weather

Tamilnaduweather

கஜா போன்ற புயல் தாக்கினால் என்ன செய்வது? விரிவான அறிக்கை தாக்கல்

கஜா புயுல் பாதிக்கப்பட்டு ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புயல் பாதிப்பு குறித்த ஆய்வறிக்கையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மத்திய அரசிடம் வழங்கியுள்ளது. இந்த அறிக்கையின் நகலை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கடந்த 19 ம் தேதி வழங்கினார்.

இதில் கஜா புயலுக்கு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் பாதிப்பு ஏற்பட்டபின்பு எடுத்த நடவடிக்கைகள் விளக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் கற்றுக்கொண்ட பாடங்கள் என்ன என்றும், எதிர்காலத்தில் புயலுக்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளையும் வழங்கியுள்ளது.

தமிழகத்தை தாக்கிய பல்வேறு பேரிடர்களை அடிப்படையாக வைத்து, உடனே ஆபத்து ஏற்படக்கூடிய இடங்கள், மிகவும் அபாயகரமான இடங்கள் மற்றும் பாதிக்கப்படும் இடங்கள் எவை என்று தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. ஆனால், மாவட்ட ரீதியாக இது குறித்த அறிக்கை இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதாகவும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் இந்த அறிக்கை தயாரிப்பதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு ஏற்படும் இடங்கள் மற்றும் புயல் தாக்கிய பின்பு மக்களை மீட்டு பாதுகாப்பாக வைப்பதற்கான இடங்கள் என்று முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கை தயார் செய்து வைத்து இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடிக்கடி புயல் பாதிக்கப்படும் கடலோர பகுதிகளை கண்டறிந்து, புயல் கரையை கடக்கும் போது வேகத்தை குறைக்கும் வகையில் இயற்கை அரணாக மரங்கள் நடப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலில் 3,31,772 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. வரும் காலங்களில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் புதைவிட மின் கம்பிகள் பதிக்கப்படவேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை பகுதியில் குடியிருப்புகள் சேதம் மற்றும் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுவதை தடுக்கம் வகையில், கடற்கரை மண்டலத்தை முறைப்படுத்துதல் என்பதின் கீழ் (Enacting Coastal Zone Regulation) சட்டத்திற்கு புறம்பாக கட்டிடங்கள் கட்டுவதை முறைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பு குறித்து முழுமையான விபரங்கள் அடங்கிய டேட்டா பேஸ் (Data base) தயார் செய்து வைத்திருக்கவேண்டும்.

புயல் பாதிக்கப்பட்டால் எந்தெந்த அரசு துறைகள் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பதை கருத்தில் கொண்டு, புயல் பாதிப்பின் போது யார் யாருக்கு எந்தெந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதை உணரும் வகையில் ஆய்வுக்கூட்டங்கள், பயிற்சி வகுப்புகள் நடத்தவேண்டும். அப்போது தான் காலதாமதத்தை தவிர்த்து மீட்பு பணிகளை விரைவாக செய்யமுடியும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு பரிந்துரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்துள்ளது.

Tamilnaduweather

மழை வரும், ஆனா வராது

அந்தமான் அருகே நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு – பருவமழை காலகட்டத்தில் வீசும் கிழக்கத்திய காற்றின் சாதக போக்கின் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகே தமிழகத்திற்கான மழைக்கான வாய்ப்பு குறித்து கூற முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காலகட்டத்தில் கிழக்கு திசையிலிருந்து காற்று வீசும் காற்றின் சாதக போக்கின் காரணமாக வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான
மழைக்கு வாய்ப்பு.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் 3செ.மீ, திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, விழுப்புரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் 2செ.மீ மழை பதிவாகி உள்ளது.

அரபிக்கடலில் நிலைகொண்டிருக்கும் மகா தீவிர புயலானது குஜராத் மாநிலம் வேரவேல் பகுதியிலிருந்து தென்மேற்கே 540 கிலோமீட்டர் தொலைவிலும், டையூவில் இருந்து தென்மேற்கு 550 கிலோ மீட்டர் தொலைவிலும் தற்போது நிலைகொண்டுள்ளது, இந்த புயலால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 25டிகிரி செல்சியஸ் பதிவாகும்.

fact checkMedia CriticsTamilnaduweather

தமிழகத்துக்கு நாளை “RED ALERT” எச்சரிக்கை விடுக்கப்பட்டது உண்மையா?

தமிழகத்துக்கு நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

பாலிமர் டிவி செய்தி:

தந்தி டிவி செய்தி:

தினமலர் இணையதளம்:

ஊடகங்களில் வெளியான இந்த செய்தியின் உண்மை தண்மை குறித்து ஆராய இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையை நாம் வாசித்தபோது “ரெட் அலர்ட்” என ஊடகங்களில் வெளியான தவறானது என்பது தெரியவந்தது. வானிலை மைய அறிக்கையில் தமிழகத்தில் அதிக கனமழை பெய்வதை எச்சரிக்கும் விதமாக சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு கீழே சிவப்பு நிறத்தை ரெட் அலர்ட் என எடுத்துக்கொள்ளக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தை வைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், ஊடகங்களோ செய்திகளை முந்தித்தரும் போட்டியில், அறிக்கையை முழுமையாக வாசிக்காமல் ரெட் அலர்ட் என மக்களை அச்சமூட்டி வருகின்றனர்.

Tamilnaduweather

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தில் வானிலை தென்மண்டல துறை தலைவர் பாலசந்திரன் செய்தியாளர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது “தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல கிழடுக்கில் கிழக்கு திசை காற்று வீச தொடங்கி உள்ளது. தென்மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வரும் நிலையில்
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ஆம் தேதியை ஒட்டி தொடங்க வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும்.

வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.” என்றார்.

hiddenTamilnaduweather

வெயிலின் தாக்கத்தால் சேலத்தை சேர்ந்த பெண் உயிரிழப்பு

சேலம், கொண்டலாம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் உறவினர்களுடன் வட மாநித்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்றிருந்த போது, பீகாரில் நிலவும் கடும் வெயிலின் காரணமாக உடல்நிலை பாதித்து நேற்று மரணம் அடைந்தார். சடலத்தை சேலம் எடுத்து வர முடியாமல் தவித்த உறவினர்கள், சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு, சடலத்தை கொண்டு வர உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து காத்திருந்தனர்.

சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் வசிக்கும் ஜவுளி வியாபாரி மல்லிகார்ஜுனன் மற்றும் அவருடைய மனைவி கலைச்செல்வி ஆகியோர் உறவினர்கள் 40 பேருடன் வட மாநிலத்திற்கு ஆன்மீக சுற்றுலா கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்றார். பீகார் மாநிலம் கயா விற்கு சுற்றுலா சென்றபோது மல்லிகார்ஜுனர் மனைவி கலைச்செல்வி அங்கு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கலைச்செல்வியின் கணவர் மல்லிகார்ஜுனா மற்றும் சுற்றுலா நண்பர்கள் கலைச்செல்வியின் உடலை சேலம் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். கயா-விலிருந்து உடலை வாரணாசிக்கு எடுத்துச்சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சேலம் கொண்டு வர முயன்ற போது, விமான நிலைய அதிகாரிகள், கலைச்செல்வியின் இறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டுமே விமானத்திற்குள் சடலம் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும் என உறுதியோடு கூறிவிட்டனர்.

இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு இறப்பு சான்றிதழ் பெறுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று இன்று மாலை கலைச்செல்வியின் உறவினர்கள் சுமார் 100 பேர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் இங்கும் ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாத்தால் அனைவரும் காத்திருப்பில் ஈடுபட்டனர். இதனை அடுத்து சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் ஈஸ்வரன் மற்றும் சேலம் தாசில்தார் மாதேஸ்வரன் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உடலைக் சேலம் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர்.

இதனையடுத்து உறவினர்கள் அனைவரும் கலைந்து சென்றனர் . சேலத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலாக்காக வட மாநிலம் சென்றவர்களில், 45 வயது பெண் கலைச்செல்வி பீகாரில் நிலவும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

articleIndiaMedia Criticsweather

இந்தியாவில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்… கண்டுகொள்ளாமல் கிரிக்கெட் பார்த்த மீடியாக்கள்

இந்தியா முழுவதும் ஒரு இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக வட மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் வெயின் தன்மை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் உயிரிழப்பை தவிர்க்க, அரபு நாடுகளை போல் பகல் நேரங்கள் மக்கள் வெளியில் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், இதனை பேரிடராகவே அரசும், ஊடகங்களும் கருதவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது.

ஆம், தண்ணீருக்காக நடைபெறும் போராட்டங்கள், வட மாநில வெயில் உயிரிழப்புகள் சாதாரண வரிச்செய்தியாகவும், இந்தியா பாகிஸ்தாந் போட்டியின் சின்ன சின்ன நகர்வுகள், நடிகர் சங்கத்தேர்தல் தொடர்பான சின்ன சின்ன நிகழ்வுகள் ப்ரேக்கிங் செய்திகளாகவும் வெளியிடப்படுகின்றன. இதற்கு மீடியா மட்டுமல்ல மக்களும் காரணம். மக்கள் அதிகம் பார்ப்பதை தான் மீடியா காட்டுகிறது. நேற்று முந்தினம் தகிக்கும் தமிழகம் என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் ட்ரெண்ட் செய்த மக்கள் நேற்று முழுவதும் இந்தியா பாகிஸ்தான் ஹேஷ்டேக்கை தான் ட்ரெண்ட் செய்தனர். இதிலேயே மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள நம்மால் முடியும்.

Tamilnaduweather

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் பெரும்பாலும் உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், கரூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அதன் மேகம், காற்றின் திசையை பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கும் நகரும் நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnaduweather

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

ஃபோனி புயல் இன்று காலை ஏழரை மணி அளவில் ஒடிசா மாநிலத்தில் கோபால்பூர் சந்த் பாலி இடையே கரையை கடந்தது. எனினும் இதன் எதிரொலியாக வங்கக்கடலில் ஒடிசா மாநில கரையோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே இப்பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும். பல இடங்களில் அனல் காற்று வீசக்கூடும். ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை பகலில் 42 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Indiaweather

ஆந்திராவை சூரையாடிய ஃபோனி புயல்… பல வீடுகள் இடிந்து விழுந்தன

File: Photo captured during Titli Storm

வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஃபோனி புயல் இன்று மதியம் ஒடிசா மாநிலத்தில் பூரி அருகே உள்ள கோபாலபூர், சந்த்பல்லி அருகே கரையை கடந்தது. அந்தப் பகுதியில் 200 முதல் 240 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல்லாயிரக்கணக்கான மரங்கள் செடி கொடிகள் சாய்ந்துகொண்டு மின் கம்பங்களும் சேதமானது பல வீடுகள் இடிந்து விழுந்தன. 4 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டு 11 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாநில அரசின் சார்பில் தங்க வைக்கப்பட்டனர்.

பூரி அருகே கரையை கடந்த பானிப்புயல் பங்களாதேசை நோக்கி சென்று வருகிறது. பங்களாதேஷ் செல்வதற்குள் புயல் வலுவிழக்கக் கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஆந்திராவில் பானி புயல் காரணமாக ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் ஒன்றான ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 11 மண்டலங்களில் மனிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய சூறை காற்றுடன் கனமழை நேற்று இரவு முழுவதும் பெய்தது.

ஸ்ரீகாகுளத்தில் தற்போது வீசும் மணிக்கு 20 முதல் 30 கிலோ மீட்டர் வேகத்துடன் கூடிய சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றின் வேகத்திற்கு விளம்பர பலகைகள், வீடுகளின் மேற் கூறைகள் ஆகியவை கடுமையாக சேதம் அடைந்துள்ளன.
இந்த நிலையில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கருதப்படும் 11 மண்டலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றிய அதிகாரிகள் முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.
மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலான்மை குழுவினர் ஸ்ரீகாகுளத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tamilnaduweather

சென்னையில் அனல் காற்று… வியர்வை கடலில் மக்கள்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களாகவே சென்னையில் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் சென்னையில் பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயில் காய்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்பு வரக்கூடிய வெயிலை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக சாலையோரங்கள் இருக்கக்கூடிய பழ கடைகள் மற்றும் ஜூஸ் நிலையங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் படையெடுத்து வருவதை காணமுடிகிறது.

1 2
Page 1 of 2