் இந்தியாவின் இறையான்மையை மதிக்க வேண்டும் என்றும் ” பதிலளித்தது இந்தியா தரப்பு.

ஆனால், தற்போது ஐரோப்பிய எம்.பி.க்களின் வெளிநாட்டுக்குழு வருகையால் கடந்த மாதம் வரை பா.ஜ.க. அரசால் உள்நாட்டு விவகாரமாக கருதப்பட்டு வந்த காஷ்மீர் விவகாரம் ஐரோப்பிய எம்.பி.க்கள் தலையிடும் அளவுக்கு சர்வதேச பிரச்சனையாக மாறியது எப்போது என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களையே காஷ்மீருக்குள் அனுமதிக்காத பாதிய ஜனதா கட்சியின் இந்த திடீர் நடவடிக்கை ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் காஷ்மீர் குறித்து சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் எழுப்பிவரும் தொடர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க பா.ஜ.க. அரசு நடத்திய நாடகமோ என எதிர் கட்சிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Comedyfact checkworld

ஐ.எஸ். தலைவருடன் செத்து செத்து விளையாடும் ட்ரம்பும், ஊடகங்களும்… அவர் என்ன UNDERTAKERஆ?

தினத்தந்தி:

சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர்.

அந்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் உள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு பக்கர் அல் பாக்தாதி (வயது 48) செயல்பட்டு வருகிறார்.

அவர்களை கட்டுப்படுத்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் அந்நாட்டு அரசுடன் இணைந்து பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த நிலையில், சிரியாவின் வடமேற்கே இத்லிப்பில், அல் பாக்தாதி பதுங்கி இருக்கிறார் என உளவு அமைப்பின் தகவல் கிடைத்துள்ளது.

இதனை அடுத்து அமெரிக்க ராணுவ படைகள் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலில் ஈடுபட்டு உள்ளன. இதில், அல் பாக்தாதி கொல்லப்பட்டு உள்ளார் என சிரிய அரசு உறுதிப்படுத்தி உள்ளதுடன் இந்த தகவலை ஈரான் அரசுக்கும் தெரிவித்து உள்ளது.

நியூசு பின்னணி:

WWE இல் வரும் UNTERTAKER இறந்து போய் மீண்டும் வருவார், அவருக்கு 7 உயிர்கள் உள்ளன என்று சிறுவயதில் நாம் பேசி இருப்போம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு நெருக்கமான அந்த WWE நிறுவனம் உலக மக்கள் பலரை UNTERTAKER கட்டுக்கதையை வைத்து முட்டாளாக்கியது. தற்போது அதே அமெரிக்க அதிபர் ட்ராம்பும், அவரது நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேலும் அவர்களால் நடத்தப்படும் ஊடகங்களும் பாக்தாதியை UNTERTAKER போல் பல முறை இறந்துவிட்டார் என செய்திகள் வெளியிடுவார்கள். ஆனால், அவர் மீண்டும் ஏதாவது ஒரு வீடியோவில் பேசுவார். தற்போதும் அதே போன்று 6வது முறையாக அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இன்று செய்தி வெளியிட்ட இதே தினத்தந்தி கடந்த 2017-ம் ஆண்டு பாக்தாதி இறந்துவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. இது போல் பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. பிரதமர் மோடி எப்படி தனக்கு நெருக்கடியோ அல்லது அரசு மீது அதிகம் விமர்சனம் எழுகிறதோ, அப்போதெல்லாம் பயங்கரவாதம், பாகிஸ்தான் பற்றி பேசுவார் என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கும்.

அதே போல், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது அரசு மீது நெருக்கடி ஏற்படும்போதெல்லாம் ஐ.எஸ்.தலைவர் இறந்துவிட்டதாக கூறிவந்துள்ளார். அந்த வகையில் தற்போதும் அதை செய்துள்ளார். ஆனால், இதுகுறித்து கேள்வி எழுப்ப வேண்டிய ஊடகங்களும் பல முறை அதே செய்தியை மாற்றி மாற்றி வெளியிட்டு தங்கள் மீதுள்ள கடமையை மறந்து மக்களை குழப்பும் வேலையை செய்கிறார்கள்.

Economyworld

அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடு – அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம்

உலகில் அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதன் முதலாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.

உலகின் முதல் 10 சதவீத பணக்காரர்களில் 100 மில்லியன் மக்கள் சீனர்கள் என்றும் 99 மில்லியன் பேர் அமெரிக்கர்கள் என்றும் “தி பேங்ஸ் ஆனுவல் சர்வே (The Banks annual Survey)” பட்டியலிட்டு உள்ளது.

உலகின் முதல் 10 சதவீத பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற ஒரு தனி நபரின் சேமிப்பில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 430 டாலர்கள் பணம் இருக்க வேண்டும். இதன் இந்திய மதிப்பு 77 லட்சத்து 41 ஆயிரத்து 78 ரூபாய் ஆகும்.

கடந்த 12 மாதங்களாக சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து அதிகமான வரிகளை விதித்த போதிலும் அவை அனைத்தையும் சமாளித்து தன் நாட்டு மக்களின் சொத்து மதிப்பை 3.8 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளது சீனா.

அதே நேரத்தில் “சூப்பர் ரிச்” என்று அழைக்கப்படும் மிக அதிக பணம் படைத்தவர்களில் 40 சதவீதம் பேர் அமெரிக்கர்களாக உள்ளனர்.

இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை இன்றி அல்லல்படும் சூழலில், அமெரிக்காவில் உள்ள வயது வந்தோர்களில் 14 பேரில் ஒருவர் டாலர் மில்லியனராக இருக்கிறார் என்ற செய்தியும் வெளியாகி உள்ளது.

இதே போல் சீனாவில் 1.1 மில்லியன் வயது வந்தோர் மில்லியனராக வளம் வந்து கொண்டு உள்ளனராம்.

அதே நேரத்தில், பிரக்ஸிட் திட்டத்தில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் மற்றும் பின்னடைவுகளால் இங்கிலாந்து நாட்டில் உள்ள 27,000 பேர் தங்களுடைய மில்லியனர் அந்தஸ்தை இழந்து உள்ளனர். இதனால் அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இங்கிலாந்து ஜப்பானுக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் உள்ளது.

இங்கிலாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரிய எண்ணிக்கை வேறுபாடு இல்லை என்பதால் பிரெக்ஸிட் திட்டம் நிறைவேறிய பிறகு இங்கிலாந்து 3-வது இடத்தைப் பிடித்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து 1.1 மில்லியன் இளைஞர்கள் புதிதாக மில்லியனராக உருவெடுத்துள்ளார்கள். இதன் மூலம் உலக மில்லியனர்களின் எண்ணிக்கை 46.8 மில்லியனாக அதிகரித்து உள்ளது. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 158.3 டிரில்லியன் டாலர்களாகும்.

Source: The Guardian

தமிழாக்கம்: நியூசு.இன்

Politicsworld

மீண்டும் கனடாவின் பிரதமராவாரா ஜஸ்டின் ட்ரூடோ? முடிவு இந்தியரின் கையில்…

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல்ஸ் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களை புகழ்ந்து பேசியும், பொங்கல் வாழ்த்துக்களை சொல்லியும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார். இளம் வயது பிரதமரான இவருக்கு தமிழகத்தில் பிரதமர் மோடியை காட்டிலும் செல்வாக்கு அதிகம் உள்ளது.

தொடக்கத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த ஜஸ்டீன் ட்ரூடோ, ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தால் கடும் எதிர்ப்பை சந்தித்தார். இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வாக்கு எண்ணும் பணி முடிந்துள்ள நிலையில், ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களை பிடித்துள்ளது. அடுத்ததாக பிளாக் கியூபிகாய்ஸ் கட்சி 32 சீட்டுகளையும், இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சி 24 சீட்டுகளையும் பிடித்துள்ளன. க்ரீன் என்ற கட்சி 3 சீட்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.

இந்த தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி பெற்றுவிட்டாலும் ஆட்சியமைக்க 170 இடங்கள் தேவைப்படுகிறது. இதனால், 24 சீட்டுகளை வென்றுள்ள இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியின் ஆதரவை ஜஸ்டின் ட்ரூடோ நாடியுள்ளார். குடியேற்றுக்கொள்கைக்கு எதிரான, அகதிகளுக்கு எதிரான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்கக்கூடாது என்பதால் ஜக்மீத் சிங்கும் அகதிகள், பன்முக கலாச்சாரத்துக்கு ஆதரவாக திகழும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கே ஆதரவு தெரிவிப்பார் எனக்கூறப்படுகிறது.

BackgroundPoliticsVideoworld

சு.சாமி முதல் இஸ்ரேல் வரை – ராஜீவ் கொலையின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் “THE ALTERNATE”

ராஜீவ் கொலைக்கு தமிழர்கள் காரணமில்லை எனக்கூறி வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொன்றோம் எனப்பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானின் இந்த முரண்பட்ட கருத்துக்களால் அவரது கட்சியினரும், பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த நிலையில், ராஜீவ் கொலையின் பின்னணியில் விடுதலை புலிகள் உள்ளதா? கொலைக்கு பின்னணியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ, இஸ்ரேலின் மொசாத், இவர்களுடன் சுப்ரமணிய சாமிக்கு உள்ள தொடர்பு என பல விசயங்கள் குறித்து விரிவான வீடியோவை வெளியிட்டுள்ளது “தி ஆல்டர்நேட்” என்ற யூடியூப் சேனல். 40 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் ஒரு நொடி கூட தொய்வு ஏற்படவில்லை. நேரம் செல்ல நமக்கும் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. ஒரு திரில்லர் கதையை படிப்பது போல் ராஜீவ் கொலை மர்மங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்து சுவாரசியத்தை அதிகரிக்கிறார் நெறியாளர். அவசியம் பாருங்கள்…

Politicsworld

கனடா பிரதமர் தேர்தலில் தமிழர்களுக்கு பிடித்த ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி

கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல்ஸ் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி, புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ள போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆதரவை பெற்றவரான ஜஸ்டின் ட்ரூடோ, தமிழர்களை புகழ்ந்து பேசியும், பொங்கல் வாழ்த்துக்களை சொல்லியும் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தார். இளம் வயது பிரதமரான இவருக்கு தமிழகத்தில் பிரதமர் மோடியை காட்டிலும் செல்வாக்கு அதிகம் உள்ளது.

தொடக்கத்தில் கனடா மக்களிடம் பெரும் செல்வாக்கை பெற்றிருந்த ஜஸ்டீன் ட்ரூடோ, ஆனால் தனியார் நிறுவனம் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அவர் தடை விதித்தால் கடும் எதிர்ப்பை சந்தித்தார். இந்த நிலையில் தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான வாக்கு எண்ணும் பணி முடிந்துள்ள நிலையில், ஜஸ்டீன் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றி, முன்னிலையுடன் சேர்த்து 144 இடங்களிலும், எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி, முன்னிலையுடன் சேர்த்து 117 இடங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.

இதன் மூலம் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றி உறுதியாகிவிட்டது. ஆனால், ஆட்சியமைக்க 170 இடங்கள் தேவை என்பதால் அடுத்தடுத்த இடங்களில் உள்ள இந்திய வம்சாவளியான ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயக கட்சியையும், ப்ளாக் கட்சியையும், கிரீன் கட்சியையும், சுயேட்சையும் ஜஸ்டின் நாட வேண்டியுள்ளது.

ComedyIndiaworld

7 அடுக்கு பாதுகாப்பா? அட போங்கப்பா..! – சீன அதிபர்- மோடி சந்திப்பில் ஹாயாக உள்ளே நுழைந்த நாய்..!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங் – பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிடுவதற்காக வருகை தந்தனர்.

 

இந்த நிலையில் முதற்கட்டமாக வந்த பிரதமர் மோடி தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையுடன் வருகை தந்தார்.

தற்பொழுது மாமல்லபுரத்தில் உள்ள சீன – பல்லவ வரலாற்றை உணர்த்தும் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர்.

அப்போது சிற்பங்களின் தொன்மை குறித்து சீன அதிபரிடம் பிரதமர் மோடி விளக்கினார்.

இந்த நிலையில் இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் பார்வையிடும்போது ஒரு நாய் ஒன்று சாகவாசமாக உள்ளே நுழைந்து சுற்றி திரிந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிவருகிறது. 7 அடுக்குகளையும் மீறி சாதாரண நாய் எப்படி உள்ளே நுழைந்தது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

1 2 3 6
Page 1 of 6